மீண்டும் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடி

‘வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தார்கள்.

சிவகார்த்திகேயன் என்றாலே கலகலப்பான ஹீரோ எனப் பெயர் எடுத்தவர். அதனால், ‘வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இடையில் நிறைய காமெடி காட்சிகளை எதிர்பார்த்து வந்து ரசிகர்கள் அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த சீரியஸ் ஆன காட்சிகளால் கொஞ்சம் ஏமாந்து போனார்கள்.

அந்தக் குறையைத் தீர்க்க அந்த ஜோடி இப்போது மீண்டும் ஜோடி சேர உள்ளது.

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 13வது படத்தில் அவரது ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இது பற்றிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

நயன்தாரா தற்போது அஜித் ஜோடியாக ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். ஒரே சமயத்தில் அஜித்துடனும், சிவகார்த்திகேயனுடனும் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சீமராஜா’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்க உள்ள படம் வெளிவரும்.

Related Posts