Connect with us

Tamil Cinema News

‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – காப்பி கதை ?

பத்திரிகையாளர் கே.என். சிவராமன் குற்றச்சாட்டு

Published

on

கேங்ஸ் ஆப் மெட்ராஸ் - காப்பி கதை ?

தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கத்தில் ஏப்ரல் 12ம் தேதி வெளிவந்துள்ள ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ கதை தான் எழுதிய  ‘மாஃபியா ராணிகள்’ என்ற நூலின் ஒரு பகுதி என பத்திரிகையாளர் கே.என்.சிவராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவருடைய முகப்புத்தகத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது,

#Gangsofமெட்ராஸ்

நன்றி சி.வி.குமார். பெயரைக் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்காமல் அனுமதியும் பெறாமல் எனது ‘மாஃபியா ராணிகள்’ நூலின் ஒரு போர்ஷனை எடுத்து ஆண்டதற்கும் அப்பகுதிக்கு திரைவடிவம் கொடுத்ததற்கும் 🙂

உண்மையில் அது ஒரிஜினல் சரக்கல்ல.

பத்திரிகையாளர் ஹுசைன் சைதி எழுதிய இரு ஆங்கில நூல்களையும் 1980 முதலான ஆங்கில பத்திரிகைகள் ப்ளஸ் இங்கிலீஷ் நியூஸ் பேப்பர்ஸ் செய்திகளையும் அடிப்படையாக வைத்து டிராமடைஸ் செய்யப்பட்ட டிரான்ஸ்கிரியேஷனே ‘மாஃபியா ராணிகள்’.

தினகரன் நாளிதழின் ஞாயிறு இணைப்பான ‘தினகரன் வசந்தம்’ பத்திரிகையில் 97 வாரங்களுக்கும் மேல் வெளியாகி ‘சூரியன் பதிப்பகம்’ வழியே நூலாகவும் வெளிவந்திருக்கிறது.

வருத்தம் ஏதும் இல்லை. உள்ளூர மகிழ்ச்சிதான். ஏனெனில் ஹுசைன் சைதி நூலில் இருக்கும் செய்தியைவிட அதை டிரமடைஸ் செய்த எனது வெர்ஷனையே வசனங்கள், ப்ளாக்ஸ் முதல் பயன்படுத்தி இருக்கிறீர்கள், மும்பைக்கு பதில் மெட்ராஸ் என களம் மாற்றி.

அந்த வகையில் எனது கிரியேட்டிவிட்டியை (!) மதித்து மரியாதை செய்ததற்கு நன்றி 🙂

நல்லா இருங்க, நீங்களும் பெயர் குறிப்பிடாமல் உங்களுக்கு ஓர்க் பண்ணி கொடுத்த எனது நண்பர்களும் 🙂

இந்தப் படம் ஏன் பெரும் வெற்றி அடையாமல் போனது என்பதை உங்களை எப்போதாவது சந்திக்கும்போது விளக்குகிறேன். பிகாஸ், இன்ஸ்ஃபையர் (காப்பி 🙂 ) ஆகி வாந்தி எடுப்பவர்களை விட மென்று தின்றவர்களுக்கு பிசிறின்றி செரிமானம் ஆகும் 🙂

அதற்குள் இன்னொருவரின் உழைப்பை கமுக்கமாக சுரண்டாமல் இருங்கள். தொடர் வாந்தி பெரும் நோயின் அறிகுறி 🙂

சி.வி.குமாருக்கு கோஸ்ட் ரைட்டர்ஸாக இருக்கும் எனதருமை நண்பர்களே… தொடரட்டும் உங்கள் சேவை 🙂

சிபியா டோனில் வலம் வரும் ஹாலிவுட் கேங்க்ஸ்டர் படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் –

ஆங்காங்கே துருத்தி நிற்கும் குறைகளைக் கடந்து இப்படத்தை ரசிக்க முடியும்.

வன்முறை அதிகம் என்பதால் ஒன்லி 18 +…” என பதிவிட்டுள்ளார்.

Tamil Cinema News

ஆணவக் கொலைக்கு தீர்வு சொல்ல வரும் ‘பற’

Published

on

ஆணவக் கொலைக்கு தீர்வு சொல்ல வரும் பற

வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் சார்பாக ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் தயாரித்து இருக்கும் படம் பற.

கீரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ராமச்சந்திரன் பேசியதாவது,

“இந்தப் படத்தைப் பற்றி ஒரு விசயத்தை மட்டும் சொல்கிறேன். ஒரு அருமையான பயணமாக இந்தப் படம் இருந்தது. படமும் அருமையாக வந்திருக்கிறது. இயக்குநர் கீராவிற்கு நன்றி. சமுத்திரக்கனி அவர்கள் எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுத்தார். இந்தப் படத்திற்கான ஆதரவை மக்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம், ” என்றார்

படத்தின் ஒரு நாயகனான நித்திஷ் வீரா பேசுகையில்,

“இந்தப் படத்தைத் தொடங்கியது இயக்குநர் பா. ரஞ்சித் அண்ணன் தான். அவர் இந்த விழாவிற்கு வந்ததற்கு நன்றி. இந்தப்படத்தின் பாடல்கள் எல்லாம் சிறப்பாக வந்திருக்கிறது. படமும் சிறப்பாக இருக்கும். இயக்குநர் கீரா அவர்களோடு பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அது நடந்துள்ளது,” என்றார்

இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது,

“இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இயக்குநர் கீரா அண்ணனுக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கீரா அவரது கொள்கையை ஓங்கிப் பேசி வருகிறார். இந்த பற படத்தில் pc ஆக்ட் பற்றி ட்ரைலரில் சொல்லி இருக்கிறார். அது இன்றைய சமகாலப் பிரச்சனை.

சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றிய ஆழமான புரிதலை இந்தப்படம் பேசி இருக்கும் என்று நம்புகிறேன். புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை சமுத்திரக்கனி அண்ணனுக்கு வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரியான படங்கள் வெற்றி பெறவேண்டும்.

சமீபத்திய எல்லா கமர்சியல் சினிமாவிலும் சாதி பற்றிய டிஸ்கஷன் வைக்க வேண்டிய சூழல் உருவாகி இருப்பது மிகவும் வரவேற்கக் கூடியது. சினிமாவில் பாலியல் ரீதியாக பெண்கள் சுரண்டப்படுவது உண்மை தான். பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைப்பதாலே அவர்களை குற்றம் சாட்டக்கூடாது,” என்றார்

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசுகையில்,

“பரபரவென்று இருப்பவர்கள் தான் பறக்க முடியும். அந்தப் பரபரப்பை எப்போதும் வைத்துக் கொண்டிருப்பவர் தம்பி சமுத்திரக்கனி. அவர் இந்தப் படத்தில் இருக்கிறார். அப்படியான பரபரப்பை கொண்டவர்கள் தான் உயரப் பறக்கிறார்கள். அவர்கள் தான் பறக்கவும் வேண்டும். இந்தப் படத்தின் இயக்குநர் கீரா மிகத் திறமையானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த பற படம் வெற்றிக்கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்,”என்றார்

படத்திம் இயக்குநர் கீரா பேசியதாவது,

“இந்தப் படத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் மறைந்து விட்டார். அவ்வளவு குறைவாகத் தான் வாழ்நாள் இருக்கிறது.

வாழும் போது துரோகமும் வன்மமும் இல்லாமல் வாழ வேண்டும். இந்த பற படம் ஏற்றத்தாழ்வையும், சாதி ஒழிப்பையும், ஆணவக் கொலைக்கான தீர்வையும் அண்ணன் சமுத்திரக்கனி ஏற்று நடித்திருக்கும் அம்பேத்கர் கேரக்டர் மூலமாகச் சொல்லி இருக்கிறோம்.

இந்தப் படம் தரமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது உங்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்

சமுத்திரக்கனி பேசுகையில்,

“இந்தப் படத்தில் நான் நடிக்க வந்த காரணம் பா.ரஞ்சித் தான். அவர் தான் கீராவை அறிமுகப்படுத்தினார். கீரா காதலர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் கேரக்டர் உங்களுக்கு என்றார். நான் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறேன் என்றேன்.

