January 16, 2019

மலையாளத் திரையுலகத்திற்கு 12 தேசிய விருதுகள்

65வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

இவற்றில் அதிகமான விருதுகளை மலையாளத் திரையுலகம் பெற்று ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மொத்தம் 66 படங்களுக்கான விண்ணப்பங்கள் தேசிய விருதுகளுக்காக அனுப்பப்பட்டதில் 12 விருதுகள் மலையாளப் படங்களுக்காகக் கிடைத்துள்ளன.

அந்த 12 விருதுகளின் விவரம்…

சிறந்த இயக்குனர் – ஜெயராஜ் (பயநாநகம்)
சிறந்த ஒரிஜனல் திரைக்கதை – சஞ்சீவ் பழூர் (தொண்டிமுதலும் திரிக்ஷாஷியும்)
சிறந்த தழுவல் திரைக்கதை – ஜெயராஜ் (பயநாநகம்)
சிறந்த பாடகர் – கே.ஜே. யேசுதாஸ் (போயி மறஞ்ச காலம்…பாடல்)
சிறந்த ஒளிப்பதிவாளர் – நிகில் எஸ். பிரவீன் (பயநாநகம்)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – சந்தோஷ் ராமன் (டேக் ஆப்)
சிறந்த துணை நடிகர் – பகத் பாசில் (தொண்டிமுதலும் திரிக்ஷாஷியும்)
சிறந்த நடுவர் விருது – பார்வதி (டேக் ஆப்)
சிறந்த நடுவர் விருது – டேக் ஆஃப் – திரைப்படம்
சிறந்த இசை – (திரைப்படம் அல்லாத விருது) – ரமேஷ் நாராயணன் (Shored Of Liberty)
சிறந்த மானுடவியல் – (திரைப்படம் அல்லாத விருது) – அனிஸ் கே மாப்பிள்ள – The Slave Genesis
சிறந்த திரைப்படம் – சமூகப் பிரச்சினைகள் – ஆலோருக்கம்

‘விஸ்வாசபூர்வம் மன்சூர்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ‘போயி மறஞ்சகாலம்….’ என்ற பாடலுக்காக தேசிய விருது பெறுகிறார் கே.ஜே. யேசதாஸ்.

25 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 8வது முறையாகப் பெறுகிறார் யேசுதாஸ்.

இதற்கு முன் 1993, 1991, 1987, 1982, 1976, 1973, 1972 ஆகிய வருடங்களில் தேசிய விருதைப் பெற்றிருக்கிறார். ஆனால், அதில் ஒரு முறை கூட தமிழ்ப் படத்திற்காக பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Posts