Connect with us

Tamil Cinema News

‘100’ எனக்கு முக்கியமான படம் – அதர்வா

Published

on

‘100’ எனக்கு முக்கியமான படம் - அதர்வா

ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிக்க, அதர்வா, ஹன்சிகா மோத்வானி நடிப்பில், சாம் ஆண்டன் இயக்கியிருக்கும் படம் ‘100’.

அதர்வா முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். மே 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தை குரு ஸ்ரீ மிஷ்ரி எண்டர்பிரைசஸ் சார்பில் தமிழகம் முழுக்க வெளியிடுகிறார் சிஎஸ் பதம்சந்த் ஜெயின். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த் பேசுகையில்,

“சாம் ஆண்டன் உடன் நான் இணையும் மூன்றாவது படம் 100. முந்தைய இரண்டு படங்களும் காமெடி படங்கள். இந்த படம் கதை எழுதப்படும் போதே மிகவும் சுவாரசியமாக இருந்தது. சீட்டின் நுனிக்கு வரவைக்கும் ஒரு திரில்லர் படம். திரைக்கதை மிகச் சிறப்பாக இருக்கும்,” என்றார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசும் போது,

“விக்ரம் வேதா, அடங்க மறு, 100, அயோக்யா” என அடுத்தடுத்து போலீஸ் படங்களாக நான் இசையமைத்து வருகிறேன். வெளியில் இருந்து பார்த்தால் எல்லா படங்களும் ஒரே மாதிரியாகத் தோன்றும். ஆனால் திரைக்கதையில் ஒவ்வொன்றும் வித்தியாசமானது. ஒரு திரைக்கதை தான் பின்னணி இசையைக் கோரும். எனக்கு காமெடி படங்கள் பண்ணனும்னு ஆசை, சாம் எனக்கு கதை சொல்ல வந்தபோது எனக்கு ஒரு நல்ல காமெடி படம் மாட்டிகிச்சு என சந்தோஷப்பட்டேன். ஆனால் இதுவும் ஒரு போலீஸ் படம், சீரியஸ் படமாகவே இருந்தது. அவர் காமெடியை விட திரில்லர் படங்களை தான் மிகச் சிறப்பாக எடுக்கிறார். அவர் எனக்கு மிகவும் சுதந்திரம் கொடுத்தார். அது தான் என் வேலையை மிகச் சிறப்பாகச் செய்ய ஊக்கப்படுத்தியது.

அதர்வா உடல் உழைப்பு அபாரம். சண்டைக்காட்சிகளில் கலக்கி இருக்கிறார். இது சமூகத்தில் தற்போது நடக்கிற விஷயங்களை பேசும், கண்டிப்பாக இன்றைய காலகட்டத்துக்கு தேவையான ஒரு படம். இந்தப் படத்தின் பாடல்கள் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நிச்சயம் அனைவருக்கும் பிடித்த ஒரு படமாக அமையும்,” என்றார்.

இயக்குனர் சாம் ஆண்டன் பேசுகையில்,

“அதர்வா சாரிடம் கதை சொல்ல போன போது என்னை நம்பி சீரியஸான கதையில் நடிக்க ஒப்புக் கொண்டார். கதைக்கு ஏற்ற வகையில் ஒரு மீட்டரில், சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். தயாரிப்பாளர் மகேஷ் என் கல்லூரி சீனியர். அவர் எனக்கு இந்த படத்தை கொடுத்தார். எந்த தயக்கமும் இல்லாமல் கதைக்கு என்ன தேவையோ எல்லாவற்றையும் கொடுத்தார். அவரும் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மிக நன்றாகவே நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தான் திரில்லர் படம் பண்ணுங்க என ஆரம்பத்திலேயே என்னை ஊக்கப்படுத்தினார். பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது, அதைப் பற்றிப் பேசும் ஒரு படமாக இந்தப் படம் இருக்கும்,” என்றார்.