இயக்குநர் கீராவிடம் நான் பா.ரஞ்சித்தைப் பார்க்கிறேன். எந்த உணர்ச்சியையும் அதிகமாக வெளிக்காட்டாத உண்மையாளர் ரஞ்சித். அதே கேரக்டர் தான் இயக்குநர் கீராவும். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் நல்ல நட்புள்ளம் கொண்டவர். இந்தப் படம் அற்புதமான படம். அருமையான பதிவு,” என்றார்.

Continue Reading

Tamil Cinema News

அரசியலில் இழுக்காதீர்கள் – ராகவா லாரன்ஸ் அறிக்கை

Published

on

அரசியலில் இழுக்காதீர்கள் - ராகவா லாரன்ஸ் அறிக்கை

இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் இன்று திடீரென ஒரு நீளமான பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அது, வளர்ந்து வரும் ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை எனத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கை,

“வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை. இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும்!

அண்ணா வணக்கம்! உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மேடைப் பேச்சை கேட்டுவிட்டு நானே உங்களுக்கு போன் செய்து *”அண்ணே நீங்கள் மேடையில் பேசியதை நான் கேட்டேன்! மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் நல்லா வர வேண்டும்”* என,
மனதார வாழ்த்தினேன்! அதற்குத் தாங்கள் நன்றியும் மகிழ்ச்சியும் தம்பி என தெரிவித்திருந்தீர்கள்…. அதன் பிறகும்… இரண்டு மூன்று முறை போனில் உங்களிடம் பேசி இருக்கிறேன்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு போராட்டத்திற்கு ஒரு நல்ல விஷயத்தை செய்திட, சேவை மனப்பான்மையோடு சென்றிருந்தேன் அதை செவ்வனே செய்து விட்டு வழக்கம் போல் அமைதியாக எனது வேலைகளை செய்துகொண்டு இருந்தேன்.

ஆனால்….. நீங்கள் தான் முதன் முதலில் உங்களது மேடையில், எனது பெயரை இழுத்து, என்னையும் எனது ரசிகர்களையும், தன்னலமற்ற எனது சேவைகளையும், தரமற்ற முறையில் கொச்சைப்படுத்தி பேசினீர்கள்…. அப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது….

எனக்கும் அண்ணனுக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லையே… பிறகு ஏன் அண்ணன் இப்படி தப்பு தப்பாக பேசுகிறார் என எனது நண்பர்களிடம் கேட்டேன்….அவர்கள் சொன்னது…..ஒன்று அரசியலாக இருக்கலாம் அல்லது பயமாக இருக்கலாம் என்றார்கள். அப்பொழுதுதான் இது அரசியல் என்று நான் புரிந்து கொண்டேன்! அதே சமயம்….. நீங்கள் அப்படி என்னைப்பற்றி பேசியதற்கு நான் பதில் சொல்லும் பொழுது கூடஉங்களைப்பற்றி மிக மரியாதையோடு தான் பேசினேன்!

இது அச்சமயத்தில் அனைவருக்குமே தெரியும்! சரி இந்த விஷயம் அத்தோடு முடிந்து விட்டது என நான் என்னுடைய திரைப்பட பணியையும், பொது சேவையையும் அமைதியாக செய்து கொண்டு இருக்கிறேன்…‌!

*”என்னைப்பற்றி தரக்குறைவாக நீங்கள் பேசி விட்டுப் போய் விட்டீர்கள்….ஆனால் உங்கள் பேச்சால் *தூண்டிவிடப்பட்ட உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் என்னை எதிரியாகவே இன்றளவும் பாவித்து வருகிறார்கள்

நீங்கள் என்னை தவறாகப் பேசியதையும், அதற்கு நான் நாகரீகமாக பதில் சொன்னதையும், முடிந்துபோன ஒரு விஷயமாய் விடாமல் உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் எனது சேவை சம்பந்தப்பட்ட பதிவுகள் போடப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற வலைதளங்களில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில்….. தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், அசிங்கமாகவும் நாலாந்தர நடையில் பதிவிடுகிறார்கள் ! அது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.

