November 17, 2018

வாய்க்கா தகராறு – விரைவில்…திரையில்…

ராயல் சினி எண்டர்டைன்மெண்ட்  பட நிறுவனம் சார்பில் பி.முருகவேல் தயாரிக்கும் படம் ‘வாய்க்கா தகராறு’.

இந்த படத்தில் மயில்சாமி மகன், யுவன் மயில்சாமி கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக விஜய்ராஜ் நடிக்கிறார். நாயகிகளாக வர்ஷிகா நாயகா, நைனா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் பவர்ஸ்டார், சிங்கம்புலி, மனோபாலா, போண்டாமணி, கராத்தே ராஜா, சுரேகா, ரேவதி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தை சுரேஷ் கே வெங்கிடி இயக்குகிறார். இவர் மலையாளத்தில் இயக்குனர் கே.மது, சுதிசங்கர் போன்ற இயக்குனர்களிடமும், பேட்டன் போஸ் என்கிற கதாசிரியரிடமும் உதவியாளராக இருந்தவர். இவர் இயக்கும் முதல் படம் இது.

படம் பற்றி இயக்குனர் சுரேஷ் கே வெங்கிடி கூறியதாவது,

“என்று தணியும்’ என்ற படத்தில் நடித்திருந்த யுவன் மயில்சாமியையும், “யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வை” என்ற படத்தில் நடித்த விஜய் ராஜ் ஆகிய இருவரையும் வைத்து, முதல் படம் இயக்கியுள்ளேன். இது ஒரு செண்டிமெண்ட்டான கதை, இதை கமர்ஷியலாகவும் உருவாக்கி உள்ளோம்.

ஒரு ஆண்… சூழ்நிலை காரணமாக அவனுக்கு இரண்டு மனைவிகள். இரண்டு மனைவிகளுக்கும் ஒவ்வொரு ஆண் மகன்.

சண்டையிட்டுக் கொள்ள வேண்டிய பெண்கள் ஒற்றுமையாக வாழ, சகோதரர்கள் இருவரும் மோதிக் கொள்ள, இவர்களுக்குள் சமாதானம் ஏற்பட்டதா? இல்லையா என்பது தான் கதை.

படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா, ஊத்துக்கோட்டை, சென்னை மற்றும் திருப்போரூர் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. கிராமப்புற வாழ்வியலை அப்படியே பதிவு செய்துள்ளோம். தேவா இசையில், விரைவில் இசை வெளியீட்டு விழா நடைப்பெற உள்ளது,” என்றார் இயக்குனர்.

இசை – தேவா
பாடல்கள் – கவிமணி , P. முகவேல். சாரதா கோனேஸ்வரன். சுரேஷ் கே.வெங்கிடி
கலை – ஜான் கென்னடி
ஒளிப்பதிவு – முத்துராஜ்
நடனம் – அசோக்ராஜா
சண்டை பயிற்சி – நாக் அவுட் நந்தா, கஜினி குபேரன்
எடிட்டிங் – காளிதாஸ்
தயாரிப்பு நிர்வாகம் – ஆறுமுகம்.
கதை வசனம் தயாரிப்பு – P.முருகவேல்
திரைக்கதை, இயக்கம் – சுரேஷ் கே வெங்கிடி.

Related Posts