December 16, 2018

கஜா நிவாரணம், அஜித் 15 லட்சம் கொடுத்துட்டாராமே….

தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் கடந்த வாரம் வீசிய கஜா புயலால் கடுமையான சேதம் ஏற்பட்டது.

தமிழ் நடிகர்கள் கொஞ்சம் பொறுமையாக நான்கு நாட்கள் கழித்துதான் அவர்களது நிவாரண உதவிகளை அளிக்க ஆரம்பித்தார்கள்.

முதலில் சிவகுமார் குடும்பம் 50 லட்ச ரூபாய் நிவாரண உதவிகளை வழங்குவதாக அறிவித்தது. அடுத்து விக்ரம் 25 லட்சம், விஜய் சேதுபதி 25 லட்சம், சிவகார்த்திகேயன் 20 லட்சம் அறிவித்தார்கள்.

பின்னர் ரஜினிகாந்த் 50 லட்சம், விஜய் 40 லட்சம் என உதவிகளை செய்வதாக அறிவித்தார்கள். ராகவா லாரன்ஸ் ஒரு லட்ச ரூபாய் செலவில் 50  வீடுகளை கட்டித் தருவதாக அறிவித்தார்.

ஆனாலும், அஜித் ஏதாவது உதவி செய்வாரா, அப்படியே செய்தாலும் மற்ற நடிகர்களை மிஞ்சும் அளவிற்கு செய்வாரா என சமூக வலைத்தளங்களில் ஒரு விவாதம் எழுந்தது.

அஜித் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 15 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகை மற்ற நடிகர்கள் அறிவித்துள்ளதைக் காட்டிலும் குறைவு என்பது அடுத்த விவாதமாகவும் அமையும்.

 

Related Posts