Connect with us

Tamil Cinema News

பரியேறும் பெருமாள், அரசியல் தலைவர்கள் பாராட்டு

Published

on

pariyerum perumal show

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர், ஆனந்தி மற்றும் பலரது நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படம் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்காக சென்னையில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் வன்னி அரசு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் மற்றும் தமிழன் பிரசன்னா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் சுப. வீரபாண்டியன், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை.ஜெகன் மூர்த்தி, மதிமுக-வின் துணை பொதுச் செயலாளர் மல்லை. சத்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு திரைப்படத்தினை பார்த்து உணர்ச்சிவசப் பட்டவர்களாக மாறிப்போனார்கள்.

அவர்களில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருபடி முன்னே சென்று தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், இயக்குநர் மாரி செல்வராஜையும் கட்டித் தழுவி, முத்தமிட்டு தனது பாராட்டுகளை வெளிப்படுத்தினார்.

“பரியேறும் பெருமாள்” படத்தினைப் பற்றி அரசியல் தலைவர்கள் கூறியதாவது,

தொல் திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி),

“இந்த “பரியேறும் பெருமாள்” ஒரு உலகத் தரம் வாய்ந்த கிளாசிக்கல் சினிமா. ஒவ்வொரு வசனமும், காட்சியும் மிக இயல்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதீதமான கற்பனையோ, அதீதமான காட்சிப் பதிவுகளோ இல்லாமல் உண்மைத்தன்மையுடன் இருக்கிறது இந்தப் படம்.

சாதீய ஒடுக்குமுறைகள் என்பது ஆண்டாண்டு காலமாக நிலைத்திருக்கும் ஒன்று. இது எவ்வளவு கடுமையான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது என்பதையும் நாமறிவோம். அந்த சிக்கலை மிக இலகுவாக, முதிர்ச்சியாக, பக்குவமாக எடுத்துரைத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

எவர் மனதும் புண்படாத வகையில், சாதியவாதிகளும் உணர்ந்துகொள்ளும் வகையில் இத்திரைப்படத்தை எடுத்து தமிழ்ச் சமூகத்திற்கு கொடையாக அளித்திருக்கிறார்கள் நம்முடைய மாரி செல்வராஜ் அவர்களும், பா.இரஞ்சித் அவர்களும். கலைத்துறையின் வாயிலாக இவர்களால் மிகப் பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். “பரியேறும் பெருமாள்” அனைத்து தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வெற்றித் திரைப்படமாக மாறியிருக்கிறது.

சீமான் (நாம் தமிழர் கட்சி),

“நிறைய படம் பார்த்து விட்டு இது படமல்ல பாடம் என்று சொல்வோம். ஆனால், இந்த “பரியேறும் பெருமாள்” படம் பார்க்கும் போது, அவையெல்லாம் எவ்வளவு பொய்யான வார்த்தைகள் என்பது புரிகிறது. உண்மையிலேயே அப்படி சொல்ல வேண்டுமெனில் இந்த படத்தை சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் திரையில் ஒரு புரட்சியை இந்தப் படம் செய்திருக்கிறது.

இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய வயது, அனுபவம் இவற்றையெல்லாம் தாண்டி ஒரு ஆகச்சிறந்த படைப்பை தமிழ்ச் சமூகத்திற்கு தந்திருக்கிறார். மிகப்பெரிய பெரிய தாக்கத்தையும், வலியையும் இந்தப்படம் கடத்தி இருக்கிறது. ஒரு படைப்பாளியாக மாரி செல்வராஜும், ஒரு தயாரிப்பாளராக பா.இரஞ்சித்தும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நம் தமிழ்ச் சமூகத்தின் இளைய தலைமுறை பிள்ளைகள் நிச்சயம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும்”.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி),

“உண்மையில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு இது முதல் படம் என்பதை நம்ப முடியவில்லை. இப்படி ஒரு அபூர்வமான திரைப்படத்தை தயாரித்த தோழர் பா.இரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தப் படத்தின் கடைசிக் காட்சியைத் தவிர, முதல் காட்சியிலிருந்து சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதிய வன்மங்களை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.

சாதி மறுப்புத் திருமணங்கள் செய்தவர்களின் மரணங்களை ஒரு பாடலின் வழியே காட்டிவிட்டு, இறுதியில் சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் உண்மையில் பாராட்டிற்குரியது. திரைப்படம் தயாரிப்பது என்பது முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குள் சென்றுவிட்ட இந்த காலத்தில், இதுபோன்ற நேர்த்தியான படைப்பைத் தந்த இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் பா.இரஞ்சித் ஆகியோரை பாராட்டுவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்”.

வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி),

“தமிழ்ச் சமூகம் முற்போக்கு பேசக் கூடியதாக இருந்தாலும், அது எப்படிப்பட்ட சாதிய சமூகமாக இருக்கிறது என்பதை இந்த “பரியேறும் பெருமாள்” திரைப்படம் மிக எதார்த்தமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறது. திரைப்படங்கள் வாயிலாக எது எதையோ சமூகத்தில் திணித்துக் கொண்டிருக்கிற இந்த சூழலில், இந்தப் படம் மிக முக்கியமான கருத்தினைத் தாங்கி வந்துள்ளது. இதனை துணிந்து தயாரித்த இயக்குநர் பா. இரஞ்சித் அவர்களுக்கும், தன் மண்ணில் நடந்த சாதிய கொடுமைகளை பதிவு செய்த அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கும் வாழ்த்துகள். இந்தப் படத்தின் வாயிலாக மனிதம் காக்கப்பட வேண்டும், மனிதம் போற்றப்பட வேண்டும்”.

