Connect with us

Tamil Cinema News

போராட வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம் – எஸ்.ஏ.சந்திரசேகரன்

Published

on

கிரீன் சிக்னல் வழங்கும்’ டிராஃபிக் ராமசாமி ‘படத்தின் பாடல்கள்வெளியீட்டு விழா  பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

பாடல்களை வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.

விழாவில் இயக்குநரும் கதை நாயகனுமான எஸ்.ஏ. சந்திரசேகரன்  பேசும் போது,

“நான் 40 நாட்களுக்கு முன்பு இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும்  என்று
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம்  கேட்ட போது விழா எப்போது? என்றவர் ,
எங்கிருந்தாலும் வருவேன் என்றார். அவருக்கு நன்றி.

காதலா , கோபமா , வீரமா
, சமூக சிந்தனையா , மண் வாசனையா எனதயும் வித்தியாசமான முறையில் எழுதுபவர்
அவர்.

உலகமே வியக்கும் ஷங்கருக்கு.  மெசேஜ்தான் அனுப்பினேன். உறுதியாக வருவேன்
என்றார். அவருக்கு நன்றி. அவர் என்னிடம் புத்திசாலித்தனமாக இருந்தவர்
.அதனால் தான் என்னுடன் 17 படங்களில் பணியாற்ற முடிந்தது.இங்கே இருக்கும்
ராஜேஷ், பொன்ராம் அவர்களுக்கும் நன்றி.

 விக்கி என்னுடன் 6 ஆண்டுகள் இருந்தார். அவர் சொன்ன கதைகள்
பிடிக்கவில்லை என்று சொல்லி வந்தேன். ஒரு நாள் டிராஃபிக் ராமசாமியின்
வாழ்க்கைக் கதையைப்  படிக்கக் கொடுத்தார். இரவே படித்து விட்டேன்.
மறுநாளே படமாக எடுக்கலாம் என்றேன். முடிவு செய்ததும் ஐந்தாறு முறை
டிராபிக் ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். அவரது நடை உடை பாவனைகளை உற்று
நோக்கினேன். எனக்குள் பொருத்திக் கொண்டேன்.

இது வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை.
போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால்
கூட குழந்தை அழுதால் தான் கிடைக்கும், போராட வேண்டாம் என்றால் எப்படி. ?
காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா? மெரினா
போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது ? தூத்துக்குடி
போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது ? போராட வேண்டாம் என்று சொல்வது
பைத்தியக்காரத்தனம் .

டிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக்
கொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும் ” என
எஸ்.ஏ.சந்திரசேகரன்  பேசினார்.

இயக்குநர் ஷங்கர் பேசும் போது ” இந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த
மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான்
மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன்.

எனக்கும் அப்படி ஆசை இருந்தது. இவர் கத்தி எடுக்காத இந்தியன் . வயசான
அந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக் கூட
நினைத்தேன். எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வட
போச்சே என்ற ஏமாற்றம் . இருந்தாலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க
நான் காத்திருக்கிறேன்.” என்றார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசும் போது ,

” எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும்  எனக்கும் நெருக்கமான பழக்கம் இல்லை
என்றாலும் அவர் என் மேல் அன்பும்  மெல்லிய மதிப்பும் வைத்திருப்பவர்
என்பதற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று பலரையும் அழைக்க முடியும் என்றாலும்
தன் மகன் விஜய் திருமணத்தை நடத்தி வைக்க வலம்புரி ஜானையும் என்னையும்
மட்டுமே நடத்தி வைக்க அழைத்தார். இரண்டாவது காரணம் இன்று இங்கே அழைத்து
இருப்பது. இதிலிருந்து அவர் மனதில் நான் இருப்பதாக என் உள் மனது
சொல்லியது.

