Connect with us

Tamil Cinema News

‘இரும்புத்திரை’ விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் – சமந்தா

Published

on

irumbuthirai samantha

2017ம் ஆண்டு வெளிவந்த படங்களில் மிகப் பெரும் வெற்றி பெற்ற ‘மெர்சல்’ படத்தின் நாயகியான சமந்தா நடித்து 2018ம் ஆண்டின் முதல் படமாக வெளிவர இருக்கும் படம் ‘இரும்புத்திரை’.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் நாயகனாக விஷால் நடிக்கிறார். இவர் ஜோடியாக சமந்தா நடிக்கும் முதல் படம் இது.

இப்படம் நமக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு படமாக இருக்கும் என படத்தின் நாயகி சமந்தா கூறியுள்ளார்.

“இரும்புத்திரை’ படத்தின் கதையைக் கேட்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம் வாழும் இந்த சமூகத்தில் நமக்குத் தெரியாமல் இவ்வளவு பிரச்சனைகள் இன்டர்நெட் மீடியம் மூலமாக நம்மை சுற்றி நடக்கிறதா என்று பதைபதைக்க வைத்தது.
படத்தின் கதையை கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய கைபேசியை தொடவே பயமாக இருந்தது. இந்த படம் இன்டர்நெட் மூலமாக நமக்கு என்னவெல்லாம் பிரச்சனைகள் உள்ளது, அது நமக்கு எப்படியெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்று மிகத் தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும். நமது பிரைவசி எப்படி வெளியே கசிகிறது என்பதை பற்றியும் இப்படம் பேசும்.

எனக்கு புதுமுக இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றுவதில் சிறிது தயக்கம் தான். ஆனால் இயக்குனர் மித்ரன் ஒரு போதும் என்னை அப்படி பீல் பண்ண வைத்து இல்லை. அவர் கதை சொல்லும் போதே நாம் ஒரு திறமையான இயக்குநரோடு இணைந்து பணியாற்றப் போகிறோம் என்று புரிய வைத்தார். அவர் சொன்னது போலவே படத்தையும் சிறப்பாக இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் வருவது போன்ற சம்பவங்கள் எதுவும் என்னுடைய வாழ்க்கையில் நடந்தது இல்லை. அதற்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் என்னுடைய நட்பு வட்டத்தில் உள்ள சிலர் இன்டர்நெட் மூலம் நடக்கும் மோசடிகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது 1 கோடி ரூபாய் வென்றுள்ளீர்கள் என்று வரும் விளம்பரங்களுக்கு பதிலளித்து, பல லட்சங்கள் கொடுத்து ஏமாந்து உள்ளார்கள்.

இன்று ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்கள் அனைத்தும் முக்கித்துவம் வாய்ந்த ஒன்றாகிவிட்டது. அவற்றுக்கு நாம் அடிக்ட் ஆகிறோம் என்பது தான் தவறு. அதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். ‘இரும்புத்திரை’ ரசிகர்களுக்கு சமூக வலைத்தளங்களால் ஏற்படும் பிரச்சனை பற்றியும், அதை நாம் எப்படி சரியாக பயன்படுத்தலாம் என்பது பற்றியும் எடுத்துக் கூறி நம்மிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இருக்கும்.

விஷால் மற்றும் அர்ஜுன் சார் என்று இருவருமே அவரவர் ஸ்டைலில் ஹாட்டஸ்ட் ஹீரோக்கள் தான். அவர்களோடு இப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி,” என்றார் சமந்தா.

‘இரும்புத்திரை’ வருகிற மே மாதம் 11 தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Tamil Cinema News

சிந்துபாத் – படத்தின் சிறப்புகள்…

Published

on

சிந்துபாத் - படத்தின் சிறப்புகள்...

‘பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி’ ஆகிய இரண்டு வெற்றிப்படங்களுக்கு பிறகு S.U.அருண் குமார் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ள படம் ‘சிந்துபாத்’.

அருண்குமார் முதலிரண்டு படங்களையும் வேறுபட்ட கோணத்தில் இயக்கியதைப் போல மூன்றாவது படமானசிந்துபாத்’திலும் முற்றிலும் வேறுபட்ட புதிய கதைக்களத்தை தொட்டுள்ளார். சிந்துபாத் ஒரு ஆக்க்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

‘பாகுபலி 2’ திரைப்படத்தை வெளியிட்ட மற்றும் ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தைத் தயாரித்த K புரொடக்சன்ஸ் S.N. ராஜராஜன், ‘சேதுபதி’ திரைப்படத்தைத் தயாரித்த வான்சன் மூவிஸ் ஷான் சுதர்ஷன் இருவரும் இணைந்து ‘சிந்துபாத்’ படத்தைத் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு வலிமையான ஒரு கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார். அஞ்சலியின் நடிப்பு இத்திரைப்படத்தில் பெரிதாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சலிக்கும் விஜய் சேதுபதிக்குமான காதல் காட்சிகள் மிக சுவாரசியமாக அமைக்கப்பட்டுள்ளதாம்.

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி படம் முழுவதும் வரும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியும், சூர்யா விஜய் சேதுபதியும் தென்காசியில் சிறுசிறு திருட்டு வேலைகள் செய்யும் திருடர்களாக நடித்துள்ளனர். இப்படம் சூர்யா விஜய் சேதுபதிக்கு சிறந்த அறிமுகமாக அமையும்.

சேதுபதி திரைப்படத்தில் SI-ஆக நடித்த லிங்கா இப்படத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த வில்லனாக நடித்துள்ளார். இதற்காக அவர் 18 கிலோ உடல் எடையை கூட்டி முரட்டுத்தனமான தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த வில்லன் கதாபாத்திற்காக தாய்லாந்து மொழி பேசவும், உடல் எடை கூட்டவும் ஒரு வருடம் கடுமையாக உழைத்துள்ளார். அவரைப் போலவே சேதுபதியில் நடித்த விவேக் பிரசன்னா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் S.U.அருண் குமாரின் திரைப்படங்களில் இசைக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும். இந்தப் படத்தில் அவர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைவது ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தில் இடம் பெறும் ஐந்து பாடல்களும் ஐந்து விதமாக அமைந்துள்ளது. இந்த வருடத்தின் மிகப் பெரிய ஹிட் ஆல்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு துபாயில் பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் பின்னணி இசையினை உலகத்தரத்தில் யுவன் ஷங்கர் ராஜா உருவாக்கி வருகிறாராம்.

தென்காசி, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. பல ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் பணியாற்றிய Nung Aka Pradit Seeluem தாய்லாந்தில் நடக்கும் கதைப்பகுதிக்கு சண்டை பயிற்சி அமைத்துள்ளார். சண்டைக்காட்சிகள் பிரம்மாண்டமாகவும் அதே சமயத்தில் எதார்த்த்தை மீறாத வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் 80 சதவிகிதம் முடிவடைந்த நிலையில், படத்தில் நடித்தவர்களை டப்பிங் பேச வைப்பதன் மூலம்தான் எதார்த்தத்தையும் உண்மைத் தன்மையையும் நெருங்க முடியும் என்பதால் தாய்லாந்து மற்றும் மலேசியாவில் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் பணிக்கு இயக்குனர் தாய்லாந்து மற்றும் மலேசியா செல்கிறார்.

கதையின் முக்கியமான நகைச்சுவை கதாபாத்திரத்தில் ஜார்ஜ் நடித்துள்ளார். பட ரிலீசுக்குப் பிறகு விஜய் சேதுபதி மற்றும் ஜார்ஜ் கூட்டணி ரசிகர்களிடம் வரவேற்பு பெறும் என்கிறார்கள். மேலும் மலேசியாவைச் சேர்ந்த நடிகர்கள் கணேசன் மற்றும் சுபத்ரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டீசர் வெளியாகி வைரலாகி இருக்கும் இந்த நிலையில் எடிட்டர் ரூபனின் பணி பேசப்பட்டு வருகிறது. அவர் புதிய கண்ணோட்டத்தில் இப்படத்தை எடிட் செய்து வருகிறாராம்.

‘இறவாக் காலம்’ திரைப்படத்திற்குப் பிறகு விஜய் கார்த்திக் கண்ணன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ஏஆர் ரகுமானின் இசை ஆல்பங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் ஆஸ்தான ஒளிப்பதிவாளர். மேலும் பல விளம்பரப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தைப் பொறுத்தவரையில் தென்காசி, மலேசியா மற்றும் தாய்லாந்து என வெவ்வேறு கலாச்சார பின்னணியைக் கொண்ட பகுதியை பதிவு செய்வதில் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வழக்கமான தமிழ்ப் படங்களைப் போல வெளிநாடுகளை காட்சிப்படுத்தாமல் தாய்லாந்து மற்றும் மலேசியா மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் விதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்களாம்.

ஒரு எளிய மனிதன், ஒரு எளிய வாழ்வை வாழ இந்த சமூகம் எவ்வளவு பெரிய தடையாக உள்ளது என்பதையும் அதற்கு தீர்க்கமான தீர்வையும் பேசும் படமாக உருவாகியுள்ளது சிந்துபாத்.

