Connect with us

Upcoming Movies

தேவதாஸ் – படப்பிடிப்பில்…

Published

on

தேவதாஸ் - படப்பிடிப்பில்...

வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘தேவதாஸ்’.

தம்பி ராமையா-ஷாகுல் ஹமீது இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் இரா மகேஷ் இயக்கத்தில், உமாபதி, யோகிபாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

‘அதாக்கப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து உமாபதி நடிக்கும் படம் இது. படம் முழுவதும் வரும் ஒரு கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார்.

“மனித வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் இரண்டறக் கலந்தது என்பது அறிந்ததே. ஆனால், ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய சந்தோஷமும், மிகப் பெரிய துக்கமும், ஒரே நேரத்தில் நடக்குமென்றால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதைக்களம். இதை உணர்வுபூர்வமாக நகைச்சுவை கலந்து, ஜனரஞ்சகமாக விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறோம் என்கிறார் இயக்குனர்.

இப்படம் பார்க்கும் அனைவரும் பல கட்டங்களில் தாங்கள் சந்தித்த, அனுபவித்த, கடந்து வந்த நினைவுகள் பிரதிபலிக்கும் விதமாக இருக்குமாம்.

மனிஷா யாதவ், ‘சகா’ ஐரா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:

உமாபதி ராமையா
யோகி பாபு
மனிஷா யாதவ்
ஐரா

தயாரிப்பு :- வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ்
இரா மகேஷ்: கதை, திரைகதை, வசனம், இயக்கம்.
ரூபன்: படத்தொகுப்பு
யுகா: ஒளிப்பதிவு
தாமரை & ரோகேஷ்: பாடல்கள்
நிகில் முருகன்: மக்கள் தொடர்பு

Upcoming Movies

நிக்கிரகன் – படப்பிடிப்பில்…

Published

on

நிக்கிரகன் - படப்பிடிப்பில்.

சைதன்யா சினி கிரியேஷன்ஸ் சார்பாக, சைதன்யா சங்கரன் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் ‘நிக்கிரகன்’.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில், உருவாகும் இப்படத்தில் பிரஸாந்த் தாவீத், கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இரு கல்லூரி மாணவர்கள், பகுதி நேர வேலையாக, ஒரு எஃப் எம் சேனலில் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்க்கிறார்கள். அவர்கள் வழங்கும் ஒரு புதுமையான, கலகலப்பான நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்கின்றனர். பின்னர் அதையே முழுநேர வேலையாகவும் மாற்றிக் கொண்டுவிட, வேடிக்கையாக சென்று கொண்டிருக்கும் அவர்களது வாழ்க்கை, அவர்களே அறியாத வண்ணம் திடீரென தடம் மாறுகிறது. இணையத்தில் மறைந்துள்ள ஆபத்துகள் என்னென்ன, அதில் சிக்கிக்கொண்ட அவர்கள், அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதைக்களம்.

நம் அன்றாட வாழ்வில் கடந்து வருகின்ற, சற்றே முக்கியத்துவமற்ற நிகழ்வுகள் போல தோன்றும் ஒரு விஷயம், ஒரு மனிதனின் வாழ்வையே மாற்றிப் போடும் வல்லமை படைத்தது என்பதை இத்திரைப்படம் ஜனரஞ்சகமான காட்சி அமைப்புகளுடன், சரி விகிதத்தில் திகிலும் கலந்து உருவாகி வருகிறது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:

முக்கிய வேடங்களில்: பிரஷாந்த் தாவீத், கனி எஸ் மற்றும் பலர்
தயாரிப்பு: சைதன்யா சங்கரன்
படத்தொகுப்பு: வினோத் ஜாக்சன் & ஷாஹித்
ஒளிப்பதிவு: அரவிந்த் ஜே
இசை: சனாதன்
எழுத்தும் இயக்கமும்: நஸ்ரேன் சாம்

Continue Reading

Upcoming Movies

உச்சகட்டம் – விரைவில்…திரையில்…

Published

on

உச்சகட்டம் - விரைவில்...திரையில்

திகில், அதிரடி, த்ரில்லர் திரைப்படங்களை படைப்பதில் வல்லவரும், அதற்காகவே பல்வேறு சிறப்பு விருதுகளையும் பெற்றவருமான இயக்குனர் சுனில் குமார் தேசாய், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ‘உச்சகட்டம்’ படத்தை இயக்கியிருக்கிறார்.

