October 21, 2018

‘சூப்பர் டீலக்ஸ்’ – டப்பிங் ஆரம்பித்த சமந்தா

2018ம் ஆண்டின் இந்த அரையாண்டில் தென்னிந்தித் திரையுலகத்தின் சூப்பர் ஹிட் நடிகை யார் என்று சொன்னால் அது சமந்தா தான்.

அவர் நடித்த தெலுங்குப் படங்களான ‘ரங்கஸ்தலம், மகாநதி’, தமிழ்ப் படமான ‘இரும்புத் திரை’, இதன் தெலுங்கு டப்பிங் ‘அபிமன்யுடு’ ஆகிய படங்கள் நல்ல வசூலைப் பெற்றன.

தற்போது சமந்தா தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘சீமராஜா’, விஜய் சேதுபதியுடன் ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். ‘யு டர்ன்’ கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

தற்போது ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்காக அவரே சொந்தக் குரலில் பேசுகிறார். இந்தப் படத்தில் ‘வேம்பு’ என்ற கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார்.

படத்திற்காக அவர்தான் டப்பிங் பேச வேண்டும் என இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா வற்புறுத்தியதால் சமந்தாவே இன்று முதல் படத்தின் டப்பிங்கை ஆரம்பித்திருக்கிறார்.

மற்ற படங்களுக்கும் சமந்தாவே சொந்தக் குரலில் பேசுவாரா என்பது இனிதான் தெரியும்.

சமந்தாவின் அடுத்த தமிழ் வெளியீடுகளான ‘சீமராஜா, சூப்பர் டீலக்ஸ், யு டர்ன்’ ஆகியவை எதிர்பார்ப்புக்குரிய படங்களாகவே உள்ளன.

Related Posts