ரசிகர்களின் ஆதரவுடன் ‘பரியேறும் பெருமாள்’ இதுவரை வெளிவந்த சமுதாய நோக்கு கொண்ட தமிழ்த் திரைப்படங்களில் ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறது.

[post_gallery]

Tamil Cinema News

1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்

Published

on

1000 கோடி வசூலித்த அஜித்-தின் 6 படங்கள்

தமிழ்த் திரையுலகத்தில் ‘ஓபனிங் ஸ்டார்’ என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்.

அவர் நடித்து வெளிவரும் படங்கள் நன்றாக இருக்கிறதோ இல்லையோ முதல் சில நாட்கள் நல்ல வசூலைக் கொடுக்கும். அதன் பின்னர்தான் படம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து வசூல் ஏறும், இறங்கும்.

1993ம் ஆண்டு வெளிவந்த ‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் அஜித்.

அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அதற்கடுத்து 1995ல் வெளிவந்த, ‘ஆசை’ படம்தான் அஜித்தின் முதல் வெற்றிப் படமாக அமைந்தது.

1996ல் வெளிவந்த ‘காதல் கோட்டை’, 1998ல் வெளிவந்த ‘காதல் மன்னன்’, 1999ல் வெளிவந்த ‘வாலி’ ஆகியவை 90களில் அஜித்தின் மிகப் பெரிய வெற்றிப் படங்கள்.

அதன் பின் ஏஆர் முருகதாஸ் இயக்கிய முதல் படமான 2001ல் வெளிவந்த ‘தீனா’ படத்தில்தான் அஜித்தை ‘தல’ என அழைக்க ஆரம்பித்தனர். அந்தப் படத்திற்குப் பின் அஜித் நடித்து வெளிவந்த படங்கள் நல்ல ஓபனிங்கைத் தர ஆரம்பித்து கமர்ஷியல் ஹீரோவாக அவர் உயர்ந்தார்.

தொடர்ந்து சில படங்கள் தோல்வி அடைந்தாலும் கூட அவருடைய அந்த ஓபனிங் ஸ்டார் இமேஜ் அப்படியே இருக்கிறது.

2007ல் வெளிவந்த ‘பில்லா’ படத்திற்குப் பிறகு அஜித் தமிழ் சினிமா உலகில் பெரும் வளர்ச்சி பெற்றார்.

கடந்த ஆறு வருடங்களில் அவர் நடித்து வெளிவந்த படங்கள் சுமார் 1000 கோடியை வசூலித்துள்ளதாக அவருடைய ரசிகர்கள் இன்று டிவிட்டரில் டிரென்டிங்கை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அதன்படி,

ஆரம்பம் – 135 கோடி
வீரம் – 118
என்னை அறிந்தால் – 125
வேதாளம் – 152
விவேகம் – 206
விஸ்வாசம் – 253 கோடி. வசூலித்துள்ளதாக அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

‘விஸ்வாசம்’ படம் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘பேட்ட’ படத்தை விட அதிகமாக வசூலித்துள்ளது.

அஜித் தற்போது ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.

Continue Reading

Tamil Cinema News

சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’

Published

on

சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ராங்கி

சரவணன் யார் என்பதை தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்புண்டு.

சர்வானந்த், ஜெய், அஞ்சலி, அனன்யா மற்றும் பலர் நடிக்க 2011ல் வெளிவந்து அனைவரையும் நெகிழ வைத்த காதல் படமான ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கியவர்தான் சரவணன்.

அதன் பின் ‘இவன் வேற மாதிரி, வலியவன்’ ஆகிய படங்களையும், கன்னடத்தில் ‘இவன் வேற மாதிரி’ படத்தை ‘சக்ரவியூகா’ என்ற பெயரில் இயக்கினார்.

விபத்து ஒன்றில் சிக்கியதால் ஓய்வில் இருந்த சரவணன், நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இப்போது ‘ராங்கி’ படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் முருகதாஸ் கதை எழுதி உள்ளார்.

த்ரிஷா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது.

Continue Reading

Tamil Cinema News

காஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை

Published

on

காஞ்சனா 3 - முதல் நாள் வசூலில் சாதனை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கத்தில், தமன் பின்னணி இசையில், ராகவா லாரன்ஸ், வேதிகா, ஓவியா, நிக்கி டம்போலி மற்றும் பலர் நடித்து நேற்று வெளியான படம் ‘காஞ்சனா 3’.

இந்தப் படம் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலாக சுமார் 10 கோடி வசூலித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் சுமார் 4 கோடியும், மற்ற இடங்களில் சுமார் 5 கோடியும் வசூலித்திருக்கலாம் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் நாளில் மட்டும் மொத்தமாக 20 கோடி வரை இந்தப் படம் வசூலித்திருக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.

இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் ‘பேட்ட, விஸ்வாசம்’ ஆகிய படங்கள் மட்டுமே முதல் நாள் வசூலாக தமிழ்நாட்டில் 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தற்போது அந்த வரிசையில் ‘காஞ்சனா 3’ படமும் சேர்ந்துள்ளது.

‘காஞ்சனா’ வசூலை ‘காஞ்சனா 2’ முறியடித்தது, அது போல ‘காஞ்சனா 2’ வசூலை ‘காஞ்சனா 3’ நிச்சயம் முறியடிக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

படத்தைப் பற்றி நெகட்டிவ்வான விமர்சனங்கள் சில வந்தாலும், தியேட்டர்காரர்கள் அந்த விமர்சனங்கள் மொத்தமாக 50 பேர் எழுதுவதுதான். ஆனால், தியேட்டருக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்கள் படத்தை ரசிக்கிறார்கள், அவர்களது விமர்சனம்தான் முக்கியமானது என்கிறார்கள்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!