Connect with us

Tamil Cinema News

இளையராஜா பாராட்டுதான் மகிழ்ச்சி அளித்தது – ஏஆர் ரகுமான்

ஒரே மேடையில் இளையராஜா – ஏஆர் ரகுமான்

Published

on

ilaiyaraaja 75
ஏஆர் ரகுமான் கலந்து கொண்டு சிறப்பித்த இளையராஜா 75 நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், பொதுச் செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசும்போது,

‘இளையராஜா 75’ விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. இளையராஜாவின் இசைப் பயணம் என்றும் நிலைத்திருக்கும். எத்தனை இடையூறுகள் வந்தாலும், அதையெல்லாம் தாண்டி தனது லட்சியத்தில் உறுதியாக இருந்ததால் தான் அவர் உயரத்தில் இருக்கிறார். 1000 படங்களில் 7000 பாடல்களை இசையமைத்து, 20,000 கச்சேரிகளை நடத்திய அவரைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. பத்மவிபூஷன் இளையராஜாவிற்கு இப்படி ஒரு விழா எடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கௌரவப்படுத்தி இருக்கிறது. இந் நிகழ்ச்சி பல வருடங்களுக்கு எல்லோர் மனதிலும் நிலைத்திருக்கும்,” என்றார்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேசுகையில்,

“எல்லா நாட்டிலும் ஆள்வதற்கு ஒரு ராஜா இருப்பார். ஆனால், பாடல் என்று வரும்போது ஆள்வதற்கு ஒரே ராஜா தான். அது ‘இசைஞானி’ இளையராஜா தான்.

அவரின் இசை இல்லையென்றால், நீண்ட தூரப் பயணம் என்றோ அழிந்திருக்கும். ஒரு கார் டிரைவர் பெட்ரோல் இருக்கிறதா என்று பார்ப்பதற்கு முன் இளையராஜா பாடல்கள் கொண்ட கேசட் இருக்கிறதா என்று தான் முதலில் பார்ப்பார். காஷ்மீர் வரைக்கும் என்றால் கூட அவருடைய பாடல்கள்தான் பயணத்தை இனிமையாக்கும்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ‘இளையராஜா 75’ விழாவை நடத்துவதற்கு பெருமை மட்டுமல்ல, கடமைப்பட்டிருக்கிறோம்.

இளையராஜா போன்ற ஒரு மாமேதை பிறக்கவும் முடியாது, இப்படிப்பட்ட ஒரு சாதனையைப் படைக்கவும் முடியாது.

தந்தைக்காக மகன் கணக்கில்லாமல் செலவு செய்வது தப்பில்லை. அதைப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரர்கள் தப்பு என்று சொல்வதும் சரியல்ல. ஏனென்றால், தந்தைக்கு செய்வது கடமை. அதுபோல், இளையராஜாவிற்காக இந்த விழா நடத்துவதில் எந்த தப்புமில்லை.

‘திருவிளையாடல்’ படத்தில் இடம் பெறும் வசனம்தான் ஞாபகம் வருகிறது. ‘சில பேர் பாராட்டியே பேர் வாங்குவார்கள், சிலர் குற்றம் கண்டுபிடுத்தே பேர் வாங்குவார்கள்’ என்ற வசனத்திற்கேற்ப நாங்கள் இளையராஜாவை பாராட்டி வரலாற்றில் இடம் பெறுவோம். அதேபோல், இந்நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று எதிர்த்தவர்களும் இடம் பெறுவார்கள்.

இதெல்லாம் நடக்குமென்று தெரிந்து தான் அன்றே இளையராஜா இசையமைத்திருக்கிறார் ‘என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா, வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா’ என்று. இது புரிய வேண்டியவர்களுக்குப் புரியும்.

தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவிற்கே மாணிக்கமாக விளங்குபவர் இளையராஜா. நீங்கள் இந்த இரண்டு நாளும் ஒரு சிறந்த இசை விருந்தை சுவைக்கப் போகிறீர்கள்.

இந்நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் சன் டிவிக்கும், கலாநிதி மாறனுக்கும் நன்றி. எத்தனையோ ஆளுநர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், பன்வாரிலால் புரோஹித் மிகச் சிறந்தவர். அவரைப் பற்றி தவறான வதந்திகளை செய்தித்தாள்களில் படிக்கிறோம். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் கடமைகளைத் தவறாமல் செய்து வருகிறார். அவர் எல்லோருக்கும் முன்மாதிரியாக விளங்குகிறார். இவ்விழாவிற்கு வருகை தந்து, விழாவை துவக்கி வைத்த ஆளுநருக்கு நன்றி.

