அப்பாவும் ‘ஜி’, மகளும் ‘ஜி,’ ‘விஸ்வவரூபம் 2’ சுவாரசியம்

கமல்ஹாசன் இயக்கம் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வருபம் 2 படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது.

இந்தி டிரைலரை நடிகர் அமீர் கான், தெலுங்கு டிரைலரை நடிகர் ஜுனியர் என்டிஆர், தமிழ் டிரைலரை கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் வெளியிட்டார்கள்.

அப்பா கமல் ஹாசன் நடித்துள்ள டிரைலரை வெளியிட்டது குறித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட ஸ்ருதி டிவிட்டரில் அப்பாவை ‘கமல்ஹாசன் ஜி’ என்று  குறிப்பிட்டார்.

பதிலுக்கு கமல் ஹாசன் மகள் ஸ்ருதிக்கு நன்றி தெரிவிக்கும் போது அவரை ‘ஜி’ என்று குறிப்பிட்டார்.

அப்பாவும் மகளும் மாறி மாறி “ஜி” என்று கூறிக் கொண்டதற்கு ரசிகர்கள் டிவிட்டரில் கிண்டல் செய்து வருகிறார்கள்.

 

Related Posts