Continue Reading

Tamil Cinema News

90எம்எல் கொடுத்த அடையாளம், தேஜ் ராஜ் மகிழ்ச்சி

Published

on

90எம்எல் கொடுத்த அடையாளம், தேஜ் ராஜ் மகிழ்ச்சி

ஓவியா நடித்து வெளிவந்த ‘90 எம்எல்’ படத்தில் ரவுடி கதாபாத்திரத்தில் நடித்தவர் தேஜ் ராஜ். இவர் பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்லும் நடித்த நடிகர் சரண்ராஜின் மகன்.

90 எம்எல் படத்தில் கிடைத்த வரவேற்புதேஜ்ராஜுக்கு ஒரு நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

அது பற்றி அவர் கூறியதாவது?

“எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது பற்று உண்டு.

நிறைய படங்களைப் பார்த்து சினிமா ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். அதோடு இல்லாமல் எஸ்.ஆர்.எம் காலேஜில் விஸ்காம் முடித்தேன். ரகுராம் மாஸ்டரிடமும், ஸ்ரீதர் மாஸ்டரிடமும் டான்ஸை முறைப்படி கற்றுக் கொண்டேன். பாண்டியன் மாஸ்டரிடம் ஸ்டண்ட் கற்றுக் கொண்டேன். கூத்துபட்டறை, பாலுமகேந்திரா இன்ஸ்டிட்யூட் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள நடிப்பு பள்ளி ஆகியவற்றில் நடிப்பை கற்றுக் கொண்டேன்.

90 ML பட வாய்ப்பு கிடைத்தது. நடித்து படமும் வெளி வந்து எனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இன்று என்னை பார்க்கிற பல பேருக்கும் அடையாளம் தெரியுது. ஆட்டோகிராப் வாங்குறாங், கை கொடுக்கிறாங்க எனக்கு சந்தோஷமா இருக்கு. இன்னும் சாதிக்கனும்னு வெறி இருக்கு. அதற்கான முயற்சியில இருக்கேன்.

நிறைய பேர் வில்லனா நடிப்பீங்களான்னு கேட்கிறாங்க. வில்லனா ஹீரோவாங்கிறது முக்கியமில்லை, பேர் வாங்கனும். அப்பா மாதிரி சினிமாவில நிலைச்சி நிக்கனும்…அது தான் என் ஆசை.

நடிக்க நிறைய வாய்ப்பு வருது, கதை கேட்டுட்டு இருக்கேன். கூடிய சீக்கிரம் எந்த படத்துல நடிக்கிறேன்ங்கிறத சொல்றேன்,” என்கிறார் தேஜ்ராஜ்.

Continue Reading

Tamil Cinema News

‘ஹவுஸ் ஓனர்’ பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன்

Published

on

ஹவுஸ் ஓனர் பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன்

‘ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி’ படங்களை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் அடுத்து இயக்கி முடித்துள்ள படம் ‘ஹவுஸ் ஓனர்’.

படம் பற்றி இயக்குனர் ராமகிருஷ்ணன் கூறுகையில்,

‘‘ஆடுகளம்’ கிஷோர் இந்தப் படத்தில் மிரட்டியிருக்கிறார். பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்ப் நடிப்பை பார்த்தவுடன், நடிப்பு கூட பரம்பரை சொத்துதான் என தோன்றும்.

எனது தோழி விஜயலக்ஷ்மியும் அவளது சகோதரி சரிதாவும் லவ்லினுடைய திறமையை எண்ணி பெருமைப்படலாம். ‘பசங்க’ திரைப்படத்தின் மூலமாக தேசிய விருது பெற்றவரும், ‘கோலிசோடா’ படத்தில் நடித்திருந்த கிஷோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நாம் சராசரி வாழ்வில் சந்திக்கும் ஒரு அம்மாவை ஸ்ரீரஞ்சனி பிரதிபலித்திருக்கிறார். தரமான நல்ல கதைகள் திறமையான நடிகர்களை தானே தேடிக்கொள்ளும் என்பதில் எனக்கு இங்கேதான் நம்பிக்கை பிறந்தது.

இசையமைப்பாளர் ஜிப்ரான் போன்ற கலைஞனுடன் இந்தப் படத்தில் பணியாற்றியதில் பெருமிதம் கொள்கிறேன். மதன் கார்க்கி மற்றும் அனுராதா பாடல்களை எழுதியுள்ளார்கள். பாடல்களுக்கு உயிரூட்டும் விதமாக சின்மயி, சத்யபிரகாஷ் மற்றும் பென்னி தயாள் பாடியுள்ளனர்.

‘மகளிர் மட்டும்’ புகழ் பிரேம் சிறந்த முறையில் எடிட்டிங் செய்துள்ளார். கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவாளராகவும், தபஸ் நாயக் ஆடியோகிராபியும் கையாண்டுள்ளனர்.

இப்படத்தை கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன, அந்த வரிசையில் இந்தப் படமும் வெற்றிபெறும் என நம்புகிறேன்,” என்கிறார்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending