Connect with us

Television

ராஜ் டிவியில் புதிய தொடர் ‘கண்ணம்மா’

Published

on

kannamma serial raj tv

ஸ்ரீ பாரதி அஸோசியேட் தயாரிப்பில் ‘கண்ணம்மா’ என்ற மெகா தொடர் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8:00 மணிக்கு ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .

கண்ணம்மா அழகி, கடின உழைப்பாளி, அறிவாளி. தன் குடும்ப சூழல் மற்றும் தன் அப்பாவின் கோபம் இரண்டின் காரணமாகவும் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திக் கொண்டு ஒரு டெய்லராக தன் அப்பாவின் கடையில் வேலை செய்கிறாள். எப்போதும் வசை சொற்களையும், அவமானத்தையும் மட்டுமே தன் அப்பாவின் மூலமாக சந்தித்து வந்தவளுக்கு அவர் மூலமாகவே ஒரு விடுதலையும் கிடைக்கிறது.

எப்படியாவது கண்ணம்மா தன்னை விட்டும், தன் குடும்பத்தை விட்டும் ஒழிந்தால் போதும் அவள் ராசியில்லாதவள் அவளால்தான் குடும்பமே நலிந்து போனது என்று சொல்லும் அவளது அப்பா ஒரு ஃபேஷன் கார்மென்ட்ஸிற்கு அவளை டெய்லராக வேலை செய்ய அனுப்புகிறார்.

அங்கு முதன் முறையாக பாராட்டுகளையும், அன்பான வார்த்தைகளையும் கேட்கிறாள். அதுவும் அவளது முதலாளி மூலமாகவே என்பதில் அவளுக்கு பேரானந்தம். அவளது சுறுசுறுப்பும் கடின உழைப்பும் முதலாளி கார்த்திக்குக்கு மிகவும் பிடித்துப் போக அவள் நிறுவனத்தின் தவிர்க்க முடியாத பெண்ணாக மாறுகிறாள்.

இந்நிலையில் கண்ணம்மாவே எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் அவளது முதலாளியின் மானத்தைக் காப்பாற்ற வேண்டி அவரையே திருமணம் செய்ய வேண்டியதாகிறது. ஆனால் திருமணத்தின் மூலம் தனது மானத்தையும், இமேஜையும் காப்பற்றிக் கொண்ட அவளது முதலாளி, இது மற்றவர் பார்வைக்காக நடந்த திருமணம் மட்டுமே, இதை மறந்துவிடு என்று கூறி அவள் குடும்பத்திற்கு பெரும் பணத்தைத் தருவதாகக் கூறுகிறார்.

கண்ணம்மா அவளது கணவனின் மனதையும், தனக்கு எதிர்பாராமல் அமைந்த இந்த வாழ்வையும் காப்பாற்றிக் கொள்ள போராடுவதே ‘கண்ணம்மா’ தொடரின் கதை.

இத்தொடரில் முதன்மைக் கதாபாத்திரத்தில் கே.எல்.அர்ச்சனா நடிக்க, க்ளைடன் சின்னப்பா இயக்குகிறார் .

Television

மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி

Published

on

மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சி மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை.

சினிமா, டிவியில் உள்ள பிரபலமான சில ஜோடிகளான மணிமேகலை – உசைன், நிஷா- ரியாஸ், சங்கரபாண்டியன் – ஜெயபாரதி, அந்தோணி தாசன் – ரீட்டா, பிரியா – பிரின்ஸ், சுபர்ணன் – பிரியா, திரவியம் – ரித்து, தங்கதுரை – அருணா, செந்தில் – ராஜலட்சுமி மற்றும் ஃபாரீனா – ரஹ்மான் ஆகிய ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டியாளர்களாக மணிமேகலை – உசைன், நிஷா- ரியாஸ், சங்கரபாண்டியன் – ஜெயபாரதி, அந்தோணி தாசன் – ரீட்டா, திரவியம் – ரித்து, மற்றும் செந்தில் – ராஜலட்சுமி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இறுதிப் போட்டியில் உள்ள இரண்டு சுற்றுகளில் இந்த ஜோடிகள் அவர்களது திறமையை வெளிப்படுத்த உள்ளார்கள். நாளை மே 19, ஞாயிறு மதியம் 3 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

நடிகைகள் விஜயலலட்சுமி, தேவதர்ஷினி, தொகுப்பாளர் கோபிநாத் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பங்கேற்றனர். இந்த இறுதிச்சுற்றில் நடிகை விஜயலலட்சுமி மற்றும் கோபி வெற்றியாளர்களை அறிவித்து முடிசூட்ட உள்ளனர்.