ஏதேனும் பொது நிகழ்ச்சிகளுக்கு நான் போகும்போது கூட உங்களது ஒரு சில தொண்டர்கள் அங்கு வந்து மிகவும் நாகரீகமற்ற முறையில் மறைமுகமாக பேசுகிறார்கள்!

இவையெல்லாம், எப்பொழுது நீங்கள் மேடையில் என்னைப் பற்றி தவறாக பேசினீர்களோ, அப்பொழுதிருந்தே இது நடந்து வருகிறது…..நான் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை! ஆனால்…. மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க, நிகழ்ச்சி நடத்த எங்கு சென்றாலும், அவர்களை சொல்லொண்ணா வார்த்தைகளாலும் செயல்களாலும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மனம் புண்படும்படி பேசுகிறார்கள்!

இவ்வளவு நாள் பொறுமையாக தான் இருந்தேன் ஆனால் உங்களது ஒரு சில தொண்டர்களின் செயல்பாடுகள் தற்பொழுது எல்லை மீறி போகிறது…கடந்த வாரம் கூட இந்த கசப்பான சம்பவம் நடந்துள்ளது. அதை மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க என்னிடம் கூறி, மிகவும் வருத்தப்பட்டார்கள்! அதற்காகத்தான் இந்தப் பதிவு.

இறுதியாக ஒன்றை மட்டும் உறுதிபட கூறுகிறேன்….. எனக்கு எது நடந்தாலும் அதைத் தாங்கிக் கொள்வேன். ஆனால்… மாற்றுத்திறனாளிகளான என் பசங்களுக்கும் பாசமிக்க எனது ரசிகர்களுக்கும், ஏதாவது ஒரு சிறு தொந்தரவு ஏற்பட்டாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்கள் எனது பிள்ளைகள் மாதிரி.

உங்களது ஒரு சில தொண்டர்களால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினை போலவே, தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களுக்கும் எனது சக திரைப்பட நண்பர்களுக்கும், உங்களின் ஒரு சில தொண்டர்களால் தொடர்ந்து ஏற்படுகிறது என்பதை
இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

எனவே, உங்களுடைய அந்த ஒருசில தொண்டர்களை அழைத்து தப்புத்தப்பாக என்னைப்பற்றி பேசுவதையும் எழுதுவதையும் கண்டிப்பாக தவிர்க்கும் படி கூறிடுங்கள்.

பொதுவாக தாங்கள் அனைவரையுமே தம்பி, தம்பி என்றுதான் அழைக்கிறீர்கள்… அந்த தம்பியில் ஒருத்தனாக கேட்கிறேன் எந்த அண்ணனும் தனது தம்பியோட வளர்ச்சியை பார்த்து ரசிக்கத்தான் செய்யனும், அந்தத் தம்பியின் வளர்ச்சியை அழிக்க வேண்டுமேன நினைக்கக்கூடாது.

நான் எந்த ஒரு பேக் கிரவுண்டும் இல்லாமல் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு முன்னேறி வந்து இருக்கிறேன் இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு மேலும் உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் இந்த பிரச்சனையில் எனக்கும் எனது மாற்றுத்திறனாளி பசங்களுக்கும் தொந்தரவு கொடுத்து வந்தால்….?

எச்சரிக்கை தான்! அந்த எச்சரிக்கை* என்னவென்றால்…?

