January 22, 2019

‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ – விரைவில்…திரையில்…

நல்ல படங்களைக் கண்டுபிடித்து அதை முறைப்படி மொத்தமாக வாங்கி சிறப்பாக வெளியிட்டு நல்ல விநியோகஸ்தர் என்று பெயரெடுத்தவர் கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் வி.சத்யமூர்த்தி. ‘தப்பு தண்டா’ படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர்.

அதற்குப் பிறகு சுசீந்திரன் இயக்கிய ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, விஜய்சேதுபதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’, ‘கோலி சோடா 2’, போன்ற படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட்டார்.

‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை பார்த்த சத்தியமூர்த்தி பாராட்டியதுடன் இல்லாமல் படத்தை மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார்.

டைம் லைன் சினிமாஸ் மற்றும் சுந்தரம் அண்ணாமலை புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை சர்ஜுன் எழுதி இயக்கி இருக்கிறார்.

இவர் யூ டியூபில் பிரபலமான ‘லட்சுமி, மா’ ஆகிய குறும்படங்களை இயக்கியவர். அத்துடன் மணிரத்னம், ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.

இந்தப் படத்தின் சிறப்பையும் ‘மா, லட்சுமி’ ஆகிய குறும் படங்களின் நேர்த்தியையும் கேள்விப்பட்ட “அறம், குலேபகாவலி” படங்களின் தயாரிப்பாளர் ராஜேஷ், நடிகை நயன்தாரா இருவரும் சர்ஜுன் சொன்ன வித்தியாசமான கதையைக் கேட்டு உடனடியாக அவரை அவர்களது அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்துவிட்டார்கள்.

‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தைப் பற்றி இயக்குனர் சர்ஜுன் கூறியதாவது,

“படத்தின் டைட்டிலிலேயே இது திரில்லர் படம் என்று சொல்லி இருக்கிறோம். சத்யராஜ் சார் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக தூள் கிளப்பி இருக்கிறார். கடத்தல் பற்றி இதில் சொல்லி இருக்கிறோம்,” என்றார்.

பாண்டிச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

கிளாப் போர்டு புரொடக்சன்ஸ் தற்போது யூ டியூப் புகழ் இளைஞர்களை வைத்து ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற படத்தையும் தயாரித்து முடித்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்க இருக்கிறது.

ஒளிப்பதிவு…. சுதர்ஷன் ஸ்ரீனிவாஸ்
இசை…சுந்தரமூர்த்தி கே.எஸ்..
பாடல்கள்..கபிலன்
கலை…விஜய் ஆதி நாதன்
நடனம்…விஜய்சதீஷ்..சஅனுஷாசஸ்வாமி
ஸ்டண்ட்…மிராக்கில் மைக்கேல்
இயக்கம்…சர்ஜுன்

Related Posts