October 19, 2018

‘மாரி 2’ படப்பிடிப்பில் சாய் பல்லவி பிறந்தநாள் கொண்டாட்டம்

மலையாளத் திரையுலகத்தில் ‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமாகி கேரள ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்தவர் தமிழ் நடிகை சாய் பல்லவி.

பின்னர், தெலுங்கிலும் அறிமுகமாகி அங்கும் அவருக்கு ரசிகர்கள் அதிகமாகினர்.

கடந்த மாதம் வெளிவந்த ‘தியா’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப் படம் சரியாகப் போகவில்லை என்றாலும் தற்போது தனுஷ் ஜோடியாக ‘மாரி 2’ படத்திலும், சூர்யா ஜோடியாக ‘என்ஜிகே’ படத்திலும் நடித்து வருகிறார்.

இன்று சாய் பல்லவியின் பிறந்த நாள். அவருடைய பிறந்த நாளை ‘மாரி 2’ படக்குழுவினர் கேக் வெட்டி சிறப்பாகக் கொண்டாடினர்.

இந்த கொண்டாட்டத்தில் நடிகர் தனுஷ், இயக்குனர் பாலாஜி மோகன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.

Related Posts