Connect with us

Upcoming Movies

காதல் முன்னேற்றக் கழகம் – விரைவில்…திரையில்…

Published

on

kadhal munnetra kazhagam

ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்.’

இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன் கதாநாயகனாக நடிக்க, நாயகியாக சாந்தினி நடித்துள்ளார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர், ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் மாணிக் சத்யா கூறியதாவது,

“இந்தப் படம் 1985 கால கட்டங்களில் நடக்கின்ற கதை. கதாநாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர். அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது, இது என்று வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக இருப்பவர்.

துரோகத்தில் மிக கொடூரமான துரோகமாக கருதப்படுவது நம்பிக்கை துரோகம் தான். அதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக மிகக் கொடூரமானது. அதைத்தான் இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறோம். யதார்த்தமான கதையாக படம் வந்திருக்கிறது. கிராமப்புற வாழ்வியலை பதிவிட்டிருக்கிறோம். படத்தை பார்த்த பாண்டியராஜன் சார் பாராட்டியதுடன் 15 நிமிட கிளைமாக்ஸ் காட்சிகள் நெருப்பு மாதிரி இருக்கிறது என்றார்.

சிவசேனாதிபதி படத்தின் கதைக்கு முதுகெலும்பாய் ட்விஸ்ட் கேரக்டராக ஜொலிக்கிறார். நட்பை வலுவாக சொல்லி இருக்கிறோம்.

படப்பிடிப்பு சென்னை, ஊட்டி, கடலூர் மாவட்டம், திட்டக்குடி, விருத்தாசலம், பெரம்பலூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது,” என்றார் இயக்குனர் மாணிக் சத்யா.

ஒளிப்பதிவு – ஹாரிஸ் கிருஷ்ணன்
இசை – பி.சி.சிவன்
பாடல்கள் – யுகபாரதி, மோகன்ராஜ், உமாசுப்ரமணியம், மாணிக்சத்யா
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
நடனம் – அசோக்ராஜா
சண்டை பயிற்சி – அம்ரீன் பக்கர்
கலை – பிரகதீஸ்வரன்
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி
தயாரிப்பு நிர்வாகம் – முத்தையா,விஜயகுமார்
தயாரிப்பு – மலர்க்கொடி முருகன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மாணிக் சத்யா

Upcoming Movies

ஒபாமா உங்களுக்காக – விரைவில்…திரையில்…

Published

on

ஒபாமா உங்களுக்காக - விரைவில்...திரையில்...

‘அது வேற, இது வேற’ என்ற படத்தைத் தயாரித்த ஜே.பி.ஜே பிலிம்ஸ் எஸ்.ஜெயசீலன் அடுத்து தயாரிக்கும் படம் ‘ஒபாமா உங்களுக்காக’.

“பலரிடம் கதை கேட்டு, ஆராய்ந்து தேர்வு செய்த படம் தான் ‘ஒபாமா உங்களுக்காக’. படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அரசியலை அடித்துத் துவைத்து காயப் போடுகிற படமாக உருவாகி இருக்கும் படம் இது,” என்கிறார் தயாரிப்பளார்

பிருத்வி நாயகனாக நடிக்கிறார். பூர்ணிஷா நாயகியாக அறிமுகமாகிறார். ஜனகராஜ் இது வரை ஏற்றிராத புது அவதாரம் ஏற்கிறார்.

விக்ரமன், கே.எஸ். ரவிக்குமார் இயக்குனர்களாகவே நடிக்கிறார்கள். ரமேஷ்கண்ணா, T சிவா, நித்யா, ராம்ராஜ், தளபதி தினேஷ், செம்புலி ஜெகன், கயல் தேவராஜ், கோதண்டம், சரத் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்து ஒரு பாடலுக்கு நடனமாடியும் இருக்கிறார்.

‘பாஸ்மார்க்’ படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் தனது பெயரை நாநி பாலா என்று மாற்றிக் கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளார்.

படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது,

“தாமஸ் ஆல்வா எடிசன் போனை கண்டுபிடித்தது பேசுவதற்காகத்தான். ஆனால், ஆண்ட்ராய்ட் மொபைலில் பார்க்க முடியாததோ, சாதிக்க முடியாததோ எதுவும் இல்லை என்றாகி விட்டது. ‘ஒபாமா உங்களுக்காக’ படத்தின் கதையின் நாயகனாக செல்போன் ஒன்று முக்கியமாக இடம் பெறுகிறது. அரசியலை கிழித்து நார் நாராகத் தொங்க விடும் படமாக இது இருக்கும்,” என்கிறார்.

இசை – ஸ்ரீகாந்த்தேவா
பாடல்கள் – வைரமுத்து,
எடிட்டிங் – B.லெனின்
ஒளிப்பதிவு – தினேஷ்ஸ்ரீநிவாஸ்
நடனம் – சுரேஷ்
ஸ்டண்ட் – தளபதி தினேஷ்
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி
தயாரிப்பு மேற்பார்வை – பெஞ்சமின்
தயாரிப்பு – ஜெயசீலன்
இயக்கம் – நாநி பாலா

Continue Reading

Upcoming Movies

மயூரன் – விரைவில்…திரையில்…

Published

on

மயூரன் - விரைவில்...திரையில்...

PFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K.அசோக்குமார்P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘மயூரன்’.

இயக்குனர் பாலாவின் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் உதவியாளராகப் பணியாற்றிய நந்தன் சுப்பராயன் இப்படத்தை இயக்குகிறார்.

மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள்.

வேலாராமமூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ் ), அமுதவாணன்( தாரை தப்பட்டை ), அஸ்மிதா ( மிஸ் பெமினா வின்னர் ) மற்றும் கைலாஷ், சாஷி, பாலாஜிராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பற்றி இயக்குனர் நந்தன் சுப்பராயன் கூறியதாவது,

“சாதாரண குடும்பத்தின் கனவுகளை சுமந்துகொண்டு விடுதியில் தங்கி பொறியியல் உயர்கல்வி படிக்க வரும் மாணவன், ஒரு நள்ளிரவில் காணாமல் போனால் என்னவாகும் என்பதே கதை.

மொத்த குடும்பத்தின் ஒற்றை ஆதாரமான அவனைத் தேடிச் செல்கையில் காணாமல் போனதின் மர்ம முடிச்சுகள் மேலும், மேலும் இறுகி, அது சிக்கல்களையும், பிரச்சனைகளையும் உருவாக்குகின்றது. கல்லூரி விடுதிகள் என்பது வெறும் தங்கிப் போகும் வாடகை சத்திரம் அல்ல, அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். அவர்களது எதிர்காலத்தை நல்ல விதமாகவோ மோசமானதாகவோ மாற்றும் ரசவாதக் கூடம்.

நட்பு, அன்பு, நெகிழ்வு, குற்றப் பின்னணி, குரூர மனம், எனும் பல்வேறு மனித இழைகளால் நெய்யப்பட்ட உலகம்தான் கல்லூரி விடுதிகள்.

சாதாரண கூழாங்கற்கள், வைரக்கற்களாகவும், வைரக்கற்கள் கண்ணிமைக்கும் வினாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம். அங்கு ஏற்படும் பிரச்சனைகள் ஒரு தனி மனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்துப் போடுகிறது என்பதைப் பற்றி பேசும்
படம் தான் மயூரன். ஒரு அருமையான கதைக் களத்தை விறுவிறுப்பான திரைக்கதை தேன் தடவி உருவாக்கியிருக்கிறோம்.

படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது,’‘ என்கிறார் இயக்குனர் நந்தன் சுப்பராயன்.

ஒளிப்பதிவு – பரமேஷ்வர் ( இவர் சந்தோஷ்சிவனிடம் உதவியாளராக பணியாற்றியவர் )
இசை – ஜுபின் ( பழைய வண்ணாரப்பேட்டை ) மற்றும் ஜெரார்ட் இருவரும்.
பாடல்கள் – குகை மா.புகழேந்தி
எடிட்டிங் – அஸ்வின்
கலை – M.பிரகாஷ்
ஸ்டன்ட் – டான்அசோக்
நடனம் – ஜாய்மதி
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நந்தன் சுப்பராயன்

Continue Reading

Upcoming Movies

நிக்கிரகன் – படப்பிடிப்பில்…

Published

on

நிக்கிரகன் - படப்பிடிப்பில்.

சைதன்யா சினி கிரியேஷன்ஸ் சார்பாக, சைதன்யா சங்கரன் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் ‘நிக்கிரகன்’.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில், உருவாகும் இப்படத்தில் பிரஸாந்த் தாவீத், கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இரு கல்லூரி மாணவர்கள், பகுதி நேர வேலையாக, ஒரு எஃப் எம் சேனலில் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்க்கிறார்கள். அவர்கள் வழங்கும் ஒரு புதுமையான, கலகலப்பான நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்கின்றனர். பின்னர் அதையே முழுநேர வேலையாகவும் மாற்றிக் கொண்டுவிட, வேடிக்கையாக சென்று கொண்டிருக்கும் அவர்களது வாழ்க்கை, அவர்களே அறியாத வண்ணம் திடீரென தடம் மாறுகிறது. இணையத்தில் மறைந்துள்ள ஆபத்துகள் என்னென்ன, அதில் சிக்கிக்கொண்ட அவர்கள், அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதைக்களம்.

நம் அன்றாட வாழ்வில் கடந்து வருகின்ற, சற்றே முக்கியத்துவமற்ற நிகழ்வுகள் போல தோன்றும் ஒரு விஷயம், ஒரு மனிதனின் வாழ்வையே மாற்றிப் போடும் வல்லமை படைத்தது என்பதை இத்திரைப்படம் ஜனரஞ்சகமான காட்சி அமைப்புகளுடன், சரி விகிதத்தில் திகிலும் கலந்து உருவாகி வருகிறது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:

முக்கிய வேடங்களில்: பிரஷாந்த் தாவீத், கனி எஸ் மற்றும் பலர்
தயாரிப்பு: சைதன்யா சங்கரன்
படத்தொகுப்பு: வினோத் ஜாக்சன் & ஷாஹித்
ஒளிப்பதிவு: அரவிந்த் ஜே
இசை: சனாதன்
எழுத்தும் இயக்கமும்: நஸ்ரேன் சாம்

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!