இந்த டிராஃபிக் ராமசாமி மாதிரி ஒரு கதையைப் படமாக்க சமூக
அக்கறை வேண்டும். அது எஸ். ஏ.சிக்கு இருக்கிறது. அவர் வேறு கதையைப் படமாக
எடுத்திருக்கலாம் . ஆனால்   வியாபாரம் என்பது இரண்டாம் பட்சம்.
டிராஃபிக் ராமசாமி என்கிற நிகழ்காலத் தத்துவம் தன்னை ஈர்த்திருக்கிறது. அதில் ஒரு
படமாக்கும் அளவுக்கு கச்சாப் பொருள்  இருக்கிறது என்று  நம்பி ஈர்க்கப்பட்டிருக்கிறார். அதைப் படமாக்க வேண்டும் என்றால் ஒரு துணிச்சல் வேண்டும். அது இவருக்கு இருக்கிறது.
இறந்த காலத்தைக் கலை செய்வது எளிது. அதிலுள்ள சர்ச்சைக்குரிய வற்றைக் கழித்து விட்டு லாபங்களை மட்டும் எடுத்துக் கொண்டு கதை செய்யலாம் . எதிர்காலத்தைப் படமாக்குவது எளிது. கற்பனையாக அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் நிகழ்காலத்தைக் கதை செய்வது கடினம்.
நிகழ்காலத்தில் எரியும் நிமிடங்களை படமாக்குவது ஒரு சவால். அதை
இந்தப் படத்தில் செய்திருக்கிறார் எஸ்.ஏ.சி. இந்த எஸ்.ஏ.சி யைப்
பார்த்தாலும்  டிராபிக் ராமசாமியைப் பார்த்தாலும் போராட வயது ஒரு
தடையில்லை என்று கூற முடியும் . போராட உடல் நலம் ஒரு தடையல்ல. போராட வயதுண்டா? தேவையானது மனசு தானே தவிர வயதல்ல. நெருப்புக்கு வயதுண்டா? ,
சூரியனுக்கு வயதுண்டா? ,காற்றுக்கு வயதுண்டா?  கடலுக்கு வயதுண்டா? ,
மலைகளுக்கு வயதுண்டா? போராட வயதுண்டா? நெருப்பில் இளையது மூத்தது என்று உண்டா ?
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?

எரியும் நெருப்பில்  இளையது மூத்தது உண்டா? என்பதற்கு உதாரணமாக இருப்பவர் இந்த டிராஃபிக்  ராமசாமி. இவரது மறைக்கப்பட்ட வாழ்க்கை போராட்ட
இருட்டறை வாழ்க்கை  பலரும் அறியாதது, அதை அவர் வெளிப்படுத்தவும்  விரும்ப
மாட்டார். ஏனென்றால் போராளிகள் நெஞ்சைக் காட்டுவார்கள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள். இந்த ராமசாமி மனசுக்குள் ஒரு குழந்தையாக
இருக்கிறார்..

தன்னைப் பற்றிப் பேசும் போதெல்லாம் கை
தட்டுகிறார்.
போராளிகளுக்கும் பாராட்டு வறட்சி இருப்பது தெரிகிறது, போராளிகள்
எப்போதும் ரசனை உள்ளம் கொண்டவர்கள், இவரும் ஒரு ரசிகராக இருக்கிறார்.

எல்லா போராட்டங்களும் வெற்றி பெறும் என் று நம்புவது மூட நம்பிக்கை .

வெற்றி பெற்றவை எல்லாம் நல்ல போராட்டங்கள் இல்லை. நம் நாட்டின் மக்களிடம்
சட்டம் பற்றிய அறியாமை உள்ளது. உரிமை பற்றிய அறியாத ஏழ்மை உள்ளது. இந்த
டிராஃபிக் ராமசாமி ஏன் நீதிமன்றம் செல்கிறார்? எதற்காக நீதிமன்றத்தில்
நிற்கிறார் ? இவ்வளவு உரிமை நமக்கு இருக்கிறது  என்பது அறிந்தால் நல்வினை
ஏற்படும்.

