Connect with us

Tamil Cinema News

பெரிய பஞ்சாயத்துக்குப் பின் ஆரம்பமாகும் ‘மின்னல் வீரன்’

Published

on

minnal veeran compramise

எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கும் படம் ‘மின்னல் வீரன்’.

மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் இந்த படத்தில் அதர்வா கதாநாயகனாக ஒப்பந்தமாகி, படத்தின் வேலைகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் அதர்வா தயாரித்து நடித்த ‘செம போத ஆகாத’ படம் வெளியானது. அந்தப் படம் ஒரு கட்டத்தில் ரிலீஸுக்கு தயாராவதில் பொருளாதார ரீதியாக சிரமத்தை சந்தித்தபோது, அப்படத்தை நல்லபடியாக வெளியிடுவதற்கு தனது எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் உதவிக்கரம் நீட்டினார் தயாரிப்பாளர் மதியழகன்.

ஆனால் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியன்று தன் பக்கம் உள்ள சில பிரச்சனைகளை அதர்வா சரி செய்து படத்தை மதியழகனுக்கு ஒப்படைப்பதற்குள், முதல் இரண்டு காட்சிகள் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. அதனால் அந்தப் படத்தை விநியோகஸ்தர்களுக்கு டிஸ்ட்ரிபியூஷன் முறையில் கொடுக்க வேண்டியதாகி விட்டது. அப்படி வெளியிட்ட வகையில் மதியழகனுக்கு சுமார் 5 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டது.

அதனால், அதர்வா தன்னால் ஏற்பட்ட 5 கோடி ரூபாய் இழப்பை சரிக்கட்டும் விதமாக சம்பளம் வாங்காமல் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்குள் ஒரு படம் நடித்துத் தருவதாக கூறினார். ஆனால் தயாரிப்பாளர் மதியழகனோ, பட்ஜெட்டை பார்க்காமல் நல்ல தரமான படங்களையே கொடுக்க விரும்புவர் என்பதால், தான் ஏற்கனவே திட்டமிட்டு, படப்பிடிப்பிற்கு தயார்நிலையில் இருந்த மின்னல் வீரன் படத்தில்தான் அதர்வா நடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால் இந்த பிரச்சனை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இருவரையும் அழைத்து சுமார் நான்கரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய விஷால், தயாரிப்பாளர் தரப்பில் உள்ள நியாயங்களை முழுதுமாகக் கேட்டுவிட்டு, ‘மின்னல் வீரன்’ படத்திலேயே அதர்வாவை நடித்துக் கொடுக்கும்படியும் அது அவரது கேரியருக்கு எவ்வளவு பக்கபலமாக இருக்கும் என்பதையும் எடுத்துக்கூறி அறிவுறுத்தினார்.

தயாரிப்பாளரின் உறுதியையும் விஷால் பேச்சில் இருந்த நியாயத்தையும் உணர்ந்த அதர்வா, இறுதியில் மின்னல் வீரன் படத்திலேயே தான் நடிப்பதாக முழுமனதுடன் ஒப்புக்கொண்டார். இந்தப் படத்தை விரைவாக முடித்து ஆறு மாதங்களுக்குள் வெளியிட உதவுவதாகவும் அவர் விஷால் முன்பாக வாக்குறுதி அளித்துள்ளார். அதை தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பை உடனே ஆரம்பியுங்கள் என்றும் அதற்கு தயாரிப்பாளர் சங்கம் பக்கபலமாக நிற்கும் என்றும் என்றும் விஷால் ஊக்கம் கொடுத்துள்ளார்.

நாயகன் அதர்வாவுக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார். தீபக் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Tamil Cinema News

விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’

எஸ்.பி. ஜனநாதன் இயக்க, ஸ்ருதிஹாசன் நாயகி…

Published

on

லாபம்

விஜய் சேதுபதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தைத் தயாரித்த 7சிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், விஜய் சேதுபதியின் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிக்கும் படம் ‘லாபம்’.

அதன் டேக் லைன் ஆக ‘பகல் கொள்ளை’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

‘இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படங்களை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதிஹாசன் முதன்முறையாக நடிக்கிறார். இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஸ்ருதிஹாசன் தமிழில் நடிக்கும் படம் இது.

ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இமான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

இன்று காலை இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது.

சற்று முன்னர் இப்படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து படங்களை இயக்குபவரான ஜனநாதனின் இந்தப் பெயரும், அதற்கான டேக் லைனும் படம் வெளிவரும் போது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

 

Continue Reading

Tamil Cinema News

வில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு

Published

on

வில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு

பல படங்களில் நடித்த நடிகர் நிதின் சத்யா, ‘ஜருகண்டி’ படத்திற்குப் பிறகு அவருடைய ஷ்வேத் – எ நிதின்சத்யா புரொட்கஷன் ஹவுஸ் சார்பாக தயாரிக்கும் படத்தில் வைபவ் நாயகனாக நடிக்க வாணி போஜன் நாயகியாக நடிக்கிறார்.

ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வைபவை தெறிக்கவிடும் வில்லனாக இயக்குனர் வெங்கட்பிரபு நடிக்கின்றார். இவர் வில்லனாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய SG சார்லஸ் இயக்குனராக அறிமுகமாகிறார்.

தற்போது இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இப்படத்தின் முதல் பார்வை டைட்டில் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது.

Continue Reading

Tamil Cinema News

சிவா இயக்கத்தில் சூர்யா

Published

on

சிவா இயக்கத்தில் சூர்யா

‘சிறுத்தை, வேதாளம், விவேகம், விஸ்வாசம்’ படங்களை இயக்கிய சிவா அடுத்து சூர்யா நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

தெலுங்கில் 2008ல் வெளிவந்த ‘சௌர்யம், சன்கம்’ ஆகிய படங்களை இயக்கிய சிவா 2011ல் வெளிவந்த கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படத்தின் மூலம் தமிழில் இயக்குனர் ஆக அறிமுகமானார்.

அவரை தமிழில் இயக்குனராக அறிமுகப்படுத்திய ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்கு 8 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியானது.

இந்தப் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத் தயாரிப்பில் நடிக்கிறார் சூர்யா.

சூர்யாவின் 39வது படம் இது. சூர்யா நடித்துள்ள ‘என்ஜிகே, காப்பான்’ ஆகிய படங்கள் இந்த ஆண்டில் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. மேலும், சுதா கோங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தில் தற்போது நடித்து வருகீறார்.

சூர்யாவின் 39வது படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!