Connect with us

Tamil Cinema News

தஞ்சைப் பின்னணியில் உருவான ‘சீமத்துரை’, மிஷ்கின் பாராட்டு

Published

on

Seemathurai Movie Audio Launch

புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் ‘சீமத்துரை’.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

படத்தின் கதாநாயகன் கீதன், கதாநாயகி வர்ஷா பொல்லம்மா, இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளின் என இந்த விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேரும் இளையோர்களாக இருந்தாலும் அவர்களை வாழ்த்த தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் மிஷ்கின், வசந்தபாலன், இயக்குனர் நடிகர் மனோபாலா, பொன்வண்ணன், தயாரிப்பாளர்கள் டி.சிவா, தனஞ்செயன், நடிகர்கள் கலையரசன், கதிர் மற்றும் எழுத்தாளர் நடிகர் வேலா ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

இயக்குநர் மிஷ்கின், தனது வழக்கமான பேச்சு நடையால் விழாவை கலகலப்பாக்கினார்.

“பொதுவாக இசை வெளீயிட்டு விழா என்பது பொய்கள் நிறைந்ததாகவே இருக்கும். இது என் படங்களுக்கும் பொருந்தும். ஆனால் உண்மையிலேயே இங்கே இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம் இங்கு வந்திருப்பவர்களின் பொய்யற்ற வெகுளித்தனம். விஜி சந்திரசேகர் இந்திய சினிமா குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கும் ஒரு நடிகை, நிச்சயம் அவர் வரும் நாளில் கொண்டாடப்படுவார். அவர் தோழமையோடு கண்டிப்பாக கேட்டுக்கொண்டதின் பெயரிலேயே நான் இங்கிருக்கிறேன்.

இயக்குநர் சந்தோஷ் என்னை சந்திக்க வந்திருந்த போது தான் அவரை முதன் முதலாகப் பார்த்தேன். பார்த்த மாத்திரத்திலேயே அவரது நம்பிக்கை மிகுந்த கண்களும், முகமும் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அவரது நம்பிக்கையே “சீமத்துரை” நன்றாக இருக்கும் என உறுதிசெய்கிறது.

தான் வாழ்ந்த மண் சார்ந்தே தனது முதல் படத்தை எடுத்துள்ள இயக்குநருக்கு வாழ்த்துகள். குறிப்பாக தனது முதல் படத்திலேயே இசை வெளியீட்டு விழாவில் “மேக்கிங்” காட்சிகளை ஒளிபரப்பிய நம்பிக்கை எனக்கு பிடித்திருந்தது. இதற்கு முன்னர் நான் மட்டும் தான் “சித்திரம் பேசுதடி” படம் வந்தபோது இதைச் செய்தேன். இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் கீதன் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். அவரது முகம் எல்லோருக்குமே எளிதில் பதியும் விதத்தில் இருப்பது அவரது பலம், நிச்சயமாக உயரங்கள் தொடுவார்.

ட்ரைலரில் கருவாடு விற்பது போல காட்சிகள் இருந்தது, இந்த உலகத்தின் மிகமிகச் சுவையான உணவு கருவாடு தான். பழைய சோற்றுக்கும், கருவாட்டுக் குழம்பிற்கும் ஈடு இணையான உணவே கிடையாது. இங்கே மூன்று பாடல்களை ஒளிபரப்பினார்கள், நேரம் கருதி அதை குறைத்திருக்கலாம். ஆனால் அத்தனை பாடல்களையும் நம்மை பார்க்க வைத்தது கூட அவர்களது நம்பிக்கையை பிரதிபலித்தது. இந்த படத்தின் பாடல்களைப் பார்க்கும் போது அதில் ஒரு மிகையில்லாத ஒளிப்பதிவு நேர்த்தியை காண முடிந்தது. இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ரான்க்ளின் அழகான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். படக்குழுவினர் அத்தனை பேருக்கும் என் வாழ்த்துகள்,” என்றார்.

விஜி சந்திரசேகர் பேசுகையில், “இந்தப் படத்தின் இயக்குநர் கதை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்ததது. அதனால் தான் நடிக்க சம்மத்தித்தேன். இதில் பணியாற்றியிருக்கும் இந்த இளைஞர்களுக்கெல்லாம் என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு துணையாக நிற்கிறேன். ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைகள் தானே வளரும் என்பதை நம்புகிறேன்.

நம்மால் முடிந்த அளவிற்கு பிறருக்கு உதவுவது நல்லது. சீமத்துரையில் ஓரளவிற்கு நன்றாக நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி,” என்று வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியில் பல பிரபலங்களை அழைத்து வந்ததே விஜி சந்திரசேகர்தான்.

எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி பேசுகையில், “கோயில் திருவிழாக்களில் எத்தனை கடைகள் இருந்தாலும், கொண்டாட்டங்கள் நிறைந்திருந்தாலும் யானையை எல்லோரும் வியப்பாக பார்ப்பார்கள். அப்படி இந்த ‘சீமத்துரை’ படத்தில் இந்த இளைஞர் படைக்கு நடுவில் யானையாக விஜி சந்திரசேகர் நடித்திருக்கிறார். அவர் ‘மதயானை கூட்டம்’ படத்தில் எனக்கு தங்கையாக நடித்திருந்தார், அப்போதே அவர் நடிப்பில் வியந்திருக்கிறேன். நிச்சயம் இந்த படத்திலும் ‘மதயானை கூட்டம்’ படத்தில் வருவது போல வலுவான கதாபாத்திரத்தில் தான் அவர் நடித்திருப்பார்.

கதாநாயகன் கீதன் மிக அழகாக இருக்கிறார், அவரது சிரிப்பு எல்லோரையும் எளிதில் கவரும் வகையில் இருக்கிறது. அவர் நிச்சயமாக சாதிப்பார். அதே போல் வர்ஷா பொல்லம்மாவும் அழகாக இருக்கிறார். இருவருக்கும் என் வாழ்த்துகள். பொதுவாக தென் மாவட்டங்களின் கலாச்சாரத்தை விட தஞ்சாவூரின் கலாச்சாரம் மிகச் சிறப்பானது. அப்படிப்பட்ட தஞ்சாவூர் மண் சார்ந்து இந்த படத்தை இயக்கியிருக்கும் இயக்குனருக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்,” என்று வாழ்த்தினார்.

Tamil Cinema News

தங்கள் பழைய நாயகிக்கு விஜய், அஜித் வாய்ப்பு கொடுப்பார்களா ?

Published

on

சுவாதி, தங்கள் பழைய நாயகிக்கு விஜய், அஜித் வாய்ப்பு கொடுப்பார்களா ?

விஜய், அஜித் இருவரும் ஹீரோக்களாக வளர்ந்து வந்த ஆரம்ப காலத்தில் அவர்களது ஜோடியாக நடித்தவர் சுவாதி.

விஜய் நடித்த ‘தேவா’ படத்தில் அறிமுகமானவர். அதன் பின் அவருடன் ‘வசந்த வாசல், செல்வா’ ஆகிய படங்களிலும் ஜோடியாக நடித்தவர். அஜித்துடன் ‘வான்மதி, உன்னைத் தேடி’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

95ல் அறிமுகமாகி, 2000க்குள் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு படிப்பதற்காக ஹைதராபாத் சென்று விட்டார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீரின் இயக்கத்தில் வெளியான ‘யோகி’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது, தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளார். சினிமாவில் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் ஆர்வமாக உள்ளாராம்.

“நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மீண்டும் எப்போது நடிக்க வருவீர்கள் என்று ஆவலுடன் கேட்கிறார்கள். ‘மேக்கப்’ இல்லாமல் சென்றாலும் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

இத்தனை வருடம் கழித்தும் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள் என்று பாராட்டுகிறார்கள். அப்படி ஒரு பயணத்தின் போது ஒரு தம்பதியரை சந்திக்க நேர்ந்தது. அந்த சந்திப்பிலிருந்து தான் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். என் குடும்பத்தாரும் எனக்கு முழு ஆதரவோடு இருக்கிறார்கள்.

நான் அவ்வப்போது படங்களைப் பார்த்து வருகிறேன். முன்பைவிட இப்போதுள்ள சினிமா தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ‘பாகுபலி’ போன்ற படங்கள் உலகளவில் பேசப்பட்டது. பல தொலைக்காட்சி சேனல்கள் வந்தாலும் சினிமா என்றும் அழியாமல் நிரந்தரமாக இருக்கும்.

சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன்,” என்கிறார் சுவாதி.

இப்போது டாப் ஹீரோக்களாக இருக்கும் விஜய், அஜித், தங்கள் ஆரம்ப கால நாயகிக்கு தங்களது படங்களில் மீண்டும் நடிக்கும் வாய்ப்பை இப்போது வழங்குவார்களா….?.

Continue Reading

Tamil Cinema News

‘வாட்ச்மேன்’ படத்திற்கு இயக்குனர் பாண்டிராஜ் பாராட்டு

Published

on

வாட்ச்மேன் படத்திற்கு இயக்குனர் பாண்டிராஜ் பாராட்டு

டபுள் மீனிங் புரொடக்ஷன் சார்பாக அருண்மொழி மாணிக்கம் தயாரிக்க விஜய் இயக்கும் படம் ‘வாட்ச்மேன்’.

ஜி.வி. பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து, இசையமைக்கிறார். யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் கோல்டன் ரெட்ரீவர் வகையைச் சேர்ந்த நாய் ஒன்றும் நடித்துள்ளது.

இப்படத்தைப் பார்த்த இயக்குனர் பாண்டிராஜ் படத்திற்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

“இயக்குநர் விஜய்யின் ‘வாட்ச்மேன்’ திரைப்படம், த்ரில்லர் மற்றும் நகைச்சுவையின் கலவையாக இருந்தது. ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்துப் பார்த்தேன். திரைக்கதை மிகவும் சுவாரஸ்யமாகவும், எதிர்பாராத, ஆச்சரியமான திருப்பங்களும் நிறைந்திருந்தது.
ஜி.வி. பிரகாஷ் மற்றும் யோகிபாபு சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக நாய்களின் நடவடிக்கைகள் வரும் காட்சிகளை விரும்பிப் பார்த்தேன். தொழில்நுட்பக் குழு சிறப்பாக பணிப்புரிந்துள்ளனர். எடிட்டிங், ஒளிப்பதிவு மற்றும் ரீ-ரெகார்டிங் அனைத்தும் திரைப்படத்தை மெருகேற்றியுள்ளது,” என்றார் பாண்டிராஜ்.

இதுகுறித்து இயக்குநர் விஜய் கூறுகையில், “பாண்டிராஜ் சார் போன்ற திரைப்படத் தயாரிப்பாளரிடமிருந்து, இது போன்ற பாராட்டுகளைப் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ‘வாட்ச்மேன்’ திரைப்படத்திற்கு கிடைத்த புகழாரம், திரைப்படத்திற்கு மற்றுமொரு வலிமை. இயக்குநர் பாண்டிராஜ் அவர்கள் குடும்ப பார்வையாளர்களைத் தனது தொடர்ச்சியான படங்களின் மூலம் ஈர்த்தவர். அத்தகைய இயக்குநரிடமிருந்து பாராட்டுகளை பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது ‘வாட்ச்மேன்’ குழுவினராகிய ஜி. வி. பிரகாஷ், யோகிபாபு, மேலும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.,” என்றார்.

‘வாட்ச்மேன்’ படம் ஏப்ரல் 12ம் தேதி வெளியாக உள்ளது.

Continue Reading

Tamil Cinema News

ஐரா – ஹாரர் படம் மட்டுமல்ல…

Published

on

ஐரா - ஹாரர் படம் மட்டுமல்ல

கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்க, சர்ஜுன் கேஎம் இயக்க, கேஎஸ் சுந்தரமூர்த்தி இயக்கத்தில், நயன்தாரா, கலையரசன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஐரா’.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நடிகர் கலையரசன் பேசுகையில்,

“இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். என் கேரியரில் மிகவும் முக்கியமான ஒரு படமாக இந்தப் படம் இருக்கும். சமீப காலங்களில் நான் கடந்து வரும் மிக முக்கியமான கேள்வி ‘மெட்ராஸ்’ மாதிரி ஏன் படங்கள் பண்ணுவதில்லை என்பது தான். நானும் நிறைய கதைகள் கேட்கிறேன். இந்தப் படம் பெயர் சொல்லும் ஒரு படமாக இருக்கும்.

சர்ஜூன் இயக்கத்தில் ‘எச்சரிக்கை’ படத்தில் நடிக்க வேண்டியது, ஆனால் அது அமையவில்லை. இந்தப் படத்தில் சர்ஜூன் கேட்டபோது உடனடியாக ஒப்புக் கொண்டேன். இதில் ஹாரர் விஷயத்தையும் தாண்டி மிகச்சிறப்பான கதை இருக்கிறது. சர்ஜூன் கதை எல்லாம் சொல்லி முடித்த பிறகு தான் அந்த பவானி கதாபாத்திரத்திலும் நயன்தாராதான் நடிக்கிறாங்க என சொன்னார். அது பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. அந்த கதாபாத்திரத்துக்காக அவர் ரொம்பவே மெனக்கெட்டார். நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக வந்திருக்கிறது ஐரா,” என்றார்.

இயக்குனர் சர்ஜுன் பேசுகையில்,

“நிறைய பேருக்கு நிறைய கேள்விகள் இருந்தன. மேகதூதம் பாடல் அதற்கு பதிலாக இருந்திருக்கும் என நம்புகிறேன். நான் மிகவும் ரசித்து எடுத்த படம், அதுவும் கருப்பு வெள்ளையில் படம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சி.

கேஜேஆர் ராஜேஷ் சார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். நான் கேட்டதையெல்லாம் கொடுத்தார். கதை கேட்ட பிறகு எந்த விஷயத்திலும் எந்த ஒரு குறுக்கீடும் இல்லை. ஏன் இந்த செலவு, எப்படி படத்தை எடுக்கிறீங்க என எதையும் அவர் கேட்கவில்லை. படம் முடிந்த பிறகு படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி பார்த்தார். மிகவும் மகிழ்ச்சி என சொன்னார். படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ப்ரமோஷனில் பட்டையை கிளப்புகிறார். மிகச் சிறப்பாக விளம்பரப்படுத்தி வருகிறார்.

நயன்தாரா இரண்டு கதாபாத்திரங்களையும் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். மற்ற படங்களில் இரட்டை வேடம் என்றால் அதில் இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கும். இங்கு இரண்டு கதாபாத்திரங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நயன்தாரா இந்த படத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். இது வெறும் ஹாரர் படம் மட்டும் கிடையாது. இன்னொரு சீரியஸான, எமோஷனல் கோணமும் இருக்கிறது. அதையும் தாண்டி ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும்,” என்றார்.

டிரைடன்ட் ஆரட்ஸ் ரவீந்திரன் இந்தப் படத்தை மார்ச் 28ம் தேதி வெளியிடுகிறார்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending