Connect with us

Tamil Cinema News

யு டியூப் – தமிழ்ப் பாடல்களில் நம்பர் 1 இடத்தில் ‘ரௌடி பேபி’

‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் சாதனை முறியடிப்பு…

Published

on

யு டியூப் வீடியோ இணையதளத்தில் தமிழ்த் திரைப்படப் பாடல்களில் நம்பர் 1 இடத்தை ‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி…’ பாடல் பிடித்துள்ளது.

இதுவரை முதலிடத்தில் இருந்த ‘3’ திரைப்பட பாடல் ஆல்பம் ஆன ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலின் பார்வை எண்ணிக்கையான 175 மில்லியன் (17 கோடியே 54 லட்சம் +) என்பதைக் கடந்து ‘ரௌடி பேபி’ வீடியோ பாடல் 177 மில்லியனைப் (17 கோடியே 74 லட்சம் +) பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது.

‘ரௌடி பேபி’ வீடியோ பாடல் கடந்த மாதம் 2ம் தேதி யு டியூபில் வெளியிடப்பட்டது. வெளியானதிலிருந்தே அந்தப் பாடல் தொடர்ந்து பல புதுப்புது சாதனைகளைப் படைத்த வண்ணம் இருந்தது.

யுவனின் மனதைக் கவரும் இசை, தனுஷின் குஷியான வரிகள், பிரபுதேவாவின் கொண்டாட்டமான நடன அமைப்பு, தனுஷ், சாய் பல்லவி ஆகியோரின் அசத்தலான நடனம், தனுஷ், தீ இருவரின் வசீகரிக்கும் குரல் என அனைத்துமே பாடலில் சிறப்பாக அமைந்தது.

தமிழ் ரசிகர்களைக் கடந்து, இந்திய ரசிகர்களை ரசிக்க வைத்து இப்போது உலக ரசிகர்களையும் தினமும் ரசிக்க வைக்கும் பாடலாக இந்தப் பாடல் அமைந்துவிட்டது.

தென்னிந்திய அளவில் முதலிடத்தைப் பிடிக்கும் திரைப்படப் பாடலாக இடம் பிடிக்க இந்தப் பாடலுக்கு இன்னும் சில லட்சம் பார்வைகளே தேவைப்படுகிறது. அதையும் அடுத்த சில நாட்களில் இந்தப் பாடல் நிகழ்த்திவிடும்.

இன்னும் ஒரு வாரத்திற்குள்ளாக 200 மில்லியன் பார்வைகளையும் பெற்று மேலும் ஒரு புதிய சாதனையை இந்தப் பாடல் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யு டியூபில் முதல் இரண்டு இடத்தைப் பிடித்துள்ள தமிழ்த் திரைப்படப் பாடல்களுமே தனுஷ் எழுதி பாடிய பாடல்கள் என்பது கூடுதல் தகவல்.

ஒய் திஸ் கொலவெறி பாடல் வீடியோ

Tamil Cinema News

ஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு

Published

on

soundarya-visakan-honeymoon

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, நடிகரும் தொழிலதிபருமான விசாகன் இருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் அவர்களது திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

திருமணத்திற்குப் பின் சௌந்தர்யா, விசாகன் தம்பதியினர் தேனிலவுக்காக வடக்கு ஐரோப்பாவில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்துக்குச் சென்றுள்ளனர்.

இது பற்றிய தகவலை சௌந்தர்யா புகைப்படங்களுடன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

Continue Reading

Tamil Cinema News

‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு

Published

on

ellam-mela-irukkuravan-parthuppan

விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் ராவுத்தர் மூவீஸ்.

விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான இப்ராகிம் ராவுத்தருக்குச் சொந்தமான நிறுவனம் அது.

அந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ எனும் படத்தை தயாரித்து வருகிறது.

இப்ராகிம் ராவுத்தரின் மகன் முகம்மது அபுபக்கர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கிறார்.

கதாநாயகனாக ஆரி நடிக்க, கதாநாயகியாக சாஷ்வி பாலா நடிக்கிறார்.

இப்படத்தின் முதல் பார்வையை நடிகர் விஷ்ணு விஷால் இன்று வெளியிட்டார்.

இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Continue Reading

Tamil Cinema News

எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்

Published

on

gv-prakash-new-movie

பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.

இந்த நிறுவனம் தற்போது சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இன்று துவங்கி  உள்ளார்கள்.

இதன் துவக்க விழா இன்று எளிமையாக ஒரு கோயிலில் நடை பெற்றது.

மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது.

எழில் அவருடைய பாணியிலான காமெடி படமாகத்தான் இந்தப் படத்தை இயக்க உள்ளாராம்.

மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

No feed items found.

Trending