தயாரிப்பாளர் மகேஷ் பேசும் போது,

“ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஏதாவது ஒரு படம் புதிய பரிமாணத்தைக் கொடுக்கும். அந்த வகையில் அதர்வாவுக்கு இது அடுத்த கட்ட படமாக இருக்கும். கமர்ஷியல் போலீஸ் படத்துக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இதில் இருக்கும். அவெஞ்சர்ஸ், காஞ்சனா 3 போன்ற படங்கள் மிகச்சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அதனால்தான் ஒரு வாரம் படத்தைத் தள்ளி ரிலீஸ் செய்யலாம் என நானும், வினியோகஸ்தர்களும் முடிவெடுத்தோம்,” என்றார்.

அதர்வா பேசுகையில்,

“தமிழ் சினிமாவில் நிறைய போலீஸ் படங்கள் வருகின்றன, அதில் இருந்து இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இது காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் பின்னணியில் நடக்கும் ஒரு கதை. இந்த மாதிரி ஒரு படத்தில் நடித்தது எனக்குப் பெருமையான விஷயம். சாம் ஆண்டன் ஆக்‌ஷன் படங்களை மிகச்சிறப்பாக எடுக்கிறார். அவர் தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களை இயக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். சமூகத்தில் சமகாலத்தில் நடக்கும் விஷயங்களை இந்தப் படம் பேசும். நிச்சயம் இது என் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும்,” என்றார்.

Tamil Cinema News

நம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்

Published

on

நம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்

‘காலா’ படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அதிகம் தெரிந்த நடிகையானவர் சாக்ஷி அகர்வால்.

அடுத்து ராய் லட்சுமி நடிப்பில் தயாராகி உள்ள ‘சின்ட்ரெல்லா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்கடுத்து எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்கும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்தை இயக்கி அனீஸ் இயக்கவிருக்கும் புதிய படத்திலும் சாக்ஷி அகர்வால் நாயகியாக நடிக்கிறார்.

தான் தற்போது நடித்து வரும் படங்கள் பற்றி சாக்ஷி அகர்வால் கூறுகையில்,

“ரஜினி சார் சினிமாவில் பெரிய அடையாளம் அவர் படம் மூலமாக எனக்கு ஒரு அடையாளம் கிடைத்தது மகிழ்ச்சியானது. இப்போது கதையின் நாயகியாக சின்ட்ரெல்லா படத்தில் ராய்லட்சுமியோடு இணைந்து நடித்தது நல்ல அனுபவம். நிச்சயம் அப்படம் என் கரியரில் மைல்கல்லாக அமையும்.

எழில் சார் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் உடன் நடித்து வரும் ஹாரர் கலந்த காமெடி படமும் எனக்கு வேறொரு தளத்தை அமைத்துத் தரும். நான் அடிப்படையில் தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் எழில் சார் படத்தின் ஆடிஷனில் கேமராமேன் யூ.கே செந்தில் என்னை “இவர் தான் நம் படத்திற்குச் சரியாக இருப்பார்” என்று அழுத்தமாகச் சொன்னார்.

எழில் சார் நம்மிடம் நமக்கே தெரியாமல் இருக்கும் திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தச் செய்துவிடுவார். அவரோடு வேலை செய்வது ஆகப் பெரும் சந்தோஷம். அதேபோல் ஜீவி பிரகாஷ் போல ஒரு ஸ்வீட் மனிதரைப் பார்க்கவே முடியாது. படத்தில் நமக்கான இடத்தை அதிகப்படுத்தி அழகு பார்ப்பார். அவரோடு நடிக்கும் எல்லா நடிகைகளுக்கும் மீண்டும் அவரோடு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும்.

இயக்குநர் அனீஸ் சாரின் திருமணம் எனும் நிக்காஹ் படம் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாத அழகியல் சினிமா. அவரின் அடுத்தப்படத்தில் நான் ஹீரோயினாக நடிக்க இருப்பது மகிழ்ச்சி. உணர்வுகளை மிகச்சரியாக வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தரும் படங்களுக்காக காத்திருக்கிறேன்.

நிச்சயம் இந்த ஆண்டு எனக்கு தமிழ்சினிமாவில் முக்கியமான ஆண்டாக இருக்கும். எழில் சார் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் பாவாடை, தாவணி கட்டிக்கொண்டு நெல்லைத் தமிழில் பேசி நடித்து வருகிறேன்,” என்கிறார்.

சாக்ஷி அகர்வால் நெல்லைத் தமிழில் பேசி நடிப்பதைப் பார்த்து படக்குழுவினரே பாராட்டினார்களாம்.

