கலைஞர் கருணாநிதி உடல் நல்லடக்கம்

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி நேற்று மாலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

அவரது உடல் இன்று காலை முதல் சென்னை ராஜாஜி அரங்கில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், முக்கியப் பிரமுகர்கள், லட்சக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மாலை 4 மணிக்கு கலைஞர் இறுதி ஊர்வலம் புறப்பட்டு 6 மணி அளவில் அவருடைய உடல் அண்ணா நினைவிடத்திற்கு வந்தது.

பின்னர் ராணுவ மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் பிரதமர் தேவ கவுடா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், தமிழக அமைச்சர் ஜெயக்குமார், பிற கட்சித் தலைவர்கள் பலரும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.

7 மணி அளவில் சந்தனப் பேழையில் கலைஞர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. லட்சக் கணக்கான திமுக தொண்டர்களும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related Posts