*”எனக்கு “இந்த அரசியல்” எல்லாம் தெரியாது அரசியலைப் பொருத்தவரை நான் ஒரு ஜீரோ!”*
*”முன்பு நடனத்தில் கூட நான் ஜீரோவாகத்தான் இருந்தேன்,* *பிறகு கற்றுக் கொண்டேன்!”*
*”டைரக்‌ஷன் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது,* *பிறகு கற்றுக்கொண்டேன்!”*
*”படத்தயாரிப்புக் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது, *பிறகு கற்றுக்கொண்டேன்*
*”அரசியலில் இப்பொழுது கூட நான் ஜீரோவாகத்தான் இருக்கிறேன், அதில் “ஹீரோவாக்கி” என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள்!”*
*”நீங்கள் பேச்சை அதிகமாக பேசுவீர்கள்…!*”நான் சேவையை அதிகமாக செய்வேன்!”*
*”மக்களுக்கு பேசுகிறவர்களை விட,* *”செயலில்”காட்டுகிறவர்களைத்தான் அதிகம் பிடிக்கும்!”*
*”நாமிருவரும் ஏதேனும் ஒரு பொதுவிவாத மேடையில் அமர்ந்து*
*நீங்கள் மக்களுக்கு என்ன நன்மைகள் செய்தீர்கள்?*
*”நான் என்னென்ன நன்மைகள் செய்தேன்” என பட்டியலிட்டேன் ஏன்றால்* *உங்களால் பதில் சொல்ல முடியாது.

நான், ஏழைகளுக்கு செய்கிற சேவைகளை, ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட, மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களும் பாராட்டுகிறார்கள்,*
*எனது தலைவனும், என் நண்பனும் கூட, நான் எந்த உதவி கேட்டாலும் உடனே, செய்து கொடுக்கிறார்கள்…செய்தும் வருகிறார்கள்…அத்துடன் மனப்பூர்வமாக என்னை வாழ்த்துகிறார்கள்…. ஆனால்…நீங்களும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மட்டும் தான், என்னையும் எனது தன்னலமற்ற சேவைகளையும் மிகக் கடுமையாக கேவலப்படுத்தி வருகிறார்கள்.

அப்புறம் உங்களது பெயரை நான் இங்கு குறிப்பிடாமல் இருப்பதற்கு காரணம் ? பயம் இல்லை நாகரிகம்தான் காரணம்!

அது மட்டுமல்லாமல்…இது தேர்தல் நேரம் வேறு இந்த எனது அறிக்கையின் மூலமாக உங்களுக்கு எந்த வித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தான் உங்களது பெயரை இங்கு குறிப்பிடவில்லை!

தயவுசெய்து என்னையும் எனது மாற்றுத்திறனாளி பிள்ளைகளின் மன உணர்வுகளையும், புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்….

நான் சொல்வது சரி என உங்களுக்கு தோன்றினால் தம்பி வாப்பா பேசுவோம் என கூப்பிடுங்கள்…. நானே உங்களது வீட்டுக்கு வருகிறேன்….உட்கார்ந்து…..மனம் விட்டு பேசுவோம். சுமூகமாகி அவரவர் வேலையை, அவரவர் செய்வோ.

நீங்களும் வாழுங்கள், வாழவும் விடுங்கள், இல்லை……இதை பிரச்சனையாகத்தான் நானும் எனது தொண்டர்களும் அணுகுவோம் என நீங்கள் முடிவெடுத்தால்…. அதற்கும் நான் தயார்.

சமாதானமா ? சவாலா ? முடிவை நீங்களே எடுங்கள்!

சாய்ஸ் இஸ் யுவர்ஸ்… அன்புடன்… உங்கள் அன்புத்தம்பி ராகவா லாரன்ஸ்.

என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Continue Reading

Tamil Cinema News

சூர்யாவின் படப் பெயர் ‘சூரரைப் போற்று’

Published

on

சூர்யாவின் படப் பெயர் சூரரைப் போற்று

‘இறுதிச் சுற்று’ படத்தை இயக்கிய சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு ‘சூரரைப் போற்று’ எனப் பெயர் வைத்து படத்தின் முதல் பார்வையை இன்று வெளியிட்டனர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

சூர்யா ஏற்கெனவே நடித்துள்ள ‘என்ஜிகே’ படம் மே 31ம் தேதி வெளியாக உள்ளது. ‘காப்பான்’ படம் அதற்கடுத்து வெளிவர உள்ளது.

‘சூரரைப் போற்று’ படத்திற்குப் பிறகு சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!