September 21, 2018

‘சாமி ஸ்கொயர்’, மீண்டும் விக்ரமுடன் ஐஸ்வர்யா ராஜேஷ்

தமீன் பிலிம்ஸ் ஷிபு தமீன் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் ‘சாமி ஸ்கொயர்’.

ஏற்கெனவே, விக்ரமுடன் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார்.

த்ரிஷா நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில்தான் ஐஸ்வர்யா நடிக்கிறாராம். முதலில் நடிக்க சம்மதித்த த்ரிஷா, பின்னர் படத்திலிருந்து விலகிவிட்டார்.

விக்ரம், ஐஸ்வர்யா இடையிலான காட்சிகள், பாடல் காட்சிகள் தற்போது பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

‘சாமி ஸ்கொயர்’ படத்தின் டிரைலர் ஏற்கெனவே வெளியாகி 1 கோடி பார்வையைத் தாண்டியுள்ளது.

விரைவில் படத்தின் சிங்கிள் பாடலையும், பின்னர் இசை வெளியீட்டையும் நடத்த உள்ளார்கள்.

Related Posts