தமிழில் ‘உச்சகட்டம்’ என்றும், ‘உத்கர்ஷா’ என மற்ற மூன்று மொழிகளிலும் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம், வருகின்ற மார்ச் 22ம் தேதி திரைக்கு வருகிறது.

ஆர்.தேவராஜ் தி கிரியேஷன்ஸ் சார்பாக இத்திரைப்படத்தை தயாரிக்க, ஏஜிஎஸ் சினிமாஸ் உலகெங்கும் இதனை வெளியிட இருக்கிறது.

திகில், மர்மம், எதிர்பாராத திருப்புமுனைகள், குறிப்பிடத்தக்க அதிரடி காட்சிகள் என படம் முழுவதும் நிறைந்திருக்கிறதாம்.

ஒரு புத்தாண்டு தினத்தின் முந்தைய 48 மணி நேரத்தில் நடக்கின்ற பல்வேறு நிகழ்வுகளை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்கரு அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு உல்லாச விடுதியில் நடக்கின்ற ஒரு கொலை, அது ஏற்படுத்துகின்ற பெருங்குழப்பங்கள், என இவற்றால் கதையின் முக்கிய கதாப்பத்திரங்கள் தமது இலக்கை அடைய முடியாத நிலை என கதை பயணிக்கிறது. கதாபாத்திரங்கள் முன்னிறுத்தி பெரும் மர்மங்கள் நிறைந்த இத்திரைப்படத்தில், கொலை, துரோகம், காதல், காமம், மர்மம், அதிரடி சண்டைக் காட்சிகள் என கமர்ஷியலான படமாக உருவாகியுள்ளது.

அடுத்தடுத்து மாறுகின்ற விறுவிறுப்பான காட்சிகள், பித்துப்பிடித்த கதாபாத்திரங்கள், கொலைக்கு பின் மறைக்கப்படும் நிகழ்வுகளும் அதன் நோக்கங்களும் என கதையும், வசனங்களும் கதையின் போக்கை இறுதி நிமிடம் வரையில் விறுவிறுப்பாக வைத்திருக்குமாம்.

‘சிங்கம் 3’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த தாகூர் அனூப் சிங், இத்திரைப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார். தாகூர் ஒரு உடற்பயிற்சி விரும்பி, ஒரு ஆணழகன். உடல்நலம் மீது தீராத அக்கரை கொண்டவர். இதற்காகவே பல சர்வதேச விருதுகள் பெற்றவர் என்றாலும், ஒரு திறமையான நடிகராகவும் இருக்கிறார். அவருக்கு இணையாக சாய் தன்ஷிகா, ‘தடம்’ தன்யா ஹோப் என இருவர் நடித்துள்ளனர்.

‘வேதாளம்’ புகழ் கபீர் துஹான் சிங் இத்திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ‘ஆடுகளம்’ கிஷோர், ஷ்ரவன் ராகவேந்திரா, வம்சி கிருஷ்ணா, ஷ்ரத்தா தாஸ் ஆகியோரும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சஞ்சய் சவுத்ரி இசை அமைத்திருக்கிறார். பழம்பெரும் இசையமைப்பாளர் சலீல் சவுத்ரியின் மகனான இவர் 1998ம் ஆண்டு ‘என்னு சொந்தம் ஜானகிகுட்டி’ எனும் மலையாளப் படத்தில் அறிமுகமாகி, ‘சர் ஃபரோஷ்’ எனும் ஹிந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்து, தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டவர்.

