Connect with us

Upcoming Movies

துப்பாக்கி முனை – விரைவில்…திரையில்…

Published

on

thuppakki munai

வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ‘அன்னக்கிளி’ ஆர் செல்வராஜ் மகனும், மணிரத்னத்தின் இணை இயக்குனரான தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஹன்சிகா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘துப்பாக்கி முனை’.

வேல. ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், ‘மிர்ச்சி’ ஷா, மாரிமுத்து, தீனா, பரத் ரெட்டி, கல்யாணி நட்ராஜ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை ராசாமதியும், இசையை மாபெரும் இசைமேதை எல். வைத்யனாதனின் மகன்களான எல்.வி.முத்து கணேஷ் அமைக்கிறார்கள். படத்தொகுப்பினை புவன் ஸ்ரீனிவாசன் செய்கிறார்.

சென்டிமெண்ட் மற்றும் ஆக்க்ஷனுக்கு முக்கியதுவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கிளைமாக்ஸில் முக்கியமான சமூகப் பிரச்சனை குறித்து பேசப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் இந்த படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் கிரீஸ் நாட்டில் உள்ள மெக்கடோனியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ‘கபாலி, வி.ஐ.பி 2’ படங்களுக்குப் பிறகு ‘துப்பாக்கி முனை’ படத்தின் இசைக்கோர்ப்பு அங்கு நடைபெறுவது குறிப்படத்தக்கது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் இதுவரை யாரும் படம் பிடிக்காத ராமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் அதனைசி சுற்றியுள்ள தீவுகளில் எடுக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு ஒரு விசேஷ ட்ரீட்டாக அமையும் என படத்தின் ஒளிப்பதிவாளர் கூறியுள்ளார். இது தவிர மும்பை, டெல்லி, மதுரை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் தொடர் படப்பிடிப்பு நடத்தி 40 நாட்களில் மொத்த படப்பிடிப்பினையும் முடித்துள்ளனர்.

Upcoming Movies

பைரி – விரைவில்…திரையில்…

Published

on

பைரி - விரைவில்...திரையில்... - 4 Tamil Cinema

டிகே புரொடக்‌ஷன்ஸ் சார்பாக, V. துரைராஜ் தயாரிக்கும் முதல் திரைப்படம் ‘பைரி’.

புறா பந்தயத்தை மையமாக வைத்து, இந்திய சினிமாவில் சில திரைப்படங்கள் வந்திருந்தாலும், புறா பந்தயத்தின் தீவிரத்தையும், அதில் ஈடுபடுபவர்களின் வாழ்வியலையும் குறித்தும் முழுமையாகப் பேசும் ஒரு திரைப்படமாக உருவாகி வருகிறது ‘பைரி’.

குமரி மாவட்டத்தின் தலைநகரமான, நாகர்கோவிலும், அதன் சிறப்புகளும் அனைவரும் அறிந்ததே. ஆனால் 100 ஆண்டுகளுக்கு மேலாக நாகர்கோவில் நகரில், நடந்த புறா பந்தயங்கள் பற்றிய பெரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், பலருக்கும் இது குறித்து தெரியாமலேயே இருந்து வருகிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, நாகர்கோவில் நகரில் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்த புறா பந்தயத்தை மையமாக வைத்து, நடந்த பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், உருவாகி வரும் திரைப்படமே ‘பைரி’.

நாளைய இயக்குநர் சீஸன் 5-ல் கலந்து கொண்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, ‘நெடுஞ்சாலை நாய்கள்’ என்ற குறும் படத்திற்காக சீஸன் 5-ன் சிறந்த வசனகர்த்தா விருது பெற்ற ஜான் கிளாடி இத்திரைப்படத்தை இயக்குகிறார். இவர் சஞ்சீவ், மற்றும் சில இயக்குநர்களிடமும் உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்று நாளைய இயக்குநர் சீஸன் 3– ல் முதல் பரிசு வென்ற, ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ உட்பட பல குறும்படங்களை, நண்பர்களின் வளர்ச்சிக்காக தயாரித்து, 25-க்கும் மேற்பட்ட குறும்படங்களில் கதாநாயகனாக நடித்த சையத் மஜீத் , இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

கதாநாயகிகளாக மேக்னா, சரண்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் விஜி சேகர், SR.ஆனந்த குமார், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், கார்த்திக் பிரசன்னா, தினேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் நாகர்கோவில் நகரைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு, நாகர்கோவிலையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வேகமாக நடந்து வருகிறது.

ஒளிப்பதிவு – ஏ.வி. வசந்த்
படத்தொகுப்பு – R.S சதீஸ் குமார்
இசை – அருண் ராஜ்
பாடல்கள் – பிரான்சிஸ் கிருபா, கவித்ரன்
ஆக்‌ஷன் – விக்கி
ஒலிப்பதிவு – ராஜா
நடனம் – சிவ கிரிஷ்
தயாரிப்பு மேற்பார்வை – மாரியப்பன், விசு
பி.ஆர்.ஓ.– சக்தி சரவணன்

Continue Reading

Upcoming Movies

கைலா – விரைவில்…திரையில்…

Published

on

கைலா - விரைவில்...திரையில்...

பூதோபாஸ் இண்டர் நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பாஸ்கர் சீனுவாசன் தயாரிக்கும் படம் ‘கைலா’.

இந்த படத்தில் தானா நாயுடு கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் பாஸ்கர், சீனுவாசன், பேபி கைலா, அன்பாலயா பிரபாகரன், கெளசல்யா, செர்பியா, ஆதியா, சிசர் மனோகர், ரஞ்சன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

கொடைக்கானல், சென்னை, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் 45நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்தின் கதாநாயகி தானா நாயுடு துபாயில் பிறந்து வளர்ந்தவ.ர் இப்போது லண்டனில் படித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக 45 நாட்கள் இந்தியா வந்து நடித்து முடித்து சென்றுள்ளார்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது,

“உலகம் முழுவதும் இன்று வரை பேய் என்றால் ஒரு விதமான பயம் இருக்கத்தான் செய்கிறது. தானா நாயுடு இப்படத்தில் ஒரு எழுத்தாளராக நடிக்கிறார். அவர் பேயைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்து அதற்கான தேடுதலில் இறங்குகிறார்.

பல வருடங்களாக பேய் வீடு என்று மக்களால் சொல்லப்பட்டு பூட்டியே கிடக்கும் ஒரு வீட்டை தேர்ந்தெடுக்கிறார். அந்த வீட்டின் பிரச்சனையை ஆராயத் துவங்கும் போது ஒரு பெண்ணாக நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார். அதிலிருந்து மீண்டாரா என்பதை திகில் படமாக உருவாக்கி இருக்கிறோம்.

இதில் பேபி கைலா பங்கேற்ற பாடல் காட்சி ஒன்றை வித்தியாசமாக, ஐந்து லட்ச ரூபாய்க்கு பொம்மைகளை வாங்கி பாடல் காட்சியை படமாக்கினோம்,” என்றார் இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன்.
கதை திரைக்கதை வசனம் தயாரிப்பு இயக்கம் – பாஸ்கர் சீனுவாசன்
ஒளிப்பதிவு – பரணி செல்வம்
இசை – ஸ்ரவன்
பாடல்கள் – வடிவரசு
கலை – மோகன மகேந்திரன்
நடனம் – எஸ் எல் பாலாஜி
தயாரிப்பு நிர்வாகம் – ஆர் சுப்புராஜ்
எடிட்டிங் – அசோக் சார்லஸ்

Continue Reading

Upcoming Movies

இபிகோ 302 – விரைவில்…திரையில்…

Published

on

இபிகோ 302 - விரைவில்...திரையில்...

செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘இ.பி.கோ 302’.

இந்த படத்தில் கஸ்தூரி கதாநாயகியாக, துர்கா ஐ.பி.எஸ் என்ற போலிஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.

ஒரு கதாநாயகனுக்கு உருவாக்கப்படும் கதாபாத்திரம் எப்படி வலுவுள்ளதாக இருக்குமோ அப்படி இந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இளம் காதலர்களாக நாக சக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள் மற்றும் வையாபுரி, ராபின் பிரபு,போண்டாமணி, வின்ஸ்குமார் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

கரண் நடித்த ‘காத்தவராயன்’ படத்தை இயக்கிய சலங்கை துரை இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது,

“கஸ்தூரி அதிகாரியாக உள்ள பகுதியில் மூன்று வழக்குகள். முகமெல்லாம் சிதைக்கப்பட்டு யார் என்று அடையாளம் கண்டு பிடிக்க முடியாத படி படுகொலை செய்யப்பட்ட ஒரு உடல் கிடைக்கிறது. செத்தவன் யார் என்றும் தெரியவில்லை, கொலை செய்தவன் யார் என்றும் தெரியவில்லை. காவல் நிலையத்துக்குள் அடைக்கலம் தேடி வந்த இளம் ஜோடிகள், வெளியே போனால் ஜாதி கொலையாகக் கூடிய வாய்ப்புள்ள பிரச்சனை.

இன்னொரு படுகொலை வழக்கு. இந்த மூன்று கதைகளும் ஓரிடத்தில் வந்து நிற்கிற திரைக்கதை. அந்த முடிச்சை அவிழ்க்கிற போலீஸ் அதிகாரி துர்கா ஐ.பி.எஸ் ஆக கஸ்தூரி.

ரொம்பவும் பவர்புல்லான வேடம் அவருக்கு, சிறப்பாக நடித்திருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தில் உள்ளது.

இந்தப் படம் நடந்து கொண்டிருக்கும் போதே புதுமுகம் நிர்மல்ராஜ் என்பவரை வைத்து ‘எதிர்வினை’ என்கிற படத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறேன். அதையும் இதே செளத் இந்தியன் புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தான் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

இரண்டு படங்களும் நிறைவான படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது,” என்கிறார் இயக்குனர் சலங்கைதுரை.

ஒளிப்பதிவு – தண்டபாணி
இசை – அலெக்ஸ்பால்
எடிட்டிங் – காளிதாஸ்
கலை – மணிமொழியான்
நடனம் – தினா
ஸ்டண்ட் – தீப்பொறி நித்யா
பாடல்கள் – முத்துவிஜயன்.
தயாரிப்பு மேற்பார்வை – ராஜசேகர்
இணை தயாரிப்பு – ஆர்.பிரபு
தயாரிப்பு – செங்கோடன் துரைசாமி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சலங்கை துரை.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!