அரசின் உளவுத்துறை சிற்றெறும்பைக்கூடச் சந்தேகிக்கும் . அப்போதுதான் அது
உளவுத் துறை . இங்கே இந்தக் கணம் பேசுவது கூட கண்காணிக்கப்படும்.
பதிவாகும். உளவுத் துறை முதலமைச்சருக்கு சார்பான செய்திகளை மட்டும்
சொல்லக் கூடாது.  விமர்சனத்தையும் கொண்டு சேர்க்க வேண்டும்.  எல்லா
ஊடகங்களும் ஊடக  முதலாளிகள் என்னும் தனி நபர் விருப்பம் சார்ந்து தான்
இயங்குகின்றன .அதையும்  தாண்டிய சமூக அக்கறையில் ஒரு பொதுப்புள்ளியில்
இணைந்து இப்படத்தை வெற்ற பெற கொண்டு சேர்க்க வேண்டும். டிராஃபிக் ராமசாமி
படத்துக்கு பொதுவான வெளிச்சம் பெற வேண்டும் .

அரசு எப்போதும் போராட்டங்களை ஒடுக்கவே முயல்கிறது.. ஒடுக்குமுறையை விட்டு
விட்டு போராட்ட ங்களின் காரணங்களை அறிய வேண்டும். ஆராய வேண்டும் . அன்று
ஈரோட்டு ராமசாமி என்று ஒரு போராளி இருந்தார். இந்த அக்கிரகாரத்து
ராமசாமியை ஒரு போராளியாகவே  பார்க்கிறேன். டிராஃபிக்  ராமசாமி  போன்ற
சமூக கோபம் இருப்பதால்தான் இந்த சமூகம் நம்பிக்கையோடு இருக்கிறது.இந்தப்
படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவது சமூகத்துக்கான பலமாகும். .
இப்படம் வெற்றி பெற என்று விரும்புகிறேன் .வாழ்த்துகிறேன் என
வைரமுத்து பேசினார்.

விழாவில் சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி பேசும் போது ,

“இந்தப் படம்  உருவாவதில் எனக்குப் பெருமை. பயமின்மை , தன்னம்பிக்கை ,
தைரியம் மூன்றும் இருநதால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும்.
யாருக்கும் பயப்பட வேண்டாம்.. பயமில்லை என்றால் நீ ராஜா. பயந்தால் நீ
கூஜா ” என்றார்.

விழாவில் இயக்குநரும் கதை நாயகனுமான எஸ்.ஏ.சந்திரசேகர ன்  , திருமதி ஷோபா
சந்திரசேகரன் , நிஜமான கதை நாயகன் சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி ,
இயக்குநர்கள்   ஷங்கர் .எம்.ராஜேஷ் , பொன்ராம் ,  சாமி , நடிகைகள்
அம்பிகா , ரோகினி ,உபாசனா , அபர்னதி ,நடிகர்கள் ஆர்.கே. சுரேஷ் ,
மோகன்ராம், சேத்தன் , தயாரிப்பாளர் சங்கச் செயலாளர்  கதிரேசன்
,தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் ,  ஒளிப்பதிவாளர் குகன் ,
இசையமைப்பாளர் பாலமுரளி பாலு , கலை இயக்குநர்  வனராஜ் , எடிட்டர்
பிரபாகர் , படத்தின் இயக்குநர் விக்கி ஆகியோரும் கலந்து கொண்டனர் .

விழாவை முன்னிட்டு  அரங்க மேடையில் நீதிமன்ற செட் போடப்பட்டு இருந்தது.

விழாவில் பேசியவர்கள் சாட்சிக் கூண்டில் நின்று கொண்டு தான் பேசினார்கள்.
இது பார்வையாளர்களுக்கு  புதுமையான தோற்றத்தையும் அனுபவத்தையும்
கொடுத்தது.

Tamil Cinema News

விஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’

Published

on

விஜய் சேதுபதி வசனம் எழுதும் சென்னை பழனி மார்ஸ்

விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் – ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸூடன் இணைந்து தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’.

முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்துக் கொண்டு ஒரு டிராவல் படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர் பிஜூ.

தமிழில் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை இயக்கியதற்குப் பிறகு மீண்டும் இயக்கும் படம் இது.

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதை நோக்கிய கனவும் நிச்சயம் இருக்கும். ஆனால் அந்தக் கனவுகளை உண்மையாக்கும் முயற்சியில் சிலர் பாதியில் தோற்றிருக்கலாம். அல்லது போராடிப் பார்த்து விட்டிருக்கலாம். சிலர் வெற்றியும் பெற்றிருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு அற்புதக் கனவை ப்ளாக் காமெடி ஜானரில் ரசிக்க ரசிக்கச் சொல்லியிருக்கும் படம் தான் ‘சென்னை பழனி மார்ஸ்’.

பிஜூ திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் ஆகியவற்றை கவனிக்க, தனக்கேயுரிய ப்ளாக் காமெடி உணர்வை வசன முலாமாகப் பூசி மெருகேற்றியுள்ளாராம் விஜய் சேதுபதி.

பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மதன்குமார், தட்சிசிணாமூர்த்தி, ஏ. ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிரஞ்சன் பாபு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை விக்னேஷ் ஜெயபால் எழுதியுள்ளார்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

Continue Reading

Tamil Cinema News

எஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி

Published

on

எஸ்ஜே சூர்யாவை மாற்றிய மான்ஸ்டர் வெற்றி

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகிய ‘மான்ஸ்டர்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தின் வெற்றிக்கு நன்றி சொல்வதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் சூர்யா.

அப்போது அவர் பேசுகையில்,

“நான் நல்லது செய்யும்போது பாராட்டி, தவறு செய்யும் போது சுட்டிக்காட்டி என்னை இந்த இடத்திற்கு கொண்டுவந்த பத்திரிகையாளர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. புகழை அனைவருக்கும் சேர்க்க அவர்கள் தவறியதில்லை. அதற்கு ஆதாரம்தான் இப்படத்தின் வெற்றி. இந்த வெற்றியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

உதவி இயக்குநராக பணியாற்றிய காலத்தில் ஸ்டுடியோக்களில் நடக்கும் படப்பிடிப்பிற்கு ரூ.50/- கொடுத்து வேடிக்கைப் பார்ப்பேன். பாலைவனத்தில் ஒட்டக மனிதனாக நடந்து வந்தபோது இந்த பயணம் சோலைவனமாகத் தெரிகிறது. நேற்று மக்களோடு திரையரங்கில் சென்று படம் பார்த்தேன்.

‘இறைவி’ படக்குழுவினரும், பாபிசிம்ஹாவும் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். அவருடைய குழந்தையும், மற்றும் அங்கு வந்திருந்த குழந்தைகளும் எலி வரும் காட்சிகளில் ஆளுக்கொரு விதமாக ஓசை எழுப்பி உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

ஒரு நடிகனாக வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் 25 ஆண்டுகள் தொடர் முயற்சிக்குப் பிறகு நிறைவேறியிருக்கிறது. இந்த புதுபயணம் தொடரும். என் படத்திற்கு குடும்பத்தோடு வந்து பார்க்கும்போது இத்தனை நாள் இதை தவறவிட்டோமே என்று குற்றவுணர்வு வருகிறது. இத்தனை ஆண்டுகள் நான் ஏன் இதை செய்யவில்லை ? என்று தோன்றியது.

எலியால் தொடங்கிய இந்த பயணத்தை இதே போல் அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிக்க ஏங்கிக் கொண்டிருக்கிறேன். நல்ல வாய்ப்பு என்னைத்தேடி வரும் என்றும் நம்புகிறேன்.

இந்த படத்திற்கு திரையரங்கத்தின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. ஏனென்றால், இப்படத்தில் குத்துப்பாடல், காதல் காட்சிகள் எதுவும் இல்லாததால் தரமான படத்தை அனைவரும் ஆர்வமாக வந்து பார்க்கின்றனர். ‘நியூ’ படத்தின் பெரிய வெற்றியைக் கொடுத்தீர்கள். அதேபோல் இப்படத்திற்கு கிடைத்திருக்கிறது.

‘வாலி‘-யில் என்னை உயரத்தில் வைத்ததும் அதன்பிறது நான் தவறு செய்து சறுக்கும்போது என்னைத் தட்டிக் கேட்ட பத்திரியாளர்களுக்கு நன்றி.

இப்படம் புதிய பயணத்தின் தொடக்கமாக கருதுகிறேன். எலியின் மூலம் பிள்ளையார் சுழி போட்டு இந்த பயணம் தொடங்கியிருக்கிறது. இயக்குநர் நெல்சனின் கதைக்கு நான் கருவியாக இருந்திருக்கிறேன் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

என் படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும். ஆனால், ‘இறைவி‘-யில் இருந்து அது மாறியிருக்கிறது. என்னை நம்பி தரமான பாத்திரம் கொடுத்த கார்த்திக் சுப்புராஜுக்கும் நன்றி. ராஜுமுருகன் இப்படம் ‘ஜென்’ கதையை படமாக எடுத்தது போல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

எலியை நான் பிள்ளையாரின் வாகனமாகத்தான் பார்க்கிறேன். ஆகையால் என் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்குமா என்ற பயம் எனக்கில்லை. படம் பார்க்கும்போது நீங்கள் என்ன உணர்ந்தீர்களோ, அதை நெல்சன் கதை கூறும்போதே நான் உணர்ந்தேன்.

ஒரு நடிகனாக உழைப்பதே நான் விரும்பும் சரஸ்வதி, என் நடிப்பு. அதன் மூலம் லட்சுமி வரவேண்டும் என நினைக்கிறேன். லட்சுமி என்று பணம், புகழ் இரண்டையும் குறிப்பிட்டுதான் கூறுகிறேன். ஒரு தமிழ் படம், அடுத்து ஹிந்தி, பிறகு தமிழ், தெலுங்கு இந்த வரிசையில் நடிக்க விரும்புகிறேன்.

நான் சாதாரண வாழ்க்கைதான் வாழ விரும்புகிறேன். எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கிவில்லையென்றால் என் கையில் இருக்கும் கதையைக் கொண்டு நானே நடிப்பேன்.

‘உயர்ந்த மனிதன்’ படத்தில் நடிக்கும் போது அமிதாப்பச்சன் சார் ஒவ்வொரு காட்சியும் ஒரே டேக்கில் நடித்து விடுவார். ஒரு எக்ஸ்டிரா டேக் கூட வாங்கமாட்டார். ஒவ்வொரு காட்சியையும் முதல் வாய்ப்பாக கருதி நடித்துவிடுவார். 59 ஆண்டுகாலமாக அவர் வெற்றியின் ரகசியம் இதுதான்.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ செல்வராகவனின் இயக்கத்தில் நன்றாக வந்திருக்கிறது. ‘மாயா‘ படத்தின் இயக்குர் அஷ்வின் இயக்கத்தில் ‘இறவாக்காலம்‘ என இரண்டு படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

விஜய், அஜித் இருவருமே எந்த முடிவெடுத்தாலும் அதைச் சரியாக செய்து வெற்றியடையக் கூடியவர்கள். அது அரசியலாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி, இருவருக்கும் வெற்றி பெறும் வல்லமை இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வெற்றியடைந்த பிறகே திருமணத்தைப் பற்றி யோசிப்பேன்.

வாழ்க்கையில் நாம் அடையும் தோல்வி அனைத்தையும் கற்றுக் கொடுக்கும். ஒரு படம் தயாரித்தால் போதும் அனைத்தும் அடங்கிவிடும்.

சினிமாவில் ஒரு தவறுசெய்துவிட்டால் அடுத்த வாய்ப்பு வருவதற்கு 8 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை வேறுவழியில்லாமல் கிடைத்த வேலையெல்லாம் செய்தாக வேண்டும்.

தயாரிப்பு பணியை எடுத்ததே நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் தான். ‘உயர்ந்த மனிதன்‘ பல தடைகளைத் தாண்டி விரைவில் அனைத்து பிரச்னைகளும் முடிந்து கண்டிப்பாக வெளியாகும்,” என்றார் எஸ்ஜே சூர்யா.

Continue Reading

Tamil Cinema News

ஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா

Published

on

ஜிப்ஸி, எமோஷனலான படம் - ஜீவா

ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில், ராஜு முருகன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ஜீவா, நடாஷா சிங், சன்னி வேய்ன், லால் ஜோஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் ஜிப்ஸி.

இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர், திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர்.

மலையாள இயக்குநர் லால்ஜோஸ் பேசும்போது,

“முதலில் என்னை நடிக்க அழைத்தார்கள். நான் ஆள்மாத்தி என்னை அழைத்து விட்டார்கள் என்று நினைத்தேன். சென்னைதான் என்னை இயக்குநர் ஆக்கியது. இந்தப்படத்தில் சின்ன ரோல் தான் என்று நினைத்தேன். ஆனால் பெரிய ரோல். ஸ்பாட்டில் நடிகராக இருக்கும் போது பெரிய பதட்டம். படிச்ச டயலாக்ஸ் எல்லாம் மறந்து போனது. சூட்டிங் முடிந்த போது இனி நான் தப்பித்தேன் என்று நினைத்தேன். ஆனால் டப்பிங்கும் நான்தான் பேசணும் என்றார்கள். பேசி இருக்கிறேன். இந்த ஜிப்ஸி ஒரு அபூர்வ சினிமா. பெரிய இயக்குநர்களின் பெயரைப் பார்த்து தான் நாங்கள் படம் பார்ப்போம். அதேபோல் வருங்கால சந்ததியினர் ராஜு முருகன் பெயரைத் தேடுவார்கள்,” என்றார்.

பாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது,

“ஜீவா எத்தனையோ படங்கள் நடித்திருக்கிறார். ஆனால் இதுதான் அவர் பெயருக்கான படம். என் தம்பி ராஜு முருகனுக்கு அண்ணனாக நன்றிச் சொல்லிக்கொள்கிறேன். அவன் தேசியவிருது வாங்கி இருக்கிறான். வாங்க இருக்கிறான். அதைவிட எல்லாம் பெருமை இந்தப்படத்தில் பாந்த்சிங் போன்றவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறான். அதுதான் பெருமை. நான் சந்தோஷ் நாராயணன் சாரின் பெரிய ரசிகர். இந்தப்படத்தின் காரணி அம்பேத்குமார். அவர் இனிஷியல் S. அவர் எதற்குமே நோ சொன்னதே கிடையாது. தேனிசை செல்லப்பா பற்றி இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. ஈழத்தில் நடந்த கொடுமைகளைச் உலகுக்கு சொல்ல பாடல்கள் மூலமாக நிதி திரட்டியவர். இந்த ஜிப்ஸி மிகப்பெரிய வெற்றியை அடையும்,” என்றார்

இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது,

“முதல்முறையாக என் ஸ்டுடியோவில் குக்கூ படத்தின் இசைப்பதிவு தான் நடந்தது. ராஜுமுருகன் ஒரு மாமனிதன். இந்தப்படத்திற்கு ஜிப்ஸி என்ற பெயரைக் கேட்டதும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏன்னா எல்லா கலைஞர்களும் ஒரு ஜிப்ஸியாக இருக்க ஆசைப்படுவார்கள். அந்த அனுபவத்தை மொத்தமாக கொடுத்த ராஜு முருகன் அவர்களுக்கு நன்றி. தயாரிப்பாளர் அம்பேத்குமார் இதுவரை எங்கள் வேலைகளில் தலையிட்டதே இல்லை. எல்லாவிதமான கல்ச்சர் உள்ள மக்களுக்கும் கர்நாடக இசையைக் கொண்டு சேர்க்கும் டி.எம் கிருஷ்ணா இந்தப்படத்தில் பாடி இருக்கிறார். இந்தப்படத்தில் பாடகர்கள் உள்பட 200 இசை கலைஞர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த ஜெனரேஷனின் பெஸ்ட் ரைட்டராக அறிவு அவர்களைப் பார்க்கிறேன். அவர் எழுதிய பாடல் எனக்குப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. ஜீவா உள்பட எல்லோரும் பயங்கரமாக உழைச்சிருக்காங்க. இந்தப்படம் உணர்வு ரீதியாகவும் டெக்னிக்கலாகவும் சிறப்பாக வந்திருக்கிறது,” என்றார்

தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசும்போது,

“ஒலிம்பியா மூவிஸின் ஜிப்ஸி படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. நானும் ராஜு முருகனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னபட்ஜெட் படம் ஒன்று பண்ணலாம் என்று பேசினோம். யுகபாரதி வீட்டில் இருந்து யாரை ஹீரோவாகப் போடலாம் என்று பேசினோம். யுகபாரதி ஜீவாவைச் சொல்லவும் உடனே முடிவு செய்தோம். அதன் பின் இந்தப்படம் பெரியபடமாக வளரத் துவங்கியது. எனக்கு எல்லாத் தரப்பிலும் நண்பர்கள் உதவி வருகிறார்கள். அவர்களுக்கும் என் குடும்பத்திற்கும் நன்றி,” என்றார்

நடிகர் ஜீவா பேசும்போது,

“ஜிப்ஸி எனக்கு ஒரு பெரிய பயணம். என் வீட்டிலே நான் ஜிப்ஸி போலத்தான். இந்தமாதிரி ஒரு படம் கிடைத்ததும் மிகப்பெரிய மகிழ்ச்சி ஆனேன். ஜிப்ஸி ரசிகனை முன்மொழிபவன். இன்னைக்கு நாம போன், நியூஸ் சேனல் எல்லாத்தையும் பார்க்காமல் இருந்தால் பிரச்சனைகள் இல்லாமல் இருப்பது போல இருக்கும். இந்தப்படத்திற்கு நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணித்து இருக்கிறேன். இந்தப்படத்தில் ராஜுமுருகன் சார் எனக்கு நல்ல தீனி கொடுத்து இருக்கிறார். ஒரு நடிகன் நல்ல பெயர் வாங்குறான்னா அதற்கு காரணம் இயக்குநரின் எழுத்து தான். ராஜு முருகன் எழுத்து உணர்வைச் சரியாக வெளிப்படுத்தும். ராம், கற்றது தமிழ் படங்கள் எப்படி எமோஷனை வெளிப்படுத்தியதோ ஜிப்ஸி அதைவிட அதிகமாக எமோஷனை வெளிப்படுத்தும். ராஜு முருகன் ஒரு கம்யூனிஸ்ட். இந்தமாதிரியான ஆடியோ லாஞ்ச்கள்தான் நிறைய நடக்க வேண்டும். பாந்த்சிங் போன்றவர்களை அறிமுகப்படுத்திய இந்த மேடை மிகச்சிறப்பான மேடை. இந்தப்படத்தில் உழைத்த அனைவருமே உண்மையாக உழைத்திருக்கிறார்கள். எனக்கு நல்ல ஒரு ஆல்பத்தை இந்தப்படம் மூலம் தந்த இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு நன்றி,” என்றார்

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!