December 17, 2018

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா மறுமணம் ?

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா. சில வருடங்களுக்கு முன்பு தொழிலதிபர் அஷ்வினை மணந்தார். அவர்களுக்கு வேத் என்ற மகனும் இருக்கிறார்.

கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் கடந்த வருடம் விவாகரத்து செய்து கொண்டனர்.

சௌந்தர்யாவுக்கு சமீபத்தில் வீட்டில் எளிமையாக திருமண நிச்சயம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கும் ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் நாயகனாக நடித்த வசீகரன் என்பவருக்கும் பெரியவர்கள் சம்மதத்துடன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாம்.

வசீகரன் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். சொந்தமாக மருந்து கம்பெனியை நடத்தி வருகிறார். அமெரிக்காவில் எம்பிஏ படிப்பு முடித்தவர். அவரும் விவாகரத்து பெற்றவர் என்கிறார்கள்.

வசீகரன், சௌந்தர்யா திருமணம் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts