‘காலா’வின் காதலி கண்ணம்மா…

ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படத்தில் அவருடைய தோற்றம் வயதானவராக இருப்பதால் படத்தில் காதல் காட்சிகள் இருக்குமோ, இருக்காதோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது.

‘கபாலி’ படத்தில் அதிகமான காட்சிகளில் ரஜினிகாந்த் வயதான தோற்றத்தில் நடித்திருந்தாலும் பிளாஷ்பேக்கில் இளமையான ரஜினியாக அவருடைய ரசிகர்களைக் கவர்ந்தார்.

‘காலா’ படத்தில் ரஜினிகாந்த் மனைவியாக ஈஸ்வரி ராவ் நடித்திருக்கிறார். காதலியாக ஹுமா குரேஷி நடித்திருக்கிறாராம். 45 வயதுடைய பெண் கதாபாத்திரமாக அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஹிந்தியில் வெளிவந்த ‘காங் ஆப் வாசிப்பூர்’ படத்தில் நடித்த ஹுமா குரேஷி நடிப்பைப் பார்த்துதான் அவரை ‘காலா’ படத்தில் நடிக்க அழைத்தாராம் பா.ரஞ்சித்.

அவருடைய விதவிதமான புகைப்படங்களைப் பார்த்த ரஜினிகாந்திற்கும் அவரைப் பிடித்துவிட உடனே சம்மதம் சொன்னாராம்.

‘காலா’ படத்தில் ஹுமா குரேஷியின் கதாபாத்திரப் பெயர் சரினா. பெண்களுக்கு நம்பிக்கைத் தரக் கூடிய ஒரு கதாபாத்திரமாம். படத்தில் ரஜினி, ஹுமா குரேஷி இடையே ஒரு டூயட் பாடலும் உண்டாம்.

ரஜினிகாந்த், ஹுமா குரேஷி இடையிலான ‘கண்ணம்மா….’ பாடல் நேற்று பாடல் வெளியான உடனே சூப்பர் ஹிட் ஆகிவிட்டது.

Related Posts