Connect with us

Tamil Cinema News

சிந்துபாத் – படத்தின் சிறப்புகள்…

Published

on

சிந்துபாத் - படத்தின் சிறப்புகள்...

‘பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி’ ஆகிய இரண்டு வெற்றிப்படங்களுக்கு பிறகு S.U.அருண் குமார் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ள படம் ‘சிந்துபாத்’.

அருண்குமார் முதலிரண்டு படங்களையும் வேறுபட்ட கோணத்தில் இயக்கியதைப் போல மூன்றாவது படமானசிந்துபாத்’திலும் முற்றிலும் வேறுபட்ட புதிய கதைக்களத்தை தொட்டுள்ளார். சிந்துபாத் ஒரு ஆக்க்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

‘பாகுபலி 2’ திரைப்படத்தை வெளியிட்ட மற்றும் ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தைத் தயாரித்த K புரொடக்சன்ஸ் S.N. ராஜராஜன், ‘சேதுபதி’ திரைப்படத்தைத் தயாரித்த வான்சன் மூவிஸ் ஷான் சுதர்ஷன் இருவரும் இணைந்து ‘சிந்துபாத்’ படத்தைத் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு வலிமையான ஒரு கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார். அஞ்சலியின் நடிப்பு இத்திரைப்படத்தில் பெரிதாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சலிக்கும் விஜய் சேதுபதிக்குமான காதல் காட்சிகள் மிக சுவாரசியமாக அமைக்கப்பட்டுள்ளதாம்.

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி படம் முழுவதும் வரும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியும், சூர்யா விஜய் சேதுபதியும் தென்காசியில் சிறுசிறு திருட்டு வேலைகள் செய்யும் திருடர்களாக நடித்துள்ளனர். இப்படம் சூர்யா விஜய் சேதுபதிக்கு சிறந்த அறிமுகமாக அமையும்.

சேதுபதி திரைப்படத்தில் SI-ஆக நடித்த லிங்கா இப்படத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த வில்லனாக நடித்துள்ளார். இதற்காக அவர் 18 கிலோ உடல் எடையை கூட்டி முரட்டுத்தனமான தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த வில்லன் கதாபாத்திற்காக தாய்லாந்து மொழி பேசவும், உடல் எடை கூட்டவும் ஒரு வருடம் கடுமையாக உழைத்துள்ளார். அவரைப் போலவே சேதுபதியில் நடித்த விவேக் பிரசன்னா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் S.U.அருண் குமாரின் திரைப்படங்களில் இசைக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும். இந்தப் படத்தில் அவர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைவது ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தில் இடம் பெறும் ஐந்து பாடல்களும் ஐந்து விதமாக அமைந்துள்ளது. இந்த வருடத்தின் மிகப் பெரிய ஹிட் ஆல்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு துபாயில் பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் பின்னணி இசையினை உலகத்தரத்தில் யுவன் ஷங்கர் ராஜா உருவாக்கி வருகிறாராம்.

தென்காசி, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. பல ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் பணியாற்றிய Nung Aka Pradit Seeluem தாய்லாந்தில் நடக்கும் கதைப்பகுதிக்கு சண்டை பயிற்சி அமைத்துள்ளார். சண்டைக்காட்சிகள் பிரம்மாண்டமாகவும் அதே சமயத்தில் எதார்த்த்தை மீறாத வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் 80 சதவிகிதம் முடிவடைந்த நிலையில், படத்தில் நடித்தவர்களை டப்பிங் பேச வைப்பதன் மூலம்தான் எதார்த்தத்தையும் உண்மைத் தன்மையையும் நெருங்க முடியும் என்பதால் தாய்லாந்து மற்றும் மலேசியாவில் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் பணிக்கு இயக்குனர் தாய்லாந்து மற்றும் மலேசியா செல்கிறார்.

கதையின் முக்கியமான நகைச்சுவை கதாபாத்திரத்தில் ஜார்ஜ் நடித்துள்ளார். பட ரிலீசுக்குப் பிறகு விஜய் சேதுபதி மற்றும் ஜார்ஜ் கூட்டணி ரசிகர்களிடம் வரவேற்பு பெறும் என்கிறார்கள். மேலும் மலேசியாவைச் சேர்ந்த நடிகர்கள் கணேசன் மற்றும் சுபத்ரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டீசர் வெளியாகி வைரலாகி இருக்கும் இந்த நிலையில் எடிட்டர் ரூபனின் பணி பேசப்பட்டு வருகிறது. அவர் புதிய கண்ணோட்டத்தில் இப்படத்தை எடிட் செய்து வருகிறாராம்.

