January 22, 2019

நீல குயில் – விஜய் டிவியில் புதிய தொடர்

விஜய் டிவியில் பல தொடர்கள் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அந்த வரிசையில் மற்றுமொரு தொடராக ‘நீல குயில்’ என்ற புதிய தொடர் இன்று 17 டிசம்பர் திங்கள் முதல் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இந்த ‘நீல குயில்’ தொடரில் சிட்டு என்னும் பழங்குடி கிராமத்து பெண் சூழ்நிலை காரணமாக அந்த ஊரைப் பற்றி தெரிந்து கொள்ள வரும் ஜெய்சூர்யாவை கட்டாயத் திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது. ஜெய் சூர்யா, வேறு ஒருவருடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டவர். அந்த கிராமத்தினர் ஜெய் சூர்யாவுடன் சிட்டுவை நகரத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.

ஜெய் சூர்யா, சிட்டுவுடன் திருமணம் ஆனதை குடும்பத்தினரிடம் மறைத்து விடுகிறார். அந்த வீட்டிலேயே சிட்டுவும் வேலைக்காரியாகத் தங்கி விடுகிறார். சிட்டு, தனக்கும், ஜெய்யுக்கும் திருமணம் ஆனதை குடும்பத்தினரிடம் எப்படி தெரிவிப்பார், சிட்டு, ஜெய் சூர்யாவின் காதலை வெல்வாரா என்பதுதான் இத் தொடரின் கதை.

இந்தத் தொடரில் ஜெய் சூர்யாவாக சத்யா நடிக்கிறார். இவர் முதல் முறையாக தமிழ் தொலைக்காட்சிக்கு அடி எடுத்து வைக்கிறார். மலையாள தொலைக்காட்சிகளில் பிரபலமான ஸ்நிஷா இந்தத் தொடரில் கதாநாயகி சிட்டுவாக நடிக்கிறார். ராணியாக நடிகை சந்தனா நடிக்கிறார். இவர் தெலுங்கு தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமானவர்.

ஜெயக்குமார் இயக்கும் இத் தொடருக்கு ராஜிவ் அட்டுகல் இசையமைக்கிறார்.

விஜய் டிவியில் ஏற்கெனவே மதிய நேரங்களில் பல தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மதியம் 12.30 மணிக்கு அவளும் நானும், மதியம் 1 மணிக்கு கல்யாணமாம் கல்யாணம், மதியம் 1.30 மணிக்கு ராதா கிருஷ்ணா, 2 மணிக்கு பொன்மகள் வந்தாள், 2.30 மணிக்கு ஈரமான ரோஜாவே ஆகிய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இன்று முதல் 3 மணிக்கு நீல குயில் தொடரும் அநத் வரிசையில் சேருகிறது.

Related Posts