October 21, 2018

‘சூப்பர் டீலக்ஸ்’ குழுவினரே வெளியிட்ட ‘டிரோல்’ போஸ்டர்

super deluxe

பிரபல நட்சத்திரங்கள் நடித்து ஒரு படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளிவந்தால், அவற்றை ‘டிரோல்’ செய்து ரசிகர்கள் தயாரித்து வெளியிடும் ‘மீம்ஸ் போஸ்டர்கள்’ சமயங்களில் அதிக வரவேற்பைப் பெறும்.

ஒரிஜனல் போஸ்டரை விட அந்த ‘டிரோல் போஸ்டர்கள்’ பரபரப்பாகப் பேசப்படும்.

‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா தற்போது இயக்கி வரும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று மாலை வெளியிடப்பட்டது. அடுத்த சில நிமிடங்களிலேயே இப்பட போஸ்டரின் வடிவேலு வெர்ஷன் என அவர்களே ஒரு டிரோல் போஸ்டரையும் வெளியிட்டார்கள்.

விஜய் சேதுபதி இந்தப் படத்தில் திருநங்கை வேடத்தில் நடிக்கிறார். அது போலவே வடிவேலு பெண் வேடத்தில் உள்ள ஒரு புகைப்படத்தை இந்த டிரோல் போஸ்டருக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தின் இயக்குனர் தியாராஜன் குமாரராஜா, ஒரிஜனல் போஸ்டரைக் கூட டிவீட் செய்யாமல், டிரோல் போஸ்டரைத்தான் டிவீட் செய்துள்ளார்.

Related Posts