Connect with us

Tamil Cinema News

‘வண்டி’யில் நடிப்புப் பயிற்சி பெற்ற விதார்த்

Published

on

vandi audio launch news

ரூபி பிலிம்ஸ் என்னும் புதிய பட நிறுவனத்தின் சார்பில் ஹஷீர் தயாரிப்பில், புதிய இயக்குநர் ரஜீஸ் பாலா இயக்கத்தில் விதார்த், சாந்தினி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வண்டி’.

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இசையை வெளியிட்டு வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பேசியதாவது…

‘வண்டி’ பட தயாரிப்பாளர் ஹஷீர்

தமிழ்நாடு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் கலாச்சாரமும் ரொம்ப பிடிக்கும். அதை ஒட்டி ஒரு படம் பண்ணனும், ரொம்ப யதார்த்தமாக, ரியலாக எடுக்கணும்னு ஆசைப்பட்டோம். இந்த வண்டி படத்தில் நிறைய இடங்களில் பல கேமராக்கள் வைத்து, மறைத்து வைத்தெல்லாம் எடுத்திருக்கிறோம். இந்த வகையில் தமிழில் முதல் படமாக இருக்கும் என்று நினைக்கிறேன், தொடர்ந்து நிறைய தமிழ் படங்கள் தயாரிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன்

விதார்த் நடிச்சா அது நல்ல படமாதான் இருக்கும். தமிழ்நாட்டில் சமீபத்தில் 150 திரையரங்குகள் புதிதாக வந்திருக்கின்றன. சினிமா நன்றாகத்தான் இருக்கிறது. நல்ல படங்கள் எடுத்தால் கண்டிப்பா ஓடும், இந்த படமும் அதில் ஒன்றாக இருக்கும்.

நடிகர் விஜித்

இந்த படம் ஒரு ஹைப்பர் லிங் கதையமைப்பைக் கொண்ட படம். இதில் 3 பயணங்கள் உள்ளன, அதில் நானும் ஒரு கதையில் நடித்திருக்கிறேன். இயக்குனர் படத்தை எடுக்கும்போது நிறைய விஷயங்களில் ஏன் என்ற கேள்வி எழுந்தது. அதை கடைசியாக பார்க்கும்போது தான் இயக்குனர் மனதில் என்ன நினைத்தார் என்பது புரிந்தது.

அருள்தாஸ்

வண்டி ஒரு சிறப்பான ஸ்கிரிப்ட். விதார்த் ஒரு நல்ல யதார்த்தமான நடிகர். மல்டி கேமரா செட்டப்பில் படத்தை எடுத்திருக்கிறார்கள், இது கொஞ்சம் புதுவிதமான அனுபவமாக இருக்கும். செலவை பற்றி கவலைப்படாமல் நிறைய செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர். கேரளா பூர்வீகம் என்றாலும் தமிழில் படம் எடுக்க ஒரு பெரிய குழுவே வந்திருக்கிறது. அவர்களை நாம் ஆதரிக்க வேண்டும்.

இசையமைப்பாளர் சூரஜ் எஸ் குரூப்

சோலோ படத்தில் சீதா கல்யாணம் பாடலுக்கு இசையமைத்திருந்தேன். அந்த பாடலுக்கு மிகப் பெரிய வரவேற்பை தமிழ் ரசிகர்கள் கொடுத்தார்கள். நானும் சென்னையில் வளர்ந்தவன் தான். ஜிவி பிரகாஷ் சார் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். தொடர்ந்து தமிழ் படங்களுக்கு இசையமைக்க விரும்புகிறேன்.

இயக்குனர் ஷண்முகம் முத்துசாமி

வந்தாரை வாழ வைக்கும் குணம் எங்கள் தமிழர்களின் பண்பாடு. கேரளாவில் இருந்து வந்திருக்கும் உங்களையும் கொண்டாடுவோம். இயக்குனர் என்ன சொல்ல நினைத்தாரோ அதை சிறப்பாக சொல்லியிருக்கிறார். எஸ் ஃபோகஸ் சரவணன் ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறார் என்றால் அது மிகச்சிறப்பான படமாகத்தான் இருக்கும்.

எஸ் போகஸ் சரவணன்

ஜிவி பிரகாஷ், பார்த்திபன் நடிப்பில் குப்பத்து ராஜா படத்தைத் தயாரித்து வருகிறேன். இங்கு வந்த விருந்தினர்கள் எல்லோரும் எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்தவர்கள். படம் இந்த அளவுக்கு வந்ததற்கு தேனப்பன் ஒரு முக்கிய காரணம். விதார்த் எளிமையானவர், மிகவும் உண்மையாக பழகக் கூடியவர். சின்னப் படங்களுக்கு திரையரங்குகள் அவ்வளவாகக் கிடைப்பதில்லை. இந்த வண்டி படத்துக்கு எல்லோரும் உதவ வேண்டும்.

