Connect with us

Tamil Cinema News

‘போதை ஏறி புத்தி மாறி’ – திடுக்கிடும் திரில்லர்

Published

on

bodhai yeri budhi maari

ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கே.ஆர். சந்துரு இயக்கும் படம் ‘போதை ஏறி புத்தி மாறி’.

எந்தவொரு மனிதனின் வாழ்விலும் ‘If & But’ போன்ற வார்த்தைகள் முக்கியத்துவம் வகிப்பது போல, போதை மயக்கமும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அது பல மனிதர்களின் நம்பிக்கைகளையும் கற்பனைகளையும் திசை திருப்புகிறது. இந்த மாதிரி விஷயங்களை தீவிரமாக பேசும் ஒரு படம் தான் ‘போதை ஏறி புத்தி மாறி’.

குறும்படங்களில் நாயகனாக நடித்த தீரஜ் இந்த படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமாகிறார்.

“படத்தின் தலைப்பே மொத்த படத்தை பற்றியும் சொல்லும். சீட்டின் நுனிக்கே வர வைக்கும் பல திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்ட ஒரு திரில்லர் படமாக இது இருக்கும்.

தீரஜ் என்னுடைய நல்ல நண்பர். நாங்கள் குறும்படங்களில் ஒன்றாக பணியாற்றினோம். அதில் இருந்து வந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவு எங்களுக்குள் இருந்தது. அவர் ஒரு கடின உழைப்பாளி, இயக்குனர்களின் நடிகர். அனைத்து சூழ்நிலைகளிலும் இயக்குனர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பவர். கார்த்திக் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தினார், அதை சிறப்பாகவும் செய்தார்.

இந்த படத்தில் பிரதைனி சர்வா என்ற மாடல், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நான் ஸ்கிரிப்டை விவரிக்கும் போதே, பிருந்தாவாக நடிக்க ஒப்புக்கொண்டார். முன்னதாக அவருக்கு வந்த பல வாய்ப்புகளை அவர் மறுத்துவிட்டார். ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த படத்தின் கதாபாத்திரத்தமும், கருத்தியலும் அவரை ஈர்க்க, உடனடியாக அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அனைத்து நடிகர்களும் இணையும் இரண்டாவது மற்றும் இறுதிக் கட்ட படப்பிடிப்புகள் மிக விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.

மிகவும் பிஸியாக இருந்த போதும் என்னுடன் பணியாற்ற நேரத்தை ஒதுக்கிய ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் சாருக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இந்தப் படத்தில் உள்ள விஷயம் ரசிகர்களுடன் மிக நன்றாகப் பொருந்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது,” என்கிறார் இயக்குனர் கே ஆர் சந்துரு.

கே.பி இசையமைக்க, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குனராகவும் பணிபுரிகிறார்கள்.

Continue Reading

Tamil Cinema News

ஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு

Published

on

soundarya-visakan-honeymoon

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, நடிகரும் தொழிலதிபருமான விசாகன் இருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் அவர்களது திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

திருமணத்திற்குப் பின் சௌந்தர்யா, விசாகன் தம்பதியினர் தேனிலவுக்காக வடக்கு ஐரோப்பாவில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்துக்குச் சென்றுள்ளனர்.

இது பற்றிய தகவலை சௌந்தர்யா புகைப்படங்களுடன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

Continue Reading

Tamil Cinema News

‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு

Published

on

ellam-mela-irukkuravan-parthuppan

விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் ராவுத்தர் மூவீஸ்.

விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான இப்ராகிம் ராவுத்தருக்குச் சொந்தமான நிறுவனம் அது.

அந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ எனும் படத்தை தயாரித்து வருகிறது.

இப்ராகிம் ராவுத்தரின் மகன் முகம்மது அபுபக்கர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கிறார்.

கதாநாயகனாக ஆரி நடிக்க, கதாநாயகியாக சாஷ்வி பாலா நடிக்கிறார்.

இப்படத்தின் முதல் பார்வையை நடிகர் விஷ்ணு விஷால் இன்று வெளியிட்டார்.

இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Continue Reading

Tamil Cinema News

எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்

Published

on

gv-prakash-new-movie

பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.

இந்த நிறுவனம் தற்போது சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இன்று துவங்கி  உள்ளார்கள்.

இதன் துவக்க விழா இன்று எளிமையாக ஒரு கோயிலில் நடை பெற்றது.

மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது.

எழில் அவருடைய பாணியிலான காமெடி படமாகத்தான் இந்தப் படத்தை இயக்க உள்ளாராம்.

மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

No feed items found.

Trending