January 16, 2019

கூத்தன் – விரைவில்…திரையில்…

நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கூத்தன்’.

ஏ.எல்.வெங்கி இயக்கும் இந்தப் படத்தில் அறிமுக நாயகன் ராஜ்குமார், அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜுனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்னன், ஸ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என பெரிய நட்சத்திரக் கூட்டமே நடித்திருக்கிறது.

சினிமாவில் நடிகர்கள் பின்னால் நடனமாடும் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சினிமாவை பின்னனியாகக் கொண்டு இதுவரை நிறைய படங்கள் வந்திருந்தாலும், இந்தப் படம் புதிய கோணத்தில் துணை நடிகர்களின் வாழ்க்கையை பேசும் படமாக இருக்கும்.

இப்படத்தின் முதல் பார்வையை சமீபத்தில் நடிகர் பிரபு வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இசை – பாலாஜி
ஒளிப்பதிவு – மாடசாமி
படத்தொகுப்பு – பீட்டர் பாபியா
கலை – சி.ஜி.ஆனந்த்
நடனம் – அஷோக் ராஜா, சுரேஷ்
நிர்வாகத் தயாரிப்பு மனோஜ் கிருஷ்ணா
தயாரிப்பு நீல்கரிஸ் முருகன்
இயக்கம் – ஏ.எல்.வெங்கி

Related Posts