October 21, 2018

குணச்சித்திர வேடங்களில் நடிக்க விரும்பும் லதா ராவ்

சின்னத் திரையில் தொடர்களில் நடிகையாக அறிமுகமாக நான்கு மொழிகளில் நடித்து சினிமாவிலும் நடித்து வரும் லதா ராவ், குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“சின்னத் திரையில் இருந்து ஒதுங்கி, வெள்ளித் திரையில் நடிக்க எனது முயற்சிகளை ஆரம்பித்தேன். முதலில் வடிவேலுக்கு ஜோடியாக ‘தில்லாலங்கடி’ படத்தில் காமெடியான கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானேன். அதைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் இயக்கத்தில் ‘ஈசன்’, சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘நிமிர்ந்து நில்’, கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ‘முடிஞ்சா இவன புடி’ ஆகிய படங்களில் நடித்தேன். இப்பொழுது வெளியாகியுள்ள ‘கடிகார மனிதர்கள்’ படத்தில் கதையின் நாயகியாக அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

அடுத்து பரத் நடிக்கும் ‘8’ ,விவேக், தேவயானி நடிக்கும் ‘எழுமின்’ படங்களில் நடித்திருக்கிறேன். தொடர்ந்து சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கும் தயாராக இருக்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts