Connect with us

Tamil Cinema News

‘டூலெட்’ படமும், சர்வதேச திரைப்பட விழாக்களும்…

Published

on

tolet goa film festival

தேசிய விருது பெற்ற ‘டூலெட்’ படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆஸ்கர் விருது பெற்ற ஈரான் நாட்டு இயக்குநரே எப்படி இந்த மாதிரி ஒரு கதைக்களத்தில் உங்களால் ஒரு படத்தை உருவாக்க முயன்றது எனக் கூறி இயக்குநர் செழியனை வானளாவப் புகழ்ந்துள்ளார்.

“கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர்” உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த செழியன், தான் இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விழாக்களைக் கடந்து வந்திருப்பது இந்திய சினிமாவிலேயே யாரும் இதுவரை தொடாத சாதனை..

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் 2007 முதல் மென்பொருள் துறை வளர்ச்சியடைந்ததும் வீடு வாடகைக்குக் கிடைப்பது எவ்வளவு பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளது, நடுத்தர மக்கள் எவ்வாறு இதில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை இந்தப் படத்தில் யதாரத்தமாக காட்சிப்படுத்தியுள்ளார் செழியன்.

இந்தப்படத்தில் சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் இணைந்து நடித்துள்ளனர்.

இத்தனை சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘டூலெட்’ கலந்துகொண்டது எப்படி என பரவசத்துடன் விவரிக்கிறார் செழியன்..

“கடந்த சில வருடங்களுக்கு முன் விகடன்ல ‘உலக சினிமா’ங்கிற பேர்ல சர்வதேச அளவுல கவனம் ஈர்த்த படங்களை பற்றி எழுதிட்டு வந்தேன். நான் அப்படி ஒரு படம் பண்ண நினைச்சபோது, வாழ்க்கைல அடிக்கடி நாம் பார்க்கிற இந்த வீடு மாறும் பிரச்சனை தான் என் கவனத்துக்கு வந்தது. அதனால்தான் முதல் படத்திலேயே இப்படி ஒரு பிரச்சனையை கையில் எடுத்தேன். இது வெளிநாடுகளில் நடந்திருந்தால் எப்படி படமாக எடுத்திருப்பார்கள் என்கிற கண்ணோட்டத்தில் இந்தப் படத்தை இயக்கினேன்.

இரண்டுமுறை ஆஸ்கர் விருது பெற்ற ஈரானிய இயக்குநர் அஸ்கர் பர்காதி இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, எனக்கு படம் பார்த்த உணர்வே இல்லை, ஒருவரின் வாழ்க்கையை மிக நெருக்கமாக கூடவே இருந்து பார்த்தது போன்று இருந்தது எனப் பாராட்டினார்.

ஈரானிய படங்களை பார்த்துவிட்டு நாம் ஆஹா ஓஹோவென புகழ்கிறோம். ஆனால் எப்போது ஈரான் நாட்டுக்காரன் நம் தமிழ்ப்படத்தை பார்த்து வாய்பிளக்கப் போகிறான் என்கிற ஆதங்கம் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு நிறையவே உண்டு. இப்போது அவர் இருந்திருந்தால் இதைப் பார்த்து பெரிதும் மகிழ்ந்திருப்பார்.

சர்வதேச விழாக்களில் படத்தைப் பார்த்த பல நாட்டு இயக்குநர்கள், தமிழில் இப்படி ஒரு கலாச்சாராம் இருக்கிறதா, வீடு மாறுவது என்பது இவ்வளவு கஷ்டமானதா என ஆச்சர்யப்பட்டார்கள்.

இன்னும் ஒரு சில நாடுகளில் இந்த வீடு மாறும் பிரச்சனை இருந்தாலும் அது வேறு வடிவத்தில் இருக்கிறது. ஐஸ்லாந்து இயக்குநர் ஒருவர் கூறும்போது, அவரது ஊரில் சுற்றுலாவை மேம்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, வீடுகளை எல்லாம் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளாக மாற்றி வருவதால் வீடு மாறவேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகக் கூறினார். அர்மேனியாவில் இதே பிரச்சனை வேறு வடிவத்தில் இருப்பதாகச் சொன்னார்கள்.

அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிட்டபோது, அங்கே பாதுகாப்பிற்காக வந்திருந்த துப்பாக்கி ஏந்திய இளம் பெண் போலீஸ் ஒருவர் படம் முடிந்ததும் அழுதுகொண்டே போனது இப்போதும் என் கண் முன்னால் நிற்கிறது.

வீடு மாறும் பிரச்சனை வேறு வடிவத்தில் இருந்தாலும், அதனால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சனை, குழந்தைகளை வேறு பள்ளிகளுக்கு இடம் மாற்றுவது என்பது எல்லா ஊர்களிலும் உள்ளவர்களும் பொதுவாக சந்திக்கக் கூடியது தானே ? அதனால் தான் ’டூ லெட்’ பல நாடுகளில் உள்ளவர்களையும் கவர்ந்துவிட்டது எனச் சொல்லலாம்.

கடந்த வருடம் நவ-17ஆம் தேதி கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் தான் முதன்முதலாகக் கலந்துகொண்டது ‘டூ லெட்’ படம். அந்த விழா தான் இந்தப் படம் இன்னும் பல விழாக்களில் கலந்து கொள்வதற்கான வாசலை அகலமாகத் திறந்துவிட்டது.

ஒவ்வொரு விழாவிலும் படத்தைப் பார்த்த மற்ற நாட்டவர்கள் தங்கள் நாட்டு திரைப்பட விழாக்களிலும் இப்படம் கலந்து கொண்டால் அது தங்களுக்குப் பெருமை எனக் கூறி அவர்களே அழைப்பிதழ் அனுப்பி வரவேற்றனர்.

இதோ தற்போது நடைபெற்று வரும் கோவா திரைப்பட விழாவில் மூன்று போட்டிப் பிரிவுகளில் டூ லெட் கலந்து கொண்டது. இந்தியப் படங்களுக்கான போட்டிப் பிரிவு, அறிமுக இயக்குநர்கள் மட்டும் கலந்துகொள்ளும் சர்வதேச அளவிலான போட்டிப் பிரிவு, அனைத்துப் படங்களுக்கான சர்வதேசப் போட்டி பிரிவு ஆகியவற்றில் கலந்து கொள்கிறது. கடந்த 49 வருட கோவா திரைப்பட விழா வரலாற்றிலேயே முதன்முறையாக சர்வதேசப் போட்டிப் பிரிவில் கலந்து கொள்ளும் முதல் தமிழ்ப் படம் டூ லெட் தான்..

இத் திரையிடல் நேரம் அறிவித்த ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. அதனால் மறுபடியும் 27ம் தேதி திரையிட உள்ளார்கள். விருது பெறும் படங்களைப் பற்றிய விவரங்கள் 28 ந்தேதி அறிவிக்கப்பட உள்ளது.

’டூலெட்’ படம் நூறு விழாக்களுக்கு மேல் கலந்து கொள்ளும் என நானே எதிர்பார்க்கவில்லை. என்னுடைய குருநாதர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் படத்தைப் பார்த்துவிட்டு இப்படி ஒரு படம் பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சுன்னு பாராட்டினார். சர்வதேச விழாக்களில் படத்தைத் திரையிட்டு வரும் காரணத்தால் இங்கே இன்னும் பிரிமியர் ஷோவாக திரையிட்டுக் காட்டவில்லை.

வரும் டிசம்பரிலோ அல்லது பொங்கலுக்கு பின்னரோ இந்தப் படத்தை தியேட்டர்களில் வெளியிட இருக்கிறோம். சர்வதேச விழாக்களில் பாராட்டுக்களை குவிக்கும் இதுபோன்ற படங்களை தியேட்டர்களில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இந்த விஷயத்தில் சத்யம் தியேட்டர் எங்களுக்கு பக்கபலமாக இருப்போம் எனக் கூறியுள்ளார்கள். நிச்சயம் வணிக ரீதியாகவும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும்,” எனக் கூறினார் செழியன்.

Continue Reading

Tamil Cinema News

ஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு

Published

on

soundarya-visakan-honeymoon

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, நடிகரும் தொழிலதிபருமான விசாகன் இருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் அவர்களது திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

திருமணத்திற்குப் பின் சௌந்தர்யா, விசாகன் தம்பதியினர் தேனிலவுக்காக வடக்கு ஐரோப்பாவில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்துக்குச் சென்றுள்ளனர்.

இது பற்றிய தகவலை சௌந்தர்யா புகைப்படங்களுடன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

Continue Reading

Tamil Cinema News

‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு

Published

on

ellam-mela-irukkuravan-parthuppan

விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் ராவுத்தர் மூவீஸ்.

விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான இப்ராகிம் ராவுத்தருக்குச் சொந்தமான நிறுவனம் அது.

அந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ எனும் படத்தை தயாரித்து வருகிறது.

இப்ராகிம் ராவுத்தரின் மகன் முகம்மது அபுபக்கர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கிறார்.

கதாநாயகனாக ஆரி நடிக்க, கதாநாயகியாக சாஷ்வி பாலா நடிக்கிறார்.

இப்படத்தின் முதல் பார்வையை நடிகர் விஷ்ணு விஷால் இன்று வெளியிட்டார்.

இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Continue Reading

Tamil Cinema News

எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்

Published

on

gv-prakash-new-movie

பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.

இந்த நிறுவனம் தற்போது சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இன்று துவங்கி  உள்ளார்கள்.

இதன் துவக்க விழா இன்று எளிமையாக ஒரு கோயிலில் நடை பெற்றது.

மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது.

எழில் அவருடைய பாணியிலான காமெடி படமாகத்தான் இந்தப் படத்தை இயக்க உள்ளாராம்.

மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

No feed items found.

Trending