‘இறவாக் காலம்’ திரைப்படத்திற்குப் பிறகு விஜய் கார்த்திக் கண்ணன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ஏஆர் ரகுமானின் இசை ஆல்பங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் ஆஸ்தான ஒளிப்பதிவாளர். மேலும் பல விளம்பரப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தைப் பொறுத்தவரையில் தென்காசி, மலேசியா மற்றும் தாய்லாந்து என வெவ்வேறு கலாச்சார பின்னணியைக் கொண்ட பகுதியை பதிவு செய்வதில் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வழக்கமான தமிழ்ப் படங்களைப் போல வெளிநாடுகளை காட்சிப்படுத்தாமல் தாய்லாந்து மற்றும் மலேசியா மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் விதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்களாம்.

ஒரு எளிய மனிதன், ஒரு எளிய வாழ்வை வாழ இந்த சமூகம் எவ்வளவு பெரிய தடையாக உள்ளது என்பதையும் அதற்கு தீர்க்கமான தீர்வையும் பேசும் படமாக உருவாகியுள்ளது சிந்துபாத்.

Tamil Cinema News

விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’

எஸ்.பி. ஜனநாதன் இயக்க, ஸ்ருதிஹாசன் நாயகி…

Published

on

லாபம்

விஜய் சேதுபதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தைத் தயாரித்த 7சிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், விஜய் சேதுபதியின் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிக்கும் படம் ‘லாபம்’.

அதன் டேக் லைன் ஆக ‘பகல் கொள்ளை’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

‘இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படங்களை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதிஹாசன் முதன்முறையாக நடிக்கிறார். இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஸ்ருதிஹாசன் தமிழில் நடிக்கும் படம் இது.

ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இமான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

இன்று காலை இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது.

சற்று முன்னர் இப்படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து படங்களை இயக்குபவரான ஜனநாதனின் இந்தப் பெயரும், அதற்கான டேக் லைனும் படம் வெளிவரும் போது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

 

Continue Reading

Tamil Cinema News

வில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு

Published

on

வில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு

பல படங்களில் நடித்த நடிகர் நிதின் சத்யா, ‘ஜருகண்டி’ படத்திற்குப் பிறகு அவருடைய ஷ்வேத் – எ நிதின்சத்யா புரொட்கஷன் ஹவுஸ் சார்பாக தயாரிக்கும் படத்தில் வைபவ் நாயகனாக நடிக்க வாணி போஜன் நாயகியாக நடிக்கிறார்.

ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வைபவை தெறிக்கவிடும் வில்லனாக இயக்குனர் வெங்கட்பிரபு நடிக்கின்றார். இவர் வில்லனாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய SG சார்லஸ் இயக்குனராக அறிமுகமாகிறார்.

தற்போது இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இப்படத்தின் முதல் பார்வை டைட்டில் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது.

Continue Reading

Tamil Cinema News

சிவா இயக்கத்தில் சூர்யா

Published

on

சிவா இயக்கத்தில் சூர்யா

‘சிறுத்தை, வேதாளம், விவேகம், விஸ்வாசம்’ படங்களை இயக்கிய சிவா அடுத்து சூர்யா நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

தெலுங்கில் 2008ல் வெளிவந்த ‘சௌர்யம், சன்கம்’ ஆகிய படங்களை இயக்கிய சிவா 2011ல் வெளிவந்த கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படத்தின் மூலம் தமிழில் இயக்குனர் ஆக அறிமுகமானார்.

அவரை தமிழில் இயக்குனராக அறிமுகப்படுத்திய ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்கு 8 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியானது.

இந்தப் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத் தயாரிப்பில் நடிக்கிறார் சூர்யா.

சூர்யாவின் 39வது படம் இது. சூர்யா நடித்துள்ள ‘என்ஜிகே, காப்பான்’ ஆகிய படங்கள் இந்த ஆண்டில் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. மேலும், சுதா கோங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தில் தற்போது நடித்து வருகீறார்.

சூர்யாவின் 39வது படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!