January 22, 2019

தனுஷ் நடிக்கும் 2 புதிய படங்கள்

‘மாரி 2’ படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ என்ற படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.

அந்தப் படத்திற்குப் பிறகு தனுஷ் நடிக்க உள்ள இரண்டு புதிய படங்களை ‘விஸ்வாசம்’ படத்தைத் தயாரித்துள்ள சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ‘தொடரி’ படத்தில் தனுஷ் ஏற்கெனவே நடித்திருந்தார். அவர் நடிக்க உள்ள இரண்டு புதிய படங்களில் ஒன்றை, ‘எதிர் நீச்சல், கொடி’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்க உள்ளார்.

மற்றொரு படத்தை ‘முண்டாசுபட்டி, ராட்சசன்’ படங்களை இயக்கிய ராம்குமார் இயக்க உள்ளார்.

இந்த இரண்டு படங்களும் சத்யஜோதி நிறுவனத்தின் 34 மற்றும் 35வது படங்களாகும்.

Related Posts