January 22, 2019

தனுஷின் ‘கொல வெறி’ பாடல் சாதனை முறியடிப்பு

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு பாடல் ‘டிரென்ட்’ ஆகுமா என்ற பரபரப்பை ஏற்படுத்திய பாடல் ‘ஒய் திஸ் கொலவெறி’.

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிக்க, அனிருத் இசையில், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘3’ படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடல் படம் வெளிவருவதற்கு முன்பே யு டியூபில் வெளியிடப்பட்டது.

பாடல் வெளியான சில மணி நேரங்களில் வைரலாகி இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் புகழ் பெற்றது.

அந்தப் பாடல்தான் இதுவரையில் தென்னிந்திய சினிமா பாடல்களில் யு டியூபில் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடல் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. அந்த சாதனையை தற்போது தெலுங்குப் படமான ‘ஃபிடா’ படத்தில் இடம் பெற்ற ‘வச்சிந்தே’ என்ற பாடல் முறியடித்துள்ளது.

‘கொல வெறி’ பாடல் 17 கோடியே 26 லட்சம் பார்வைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ‘வச்சிந்தே’ பாடல் 17 கோடியே 36 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

‘வச்சிந்தே’ பாடலில் சாய் பல்லவியின் நடனம்தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒன்றாக இருக்கிறது. அதுதான் பாடல் இந்த அளவிற்கு சாதனை புரியவும் காரணமாக இருக்கிறது.

‘கொல வெறி’ நாயகன் தனுஷ், ‘வச்சிந்தே’ நாயகி சாய் பல்லவி இருவரும் நடித்து வெளிவந்துள்ள ‘மாரி 2’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘ரௌடி பேபி’ பாடல் கடந்த மூன்று நாட்களாக யு டியுப் டிரென்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. அது மட்டுமல்ல, மூன்றே நாட்களில் 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

‘ரௌடி பேபி’ பாடலுக்குத் தற்போது கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்தால் அந்தப் பாடல் ‘கொல வெறி, வச்சிந்தே’ சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒய் திஸ் கொலவெறி பாடல் வீடியோ…

வச்சிந்தே பாடல் வீடியோ…

ரௌடி பேபி பாடல்…

Related Posts