‘சீமராஜா’ – செப்டம்பர் 13 ரிலீஸ், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் பொன்ராம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சீமராஜா’.

இப்படம் செப்டம்பர் மாதம் 13ம் தேதி வெளியாகும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கியூப் பிரச்சினைக்காக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் புதிய படங்களை வெளியிடாமல் வேலைநிறுத்தம் செய்தனர்.

அதன் பின்னர், பல படங்கள் திரைக்கு வர வேண்டியிருந்ததால் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் படங்களை வெளியிடுவதில் ஒரு ஒழுங்குமுறையைக் கடைபிடிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்த குழுவினர் புதிய படங்களின் வெளியீட்டுத் தேதிகளை முறைப்படுத்தி சிக்கல் இல்லாமல் ஒவ்வொரு படங்களையும் வெளியிட ஒப்புதல் அளித்து வருகிறார்கள்.

இதை அனைத்து தயாரிப்பாளர்களும் கடைபிடித்து வருகிறார்கள். அதன்படி ‘சீமராஜா’ படத்தின் வெளியீட்டுத் தேதிக்கு அனுமதி கேட்டு தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.

அதனடிப்படையில் ‘சீமராஜா’ படத்தை செப்டம்பர் 13ம் தேதி வெளியிட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்தும் குழு அனுமதி அளித்தது.

அதையடுத்து, இன்று ‘சீமராஜா’ படத் தயாரிப்பு நிறுவனமான 24 ஏஎம் ஸ்டுடியோஸ் பட வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

செப்டம்பர் 13, வியாழக்கிழமை அன்று வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‘சீமராஜா’ படம் வெளியாக உள்ளது.

Related Posts