January 22, 2019

பாரிஸ் – கிரான்ட் ரெக்ஸ் தியேட்டரில் ‘பேட்ட, விஸ்வாசம்’

ஐரோப்பாவின் புகழ் பெற்ற பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரத்தில் உள்ள கிரான்ட் ரெக்ஸ் தியேட்டரில் ‘பேட்ட, விஸ்வாசம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன.

பொங்கல் நாளில் அந்தப் படங்கள் வெளியிடப்படுவது இரண்டு படங்களக்குமே சிறப்புதான்.

ஒரே சமயத்தில் 2800 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட அந்த அரங்கத்தில் ஜனவரி 10, 12, 14 ஆகிய நாட்களில் இரவு 8.30 மணி காட்சியாக ‘பேட்ட’ படமும், ஜனவரி 11, 13, 15 ஆகிய நாட்களில் இரவு 8.45 மணி காட்சியாக ‘விஸ்வாசம்’ படமும் திரையிடப்பட உள்ளது. அதற்கான முன்பதிவுகள் ஆரம்பமாகி உள்ளன.

இதுவரை அங்கு ஒரே சமயத்தில் ஒரு தமிழ்ப் படம்தான் திரையிடப்பட்டு வந்தது. முதல் முறையாக இரண்டு படங்கள் திரையிடப்படுவது தமிழ்த் திரையுலகத்திற்கும் பெருமைதான்.

Related Posts