வெளியூரில் இருந்து இந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவரின் மனதிலும் இந்த இரண்டு நாள் விழா நீங்கா இடம் பெரும்.

ஏ.ஆர்.ரகுமான் பேசும் போது,

 என்னுடைய தலைமை ஆசிரியர் இளையராஜா.

அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். பொதுவாக இசையமைப்பாளர்கள் என்றாலே கெட்ட பழக்கங்கள் இருக்கும். ஆனால், இளையராஜாவை பார்த்து இப்படியும் இருக்க முடியும் என்று தெரிந்து கொண்டேன். எங்கள் இருவருக்கும் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் இசை தான். நான் விருது பெற்றதும் இளையராஜாவின் பாராட்டு தான் மகிழ்ச்சியளித்தது. ஏனென்றால், மேதைகளிடம் இருந்து எளிதில் பாராட்டுக்கள் வராது. அப்படி வந்தால் அது உண்மையான திறமை இருந்தால் தான் வரும். அவரிடம் இருந்து பாராட்டு வந்தது மகிழ்ச்சி,” என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இளையராஜா பேசும் போது,

“ஏ.ஆர்.ரகுமான் அவர் அப்பாவிடம் இருந்ததை விட என்னுடன் இருந்த நேரம்தான் அதிகம். கிட்டத்தட்ட 500 படங்களில் என்னுடன் பணியாற்றியிருக்கிறார்,” என்றார்.

மேலும், ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசைக்க இளையராஜா பாடினார்.

நேற்று முதல் நாள் நிகழ்ச்சி முடிந்த நிலையில் இன்று மாலை இரண்டாம் நாள் நிகழ்ச்சி முற்றிலும் இசை விருந்தாக நடைபெற உள்ளது.

Tamil Cinema News

விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’

எஸ்.பி. ஜனநாதன் இயக்க, ஸ்ருதிஹாசன் நாயகி…

Published

on

லாபம்

விஜய் சேதுபதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தைத் தயாரித்த 7சிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், விஜய் சேதுபதியின் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிக்கும் படம் ‘லாபம்’.

அதன் டேக் லைன் ஆக ‘பகல் கொள்ளை’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

‘இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படங்களை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதிஹாசன் முதன்முறையாக நடிக்கிறார். இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஸ்ருதிஹாசன் தமிழில் நடிக்கும் படம் இது.

ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இமான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

இன்று காலை இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது.

சற்று முன்னர் இப்படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து படங்களை இயக்குபவரான ஜனநாதனின் இந்தப் பெயரும், அதற்கான டேக் லைனும் படம் வெளிவரும் போது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

 

Continue Reading

Tamil Cinema News

வில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு

Published

on

வில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு

பல படங்களில் நடித்த நடிகர் நிதின் சத்யா, ‘ஜருகண்டி’ படத்திற்குப் பிறகு அவருடைய ஷ்வேத் – எ நிதின்சத்யா புரொட்கஷன் ஹவுஸ் சார்பாக தயாரிக்கும் படத்தில் வைபவ் நாயகனாக நடிக்க வாணி போஜன் நாயகியாக நடிக்கிறார்.

ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வைபவை தெறிக்கவிடும் வில்லனாக இயக்குனர் வெங்கட்பிரபு நடிக்கின்றார். இவர் வில்லனாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய SG சார்லஸ் இயக்குனராக அறிமுகமாகிறார்.

தற்போது இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இப்படத்தின் முதல் பார்வை டைட்டில் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது.

Continue Reading

Tamil Cinema News

சிவா இயக்கத்தில் சூர்யா

Published

on

சிவா இயக்கத்தில் சூர்யா

‘சிறுத்தை, வேதாளம், விவேகம், விஸ்வாசம்’ படங்களை இயக்கிய சிவா அடுத்து சூர்யா நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

தெலுங்கில் 2008ல் வெளிவந்த ‘சௌர்யம், சன்கம்’ ஆகிய படங்களை இயக்கிய சிவா 2011ல் வெளிவந்த கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படத்தின் மூலம் தமிழில் இயக்குனர் ஆக அறிமுகமானார்.

அவரை தமிழில் இயக்குனராக அறிமுகப்படுத்திய ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்கு 8 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியானது.

இந்தப் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத் தயாரிப்பில் நடிக்கிறார் சூர்யா.

சூர்யாவின் 39வது படம் இது. சூர்யா நடித்துள்ள ‘என்ஜிகே, காப்பான்’ ஆகிய படங்கள் இந்த ஆண்டில் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. மேலும், சுதா கோங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தில் தற்போது நடித்து வருகீறார்.

சூர்யாவின் 39வது படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!