Connect with us

Uncategorized

‘காஞ்சனா 3’ பாடல்களில் ‘DooPaaDoo’ பணி என்ன ?

Published

on

காஞ்சனா 3 பாடல்களில் 'DooPaaDoo' பணி என்ன ?

ராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில் ஏப்ரல் 19ம் தேதி வெளியாக உள்ள படம் ‘காஞ்சனா 3’.

அப்படத்தின் இசையமைப்பு என்ற இடத்தில் DooPaaDoo என்ற பெயர் இடம் பெற்றிருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும். அது என்ன என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கான விளக்கம் இதோ…

DooPaaDoo என்பது இசையில் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தும் ஒரு இடம். திறமையான இசைக்கலைஞர்களை கண்டுபிடிப்பது, அவர்களுடன் இணைந்து இசையை உருவாக்குவது தான் இவர்களின் நோக்கம். இன்று, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் முழுமையான ஆல்பத்தை உருவாக்கி, தமிழ் இசை துறையில் DooPaaDoo தன் பெயரை பதித்திருக்கிறது. DooPaaDoo சுயாதீன இசைக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வசதியான தளத்தை உருவாக்கி கொடுக்கிறது.

பாடலாசிரியர் மற்றும் DooPaaDooவின் இணை நிறுவனருமான மதன் கார்க்கி இது குறித்து கூறும்போது,

“இது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. நான் இதை பெருமையால் சொல்லவில்லை, திறமையான சுயாதீன கலைஞர்கள் எங்கள் தளத்தின் மூலம் இசைத்துறையில் புகழ் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2017ல் ராகவா லாரன்ஸ் மாஸ்டரை சந்தித்தபோது, ​​நாங்கள் அவருக்கு DooPaaDoo பற்றிய புதிய கருத்துகளை அறிமுகப்படுத்தினோம்.

புதிய முயற்சிகளை பரிசோதித்து பார்க்க எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக் கொண்ட அவர், எங்கள் ஸ்டுடியோவிற்கு வந்தார். அவரது படத்தின் கதையின் சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்டு பாடல்களை பட்டியலிட்டோம். நாங்கள் அவருக்கு அளித்த அனைத்து பாடல்களையும் கேட்ட அவர், ஆறு பாடல்களை தேர்ந்தெடுத்தார். மேலும் மீதமுள்ள பாடல்களை அவரது அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்துவதாக எங்களுக்கு உறுதியளித்தார்.

காஞ்சனா 3ல் மிகவும் தனித்தன்மையான விஷயம் என்னவென்றால், பாடலின் பின்னணியில் உள்ள எந்த பெயரையோ அல்லது கலைஞர்களின் அடையாளங்களையோ நாங்கள் வெளிப்படுத்தவில்லை. நாங்கள் நினைத்தது வெற்றியாக மாறி, DooPaaDooவை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியிருக்கிறது.

கலைஞர்களின் பெயர்களை தெரிந்து கொள்ளாமலேயே காஞ்சனா 3 பாடல்களை ரசிகர்கள் ரசிப்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை இது விரைவில் ஒரு நடைமுறையாகவும் மாறலாம். அதாவது, ஒரு சிறந்த இசையின் வெற்றி கலைஞரின் திறமை, பாடல்களின் தரம் மற்றும் கலையின் புத்துணர்வைப் பொறுத்து இருக்குமே தவிர, அந்த இசையுடன் சம்பந்தப்பட்ட பிராண்டை ஒட்டி இருக்காது,” என்கிறார் மதன் கார்க்கி.

Continue Reading

Uncategorized

சந்தானம் நடிக்கும் ‘A 1’ – டீசர்

Published

on

சந்தானம் நடிக்கும் A 1 - டீசர் - 4 Tamil Cinema

சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ஜான்சன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சந்தானம், தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் A 1.

Continue Reading

Uncategorized

ஜாஸ்மின் – லேசா வலிச்சுதா – பாடல் வரிகள் வீடியோ

Published

on

ஜாஸ்மின் - லேசா வலிச்சுதா - பாடல் வரிகள் வீடியோ

ஸ்ரீ சிவாஜி சினிமாஸ், வொன்டர்லேன்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜெகன்சாய் இயக்கத்தில், சத்யா இசையமைப்பில், அனிக்கா, திராவிடன், இளங்கோ பொன்னையா, வைஷாலி மற்றும் பலர் நடிக்கும் படம் ஜாஸ்மின்.

Continue Reading

Uncategorized

ரொம்ப அழகான படம் ‘கண்ணே கலைமானே’

படம் பார்த்து விஜய் சேதுபதி பாராட்டு

Published

on

kanne-kalaimane-news

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கண்ணே கலைமானே’.

படத்தைப் பார்த்துவிட்டு விஜய் சேதுபதி நெகிழ்ச்சியுடன் மனம் திறந்து கூறியதாவது,

“இயக்குனர் சீனு ராமசாமி சார் இயக்கத்துல, உதயநிதி ஸ்டாலின் சார் நடிச்ச கண்ணே கலைமானே படம் பார்த்தேன். இது ரொம்ப அன்பான, அழகான ஒரு திரைப்படம்.

நல்ல இன்பர்மேஷன் இருக்கு. அன்பைப் பத்தின அழகான பார்வை இந்த படம். உதய் சார் சூப்பரா நடிச்சுருக்காரு. நான் பர்ஸ்ட் டைம் அவர இப்படி பாக்குறேன். ரொம்ப நிதானமா, ரொம்ப அழகா நடிச்சுருக்கார்.

தமன்னாவா இருக்கட்டும், வடிவுக்கரசி அம்மா, ‘பூ’ ராமு சாரா இருக்கட்டும். எல்லாருமே ரொம்ப நல்லா நடிச்சுருக்காங்க. ரொம்ப நல்ல படம், அழகான வசனம். ரசிச்சு பார்க்க வேண்டிய ரொம்ப அழகான திரைப்படம் கண்ணே கலைமானே. மிஸ் பண்ணாம தியேட்டர்ல வந்து பாருங்க,” எனப் பாராட்டியுள்ளார்.

‘கண்ணே கலைமானே’ வரும் பிப்ரவரி 22ம் தேதி வெளியாகிறது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!