December 16, 2018

16 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு புது வாய்ப்பு

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்தவர் த்ரிஷா.

கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, ஆர்யா என பல நடிகர்களுடன் நடித்திருந்தாலும் ரஜினிகாந்த் படத்தில் நடித்ததில்லை.

2002ம் ஆண்டு வெளிவந்த ‘மௌனம் பேசியதே’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான த்ரிஷாவுக்கு கடந்த 16 வருடங்களில் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததேயில்லை.

அவரும் பல பேட்டிகளில் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவருடைய அந்த ஆசை தற்போது நிறைவேறியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் த்ரிஷாவும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

இப்படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், ஹிந்தி நடிகர் நவாசுதீன் சித்திக்கி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ரஜினிகாந்த் படத்தில் நடிப்பது பற்றி த்ரிஷா, “சில நேரங்களில் நீங்கள் எழுந்த பிறகும் கனவு காண்பீர்கள். சிறந்த திங்கள், கடவுளுக்குப் பிடித்த குழந்தை, எனது வட்டம் இன்று முடிவுக்கு வந்தது,” என்று கூறியிருக்கிறார்.

ஆனால், படத்தில் த்ரிஷா, ரஜினிகாந்தின் ஜோடியா அல்லது முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறாரா என்பது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.

Related Posts