கன்னட திரையுலகுக்குப் பெருமை சேர்த்த முன்னணி இயக்குனர்களில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ள சுனில் குமார் தேசாய். நான்கு முறை கர்நாடக அரசின் திரைப்பட விருதுகளைப் பெற்ற ஒரு இயக்குனர். அவரது முதல் திரைப்படமான ‘தர்கா’ அவருக்கு கன்னட அரசின் ‘சிறந்த இயக்குனர்’ மற்றும் ‘சிறந்த வசனகர்த்தா’ விருதுகளை பெற்றுத் தந்தது. ஆர் பி சவுத்ரி தயாரிப்பில் இத்திரைப்படம் தமிழில் ‘புரியாத புதிர்’ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது. இயக்குனர் கே எஸ் ரவிக்குமாருக்கு அதுவே முதல் திரைப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சுனில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் அமைப்பதில் வல்லவர். எந்த ஒரு குறிப்பிட்ட வடிவமைப்புக்குள்ளும் சிக்காத ஒரு சிறந்த, திறமையான படைப்பாளி என்பதும் அவரது படைப்புகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரது மிகச்சிறந்த படைப்புகள் வரிசை “தர்கா, உட்கர்ஷா, சங்கர்ஷா, நிஷ்கர்ஷா, பெலடிங்கள பாலே, நம்மூர மண்டர ஹூவே” மற்றும் பல படங்கள் என நீள்கிறது.

நட்சத்திரங்கள்

தாகூர் அனூப் சிங், சாய் தன்ஷிகா, தன்யா ஹோப், கபீர் துஹான் சிங், கிஷோர், ஷ்ரத்தா தாஸ், பிரபாகர், வம்சி கிருஷ்ணா, ஷ்ரவன் ராகவேந்திரா, மஞ்சுநாத்

தொழிட்நுட்பக் கலைஞர்கள்

கதை, இயக்கம் – சுனில் குமார் தேசாய்
தயாரிப்பாளர் – தேவராஜ் ஆர்
பின்னணி இசை – சஞ்ஜோய் சவுத்ரி
ஒளிப்பதிவு – பி ராஜன், விஷ்ணு வர்தன்
படத்தொகுப்பு – பி எஸ் கெம்பராஜூ
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

Continue Reading

Upcoming Movies

பட்டிபுலம் – விரைவில்…திரையில்…

Published

on

பட்டிபுலம் - விரைவில்...திரையில்...

சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் படம் ‘பட்டிபுலம்’.

இப்படத்தில் யோகி பாபு, வீரசமர், அமிதா ராவ், சேரன் ராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராகப் பணியாற்றிய சுரேஷ் இப்படத்தை இயக்குகிறார்.

படம் பற்றி சுரேஷ் கூறியதாவது,

“நான் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராகப் பணி புரிந்ததால் காமெடியை எப்படி உபயோகம் செய்தால் மக்களின் பாராட்டைப் பெaறலாம் என்பதை கற்றுக் கொண்டேன்.

அந்த பார்முலாபடி யோகி பாபுவை இந்தப் படத்தில் பயன்படுத்திக் கொண்டேன். அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷம் இல்லை, படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வருகிறார். அந்த ஒரு மணி நேரத்திற்கும் அதகளப்படுத்தி இருக்கிறார். படத்தில் யோகி பாபு கதாபாத்திரத்திற்குப் பேய் என்று பெயர் வைத்திருக்கிறோம்.

கிழக்கு கடற்கரை சாலையில் ‘பட்டிபுலம்’ என்ற ஊர் இருக்கு. அந்த ஊரில் உள்ள சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவது, அதனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது, ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது தான் கதை.

இதை நகைச்சுவையாகவும், பரபரப்பாகவும் சொல்லி இருக்கிறோம்,” என்கிறார் இயக்குனர்.

‘பட்டிபுலம்’ படம் மார்ச் 22ம் தேதி வெளியாகிறது.

ஒளிப்பதிவு – ஆர்.கே.வர்மா
இசை – வல்லவன்
எடிட்டிங் – ஆர்.ஜி.ஆனந்த்
கலை – வீரசமர்
நடனம் – விஜய் ரக்‌ஷித்
ஸ்டண்ட் – மகேஷ்
பாடல்கள் – மா.கா.பா.ஆனந்த், வல்லவன், கானா ராஜேஷ், கானா வினோத்
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி
தயாரிப்பு மேற்பார்வை – அயன்புரம் ராஜு
கதை திரைக்கதை வசனம், இயக்கம் – சுரேஷ்
தயாரிப்பு – திருமுருகன்

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!