Connect with us

Tamil Cinema News

சென்னையில் 10 தியேட்டர்களைத் திறக்கும் பிவிஆர்

Published

on

pvr cinemas

[post_gallery]

சென்னையில் ஒரு பக்கம் பழைய தியேட்டர்கள் மூடப்பட்டுக் கொண்டு வந்தாலும், மற்றொரு பக்கம் புதுப் புது ‘மால்’ தியேட்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வரிசையில் பிவிஆர் நிறுவனம் சென்னை, அண்ணாநகரில் உள்ள விஆர் மாலில் புதிதாக 10 தியேட்டர்களைத் திறக்கிறது.

இன்று இரவுக் காட்சி முதல் 3 தியேட்டர்களில் அங்கு திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. விரைவில் மற்ற தியேட்டர்களும் திறக்கப்படும்…

ஏற்கெனவே பிவிஆர் சினிமாஸ், சென்னையில் அமைந்தகரை, வேளச்சேரி, பல்லாவரம், ரெட்ஹில்ஸ் ஆகிய இடங்களில் தியேட்டர்களை நடத்திக் கொண்டு இருக்கிறது.

சமீபத்தில் சென்னை சத்யம் சினிமாஸ் நிறுவனத்தையும் பிவிஆர் நிறுவனம் 850 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. இந்தியாவில் பல ஊர்களில் தியேட்டர்களை நடத்தி வரும் பிவிஆர் சினிமாஸ் இந்தத் துறையில் தனி முத்திரை பதித்து வருகிறது.

அண்ணா நகரில் திறக்கப்பட உள்ள பிவிஆர் சினிமாசில் 10 தியேட்டர்களில் மொத்தம் 2594 இருக்கைகள் உள்ளன.

இதன் மூலம் சென்னையில் அதிக தியேட்டர்களை நடத்தும் நிறுவனமாக பிவிஆர் சினிமாஸ் உயர்ந்துள்ளது.

தியேட்டர்வாரியாக உள்ள இருக்கைகளின் எண்ணிக்கை…

1) Audi No-01(pxl)- 444
2) Audi No-02- 177
3) Audi No-03- 366
4) Audi No-04- 388
5) Audi No-05- 450
6) Audi No-06- 190
7) Audi No-07- 126
8) Audi No-08- 115
9) Audi No-09- 136
10)Audi No-10- 202

Continue Reading

Tamil Cinema News

ஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு

Published

on

soundarya-visakan-honeymoon

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, நடிகரும் தொழிலதிபருமான விசாகன் இருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் அவர்களது திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

திருமணத்திற்குப் பின் சௌந்தர்யா, விசாகன் தம்பதியினர் தேனிலவுக்காக வடக்கு ஐரோப்பாவில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்துக்குச் சென்றுள்ளனர்.

இது பற்றிய தகவலை சௌந்தர்யா புகைப்படங்களுடன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

Continue Reading

Tamil Cinema News

‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு

Published

on

ellam-mela-irukkuravan-parthuppan

விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் ராவுத்தர் மூவீஸ்.

விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான இப்ராகிம் ராவுத்தருக்குச் சொந்தமான நிறுவனம் அது.

அந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ எனும் படத்தை தயாரித்து வருகிறது.

இப்ராகிம் ராவுத்தரின் மகன் முகம்மது அபுபக்கர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கிறார்.

கதாநாயகனாக ஆரி நடிக்க, கதாநாயகியாக சாஷ்வி பாலா நடிக்கிறார்.

இப்படத்தின் முதல் பார்வையை நடிகர் விஷ்ணு விஷால் இன்று வெளியிட்டார்.

இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Continue Reading

Tamil Cinema News

எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்

Published

on

gv-prakash-new-movie

பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.

இந்த நிறுவனம் தற்போது சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இன்று துவங்கி  உள்ளார்கள்.

இதன் துவக்க விழா இன்று எளிமையாக ஒரு கோயிலில் நடை பெற்றது.

மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது.

எழில் அவருடைய பாணியிலான காமெடி படமாகத்தான் இந்தப் படத்தை இயக்க உள்ளாராம்.

மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

No feed items found.

Trending