இறுதிப் போட்டியில் விஜய் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

Continue Reading

Television

பெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி

Published

on

பெப்பர்ஸ் டிவி - ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி

சினிமா என்பது மிகப்பெரிய கடல் மாதிரி. இதில் வெற்றிபெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. சினிமாவில் நுழைவதற்கு ஒரு லட்சம் பேர் ஆசைப்படலாம். ஆனால் இதில் ஆர்வத்துடன் நுழைபவர்கள் ஐம்பதாயிரம் பேர்தான்.

இதிலும் விடாமுயற்சியாக போராடி வாய்ப்பை பெறுகிறவர்கள் என்னவோ ஆயிரம் பேர் தான். இந்த ஆயிரம் பேரில், படம் எடுத்து, அந்தப்படமும் தங்குதடையின்றி ரிலீஸாகி மக்கள் மனதில் பதிகிறவர்கள் என பார்த்தால் வெறும் பத்து பேர் தான். இப்படி ஜெயித்தவர்களை கணக்கிட்டால் லட்சத்தில் பத்து பேர்தான் சினிமாவில் இன்னும் இருந்து வருகிறார்கள்.

இப்படி சினிமாவில் சாதனை புரிந்தவர்களை, அடுத்து அவர்கள் படம் ரிலீசாகும் அந்தந்த வாரங்களில் அவர்கள் கடந்து வந்த வெற்றிப்பயணத்தை முழுமையாக 30 நிமிடங்களில் சொல்லும் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சிதான் ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் அந்தந்த வாரங்களில் வெளியாகின்ற படத்தின் இயக்குனர், அந்தப் படத்தின் கதாநாயகன், நாயகி, இசையமைப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினருடன் கலந்து கொண்டு அந்தப்படம் உருவானது எப்படி, அதை படமாக்க அவர்கள் பட்ட சிரமங்கள், நல்லது கெட்டது மற்றும் அந்தப் படத்தின் மூலம் புதிதாக சொல்லவரும் விஷயம் என படத்தை பற்றிய சுவாரசியமான செய்திகளை பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி பெப்பர்ஸ் டிவியில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை சுவைபட தொகுத்து வழங்குபவர் சுமையா.

Continue Reading

Television

புதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி

Published

on

புதிய தலைமுறை டிவி - யூத் டியூப் நிகழ்ச்சி

ஒரு வாரத்தை அரைமணி நேரத்துக்குள் அடக்கி விடமுடியுமா ? முடியும் என சொல்கிறது புதிய தலைமுறை டிவியின் ‘யூத் டியூப்’ நிகழ்ச்சி.

வாராந்திர செய்திகளையும் நிகழ்வுகளையும் குட்டிக் குட்டிச் செய்தகளாக சுருக்கி ஒரே புட்டிக்குள் அடைத்து தருவதுதான் யூத் டியூப். குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோருக்கு வாரந்திர நிகழ்வுகளைக் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.

மனதில் நின்ற செய்திகள், வாரம் முழுக்க பரபரப்பாக இருந்த செய்திகள், மனதில் நின்ற காட்சிகள், மறக்க முடியாத காட்சிகள், மறந்து விடவேண்டுமென்று நினைக்கும் நிகழ்வுகள், செய்திகள், சாதனைகள், சோதனைகள், பாராட்டுகள், விமர்சனங்கள், என்று உள்ளூர் முதல் உலக நிகழ்வுகள் அனைத்தையும் தொட்டுக் கொடுக்கிறது இந்த நிகழ்ச்சி.

சுவையான காட்சி நறுக்குகளை வித்தியாசமான முறையில் கலந்து கொடுக்கும் இந்த நிகழ்ச்சி புதிய தலைமுறையில் சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கும், மறுஒளிபரப்பு ஞாயிறு இரவு 8:00 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

இந்நிகழ்ச்சியை கவின் மற்றும் மோகனா தொகுத்து வழங்குகிறார்கள்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!