Continue Reading

Tamil Cinema News

‘களவாணி 2’ படத்தின் வில்லன் இவர்தான்….

Published

on

‘களவாணி 2’ படத்தின் வில்லன் இவர்தான்....

சற்குணம் இயக்கத்தில், விமல், ஓவியா மற்றும் பலர் நடிக்கும் ‘களவாணி 2’ படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் அரசியல் அதிரடி வில்லனாக துரை சுதாகர் நடிக்கிறார். தன்னை பப்ளிக் ஸ்டார் என அடையாளப்படுத்திக் கொண்டு வரும் இவர் இந்தப் படம் தனக்கு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கிறார்.

சிறிய படங்களில் ஹீரேவாக நடித்த துரை சுதாகர் சினிமாவில் நடிகராக நிலைக்க வேண்டும் என்பதற்காகக் காத்திருந்தார். அப்போதுதான் ‘களவாணி 2’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

இந்தப் படத்தில் நடித்த பிறகு அவருக்கு புதிய வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறதாம்.

“வில்லன், ஹீரோ, குணச்சித்திர வேடமாகட்டும், சிறியதோ, பெறியதோ எந்த வேடமாக இருந்தாலும் மக்கள் மனதில் நிற்கும்படியான வேடமாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். திடீரென்று தோன்றி திடீரென்று மறையும் நட்சத்திரமாக இல்லாமல், மக்கள் மத்தியில் தொடர்ந்து ஜொலித்துக் கொண்டிருக்கும் மக்களின் நட்சத்திரமாக இருப்பதற்காகவே சினிமாவில் தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறேன்,” என்கிறார் துரை சுதாகர்.

‘களவாணி 2’ படத்திற்குப் பிறகு முன்னணி வில்லன் நடிகர்கள் வரிசையில் தானும் நிச்சயம் இடம் பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.

Continue Reading

Tamil Cinema News

‘ஹவுஸ் ஓனர்’ படத்தை வாங்கிய எஜிஎஸ் சினிமாஸ்

Published

on

ஹவுஸ் ஓனர் படத்தை வாங்கிய எஜிஎஸ் சினிமாஸ்

‘ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி’ ஆகிய படங்களை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அடுத்து இயக்கியுள்ள படம் ‘ஹவுஸ் ஓனர்’.

ஜுன் 21ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை எஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது.

இது பற்றி லட்சமி ராமகிருஷ்ணன் கூறுகையில்,

“இதுபோன்ற நிகழ்வுகள் உண்மையில் மிகவும் அரிதாகவே நடக்கின்றன. உண்மையில் பெரிய படங்களுக்கு தான் இந்த மாதிரி விஷயங்கள் நடக்கும். பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், வினியோகஸ்தர்கள் அவற்றுக்குதான் முன்னுரிமை தருவார்கள்.

ஏஜிஎஸ் சினிமாஸ் எங்கள் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருப்பது எனக்கு மிகப் பெரிய ஆச்சர்யம். தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட்டில் படங்கள் தயாரிப்பது, பெரிய படங்களை ரிலீஸ் செய்வதற்கு பெயர் போன ஏஜிஎஸ், எங்களை போன்ற சிறிய பட்ஜெட்டில் உருவான படத்தை ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டியிருப்பது உற்சாகத்தை அளிக்கிறது.

இது எங்கள் குழுவினருக்கு மட்டும் கிடைத்த வெற்றி என்று நான் கூற விரும்பவில்லை, நல்ல கதைகளை கொண்ட படங்களுக்கு பெரிய கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது என்று தான் கூறுவேன்.

ஏஜிஎஸ் சினிமாஸ் படத்தின் வெளியீட்டுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருப்பதால், மிகப்பெரிய அளவில் படம் மக்களை சென்று சேரும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இந்தப் படம் மனித உறவுகளைப் பற்றி பேசுவதோடு, ஒரு அழகான காதல் கதையையும் கொண்டிருக்கிறது. எளிய மற்றும் யதார்த்தமான படமான இதை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என நான் நம்புகிறேன்” என்றார்.

‘பசங்க‘ கிஷோர், லவ்லின் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பில், ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!