Connect with us

Tamil Cinema News

STR fans on celebration mode

Published

on

Fans of STR are thrilled lot. In less than 24 hours, Vaalu will hit the screens.

STR film comes after a gap of three years. Obviously his fans have lined up mega celebrations to commemorate the release of the movie.

Special prayers and poojas are being conducted to kickstart the fete.

Banners and festoons have deocrated theatres.

Vaalu is produced by NIC Arts Chakravarthy and directed by Vijay Chander. STR and Hansika play the lead roles.

Interestingly Brahmanandham would be seen playing a cameo.

Tamil Cinema News

உலகமயமாக்கல் பாதிப்பைச் சொல்லும் ‘குச்சி ஐஸ்’

Published

on

உலகமயமாக்கல் பாதிப்பைச் சொல்லும் குச்சி ஐஸ்

திருமலை சினி டிரஸ்ஸஸ் நிறுவனம் சார்பில் ஜெயபாலன் தயாரிக்க, ஜெயப்பிரகாஷ் .வி இயக்கும் படம் ‘குச்சி ஐஸ்’.

இப்படத்தின் இயக்குனர் ஜெயப்பிரகாஷ், இயக்குனர் பாரதிராஜாவின் உதவியாளர். ஏற்கெனவே, ‘சாதி சனம், காதல் எப்எம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கும் மூன்றாவது படம் இது.

உலகமயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படமாக ‘குச்சி ஐஸ் ‘ உருவாகிறது.

‘நாடோடிகள்’ மற்றும் விஜய் டிவியின் பிக்பாஸ் புகழ் பரணி, புதுமுகம் ரத்திகா, மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

பழநீஸ். Ks. ஒளிப்பதிவு செய்கிறார். தோஷ் நந்தா இசையமைக்கிறார்.

உலகமயமாக்கல் எப்படி ஒவ்வொருவர் வாழ்க்கையையும், சமூகத்தையும் பாதித்துள்ளது என்பதை உணர்வு பூர்வமாகச் சொல்கிறது படம்.

‘குச்சி ஐஸ்’ படத்தின் தொடக்க விழா இன்று ஈரோட்டில் நடைபெற்றது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று ஜூன் மாத வாக்கில் படம் வெளியாக உள்ளது.

Continue Reading

Tamil Cinema News

சிந்துபாத் – படத்தின் சிறப்புகள்…

Published

on

சிந்துபாத் - படத்தின் சிறப்புகள்...

‘பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி’ ஆகிய இரண்டு வெற்றிப்படங்களுக்கு பிறகு S.U.அருண் குமார் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ள படம் ‘சிந்துபாத்’.

அருண்குமார் முதலிரண்டு படங்களையும் வேறுபட்ட கோணத்தில் இயக்கியதைப் போல மூன்றாவது படமானசிந்துபாத்’திலும் முற்றிலும் வேறுபட்ட புதிய கதைக்களத்தை தொட்டுள்ளார். சிந்துபாத் ஒரு ஆக்க்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

‘பாகுபலி 2’ திரைப்படத்தை வெளியிட்ட மற்றும் ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தைத் தயாரித்த K புரொடக்சன்ஸ் S.N. ராஜராஜன், ‘சேதுபதி’ திரைப்படத்தைத் தயாரித்த வான்சன் மூவிஸ் ஷான் சுதர்ஷன் இருவரும் இணைந்து ‘சிந்துபாத்’ படத்தைத் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு வலிமையான ஒரு கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார். அஞ்சலியின் நடிப்பு இத்திரைப்படத்தில் பெரிதாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சலிக்கும் விஜய் சேதுபதிக்குமான காதல் காட்சிகள் மிக சுவாரசியமாக அமைக்கப்பட்டுள்ளதாம்.

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி படம் முழுவதும் வரும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியும், சூர்யா விஜய் சேதுபதியும் தென்காசியில் சிறுசிறு திருட்டு வேலைகள் செய்யும் திருடர்களாக நடித்துள்ளனர். இப்படம் சூர்யா விஜய் சேதுபதிக்கு சிறந்த அறிமுகமாக அமையும்.

சேதுபதி திரைப்படத்தில் SI-ஆக நடித்த லிங்கா இப்படத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த வில்லனாக நடித்துள்ளார். இதற்காக அவர் 18 கிலோ உடல் எடையை கூட்டி முரட்டுத்தனமான தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த வில்லன் கதாபாத்திற்காக தாய்லாந்து மொழி பேசவும், உடல் எடை கூட்டவும் ஒரு வருடம் கடுமையாக உழைத்துள்ளார். அவரைப் போலவே சேதுபதியில் நடித்த விவேக் பிரசன்னா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் S.U.அருண் குமாரின் திரைப்படங்களில் இசைக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும். இந்தப் படத்தில் அவர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைவது ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தில் இடம் பெறும் ஐந்து பாடல்களும் ஐந்து விதமாக அமைந்துள்ளது. இந்த வருடத்தின் மிகப் பெரிய ஹிட் ஆல்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு துபாயில் பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் பின்னணி இசையினை உலகத்தரத்தில் யுவன் ஷங்கர் ராஜா உருவாக்கி வருகிறாராம்.

தென்காசி, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. பல ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் பணியாற்றிய Nung Aka Pradit Seeluem தாய்லாந்தில் நடக்கும் கதைப்பகுதிக்கு சண்டை பயிற்சி அமைத்துள்ளார். சண்டைக்காட்சிகள் பிரம்மாண்டமாகவும் அதே சமயத்தில் எதார்த்த்தை மீறாத வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் 80 சதவிகிதம் முடிவடைந்த நிலையில், படத்தில் நடித்தவர்களை டப்பிங் பேச வைப்பதன் மூலம்தான் எதார்த்தத்தையும் உண்மைத் தன்மையையும் நெருங்க முடியும் என்பதால் தாய்லாந்து மற்றும் மலேசியாவில் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் பணிக்கு இயக்குனர் தாய்லாந்து மற்றும் மலேசியா செல்கிறார்.

கதையின் முக்கியமான நகைச்சுவை கதாபாத்திரத்தில் ஜார்ஜ் நடித்துள்ளார். பட ரிலீசுக்குப் பிறகு விஜய் சேதுபதி மற்றும் ஜார்ஜ் கூட்டணி ரசிகர்களிடம் வரவேற்பு பெறும் என்கிறார்கள். மேலும் மலேசியாவைச் சேர்ந்த நடிகர்கள் கணேசன் மற்றும் சுபத்ரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டீசர் வெளியாகி வைரலாகி இருக்கும் இந்த நிலையில் எடிட்டர் ரூபனின் பணி பேசப்பட்டு வருகிறது. அவர் புதிய கண்ணோட்டத்தில் இப்படத்தை எடிட் செய்து வருகிறாராம்.

‘இறவாக் காலம்’ திரைப்படத்திற்குப் பிறகு விஜய் கார்த்திக் கண்ணன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ஏஆர் ரகுமானின் இசை ஆல்பங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் ஆஸ்தான ஒளிப்பதிவாளர். மேலும் பல விளம்பரப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தைப் பொறுத்தவரையில் தென்காசி, மலேசியா மற்றும் தாய்லாந்து என வெவ்வேறு கலாச்சார பின்னணியைக் கொண்ட பகுதியை பதிவு செய்வதில் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வழக்கமான தமிழ்ப் படங்களைப் போல வெளிநாடுகளை காட்சிப்படுத்தாமல் தாய்லாந்து மற்றும் மலேசியா மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் விதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்களாம்.

ஒரு எளிய மனிதன், ஒரு எளிய வாழ்வை வாழ இந்த சமூகம் எவ்வளவு பெரிய தடையாக உள்ளது என்பதையும் அதற்கு தீர்க்கமான தீர்வையும் பேசும் படமாக உருவாகியுள்ளது சிந்துபாத்.

Continue Reading

Tamil Cinema News

90எம்எல் கொடுத்த அடையாளம், தேஜ் ராஜ் மகிழ்ச்சி

Published

on

90எம்எல் கொடுத்த அடையாளம், தேஜ் ராஜ் மகிழ்ச்சி

ஓவியா நடித்து வெளிவந்த ‘90 எம்எல்’ படத்தில் ரவுடி கதாபாத்திரத்தில் நடித்தவர் தேஜ் ராஜ். இவர் பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்லும் நடித்த நடிகர் சரண்ராஜின் மகன்.

90 எம்எல் படத்தில் கிடைத்த வரவேற்புதேஜ்ராஜுக்கு ஒரு நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

அது பற்றி அவர் கூறியதாவது?

“எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது பற்று உண்டு.

நிறைய படங்களைப் பார்த்து சினிமா ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். அதோடு இல்லாமல் எஸ்.ஆர்.எம் காலேஜில் விஸ்காம் முடித்தேன். ரகுராம் மாஸ்டரிடமும், ஸ்ரீதர் மாஸ்டரிடமும் டான்ஸை முறைப்படி கற்றுக் கொண்டேன். பாண்டியன் மாஸ்டரிடம் ஸ்டண்ட் கற்றுக் கொண்டேன். கூத்துபட்டறை, பாலுமகேந்திரா இன்ஸ்டிட்யூட் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள நடிப்பு பள்ளி ஆகியவற்றில் நடிப்பை கற்றுக் கொண்டேன்.

90 ML பட வாய்ப்பு கிடைத்தது. நடித்து படமும் வெளி வந்து எனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இன்று என்னை பார்க்கிற பல பேருக்கும் அடையாளம் தெரியுது. ஆட்டோகிராப் வாங்குறாங், கை கொடுக்கிறாங்க எனக்கு சந்தோஷமா இருக்கு. இன்னும் சாதிக்கனும்னு வெறி இருக்கு. அதற்கான முயற்சியில இருக்கேன்.

நிறைய பேர் வில்லனா நடிப்பீங்களான்னு கேட்கிறாங்க. வில்லனா ஹீரோவாங்கிறது முக்கியமில்லை, பேர் வாங்கனும். அப்பா மாதிரி சினிமாவில நிலைச்சி நிக்கனும்…அது தான் என் ஆசை.

நடிக்க நிறைய வாய்ப்பு வருது, கதை கேட்டுட்டு இருக்கேன். கூடிய சீக்கிரம் எந்த படத்துல நடிக்கிறேன்ங்கிறத சொல்றேன்,” என்கிறார் தேஜ்ராஜ்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending