‘காளி’ படத்தில் அறிமுகமாவது பெருமை – ஷில்பா மஞ்சுநாத்

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காளி’.

இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகும் ஷில்பா மஞ்சுநாத் தன்னுடைய தமிழ் அறிமுகம் பற்றி கூறியதாவது,

“காளி’ படத்தில் ஒரு கதாநாயகியாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாவது மிக மிக பெருமைக்குரியது. சற்றும் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதை, மற்றும் தமிழ்த் திரையுலகின் திறமைகள் அனைத்தும் சங்கமிக்கும் சக நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் பட்டியல் என இந்தப் படத்தில் வெற்றிக்கு உரிய அனைத்து அம்சங்களும் உள்ளன.

என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் பார்வதி. என் நிஜ வாழ்வில் எப்படி இருப்பேனா, அதற்கு முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரம். நான் நவநாகரீகமான சூழ்நிலையில் வளர்ந்த பெண். பார்வதி கதாபாத்திரமோ முற்றிலும் மாறாக கிராமிய சூழ்நிலையில் வளரும் பெண். பல்வேறு பருவத்தைப் பிரதிபலிக்கும் பாத்திரம். மனோதத்துவ ரீதியாக மிக மிக பலம் பொருந்திய கதாபாத்திரம்.

‘அரும்பே’ பாடல் நான் எண்ணி கூட பார்த்திராத உயரத்தை தந்துள்ளது.ரசிகர்கள் என்னை ஏற்று கொண்டு என்னை மேலும் உச்சத்தில் கொண்டு போவார்கள் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன். தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா, கதாநாயகன் விஜய் ஆண்டனி, மற்றும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஆகியோருக்கு நான் காலம் முழுக்க கடமைப்பட்டுள்ளேன்,” என்கிறார் ஷில்பா மஞ்சுநாத்.

‘காளி’ மே 18ம் தேதி வெளியாகிறது.

Related Posts