பட இயக்குனர் ரஜீஷ் பாலா

புது இயக்குனருக்கு தயாரிப்பாளர் கிடைப்பது ரொம்ப கஷ்டம். அப்படி கிடைத்த பின்னரும், இந்தப் படம் தயாரிப்பில் நிறைய பிரச்சினைகளை சந்தித்தது. ஒரு நல்ல தயாரிப்பாளர் இருந்தால்தான் நல்ல படம் வரும், அப்படி ஹஷீர் எனக்கு ஒரு நல்ல தயாரிப்பாளராக அமைந்தார். விதார்த் கேமராவுக்கு முன்னால் தான் நடிப்பார், மற்றபடி மிகவும் நல்ல மனிதர். இந்த படம் 70 நாட்கள் படப்பிடிப்பில் இருந்தது, 55 நாட்கள் இரவு பகலாக படப்பிடிப்பு நடந்தது. மொத்தக் குழுவின் கடின உழைப்பினால் தான் இது சாத்தியமானது.

ஜான் விஜய்

பைக்கை வைத்து நீண்ட நாளைக்கு பிறகு ஒரு படம். தொடர்ந்து போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். இதில் இயக்குனர் என்னுடைய தோற்றம் தனித்துவமாக இருக்க நிறைய மெனக்கெட்டிருக்கிறார். இதுவரை நடித்ததிலேயே சிறப்பான போலீஸ் கதாபாத்திரம் இதுவாகத்தான் இருக்கும்.

ஆதிக் ரவிச்சந்திரன்

விதார்த் ஒரு நல்ல நடிகர் என்று எல்லோரும் சொல்கிறார்கள், ஆனால் அதையெல்லாம் தாண்டி அவர் ஒரு போராளி. நீண்ட காலமாகவே போராடி வருகிறார். பொல்லாதவன் படத்துக்குப் பிறகு பைக்கை வைத்து ஒரு படம், வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

விதார்த்

பத்திரிகையாளர்கள் பாராட்டில் இன்று ‘மேற்கு தொடர்ச்சி மலை’ 3வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி, லெனின் பாரதி அளவுக்கு எனக்கும் மகிழ்ச்சி. வீரம் படத்தின் போது எனக்கு இந்தக் கதையை சொல்ல வந்தார்கள்.
ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் 4 கேமரா வைத்தெல்லாம் படத்தை எடுத்தார்கள். இயக்குனர் ரொம்பவே கஷ்டப்படுத்தினார். எங்கள் எல்லோருக்கும் அவரைப் பார்த்தாலே பயம்.

‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா உடன் நடிக்கும்போது இயக்குனர் ராதாமோகன் என் நடிப்பைப் பாராட்டித் தள்ளினார். அதற்குக் காரணம் இந்த படத்தில் நான் எடுத்த பயிற்சி தான். இந்த படத்தில் ஒரு ஃபிரேம் மாறினாலும் படம் புரியாது. அப்படிப்பட்ட ஒரு ஹைப்பர்லிங் படம்.

தயாரிப்பில் இருக்கும்போது சில பிரச்சினைகள் நடந்தது, அப்போது தேனப்பன் சாரிடம் சென்றேன். அவர் தான் இதை சுமூகமாக முடித்து வைத்தார். குப்பத்து ராஜா என்ற ஒரு படத்தை சரவணன் சார் எடுத்துக் கொண்டிருக்கும்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய முன் வந்தது பெரிய விஷயம். அது தான் படத்தின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை. இந்த படத்துக்கு சூரஜ் ஒரு பாட்டு போட்டுக் கொடுத்தார். இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் பாடலாக அது அமைந்திருக்கும். ஆனால் அது படத்தில் இல்லை, அந்த பாடலில் நான் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அடுத்து ஒரு கேங்க்ஸ்டர் படம் நடிச்சிருக்கேன், எல்லா வகையான படங்களிலும் நடிக்க விருப்பம் இருக்கிறது. என்னை ஒரு கூண்டில் அடைத்து விட வேண்டாம்.

இந்த விழாவில் நிர்வாக தயாரிப்பாளர் கர்ணா ராஜா, ஸ்டண்ட் சிறுத்தை கணேஷ், பாடலாசிரியர் சங்கீத், நடன இயக்குனர் ஜாய் மதி, நாயகி சின்னு குருவில்லா, எடிட்டர் ரிஷால் ஜெய்னி, கலை இயக்குனர் மோகன மகேந்திரன், நடிகர்கள் ஸ்ரீராம் கார்த்திக், கிஷோர், ரவி, இயக்குனர்கள் ராகேஷ், சினிஷ், எடிட்டர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Tamil Cinema News

ஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு

Published

on

soundarya-visakan-honeymoon

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, நடிகரும் தொழிலதிபருமான விசாகன் இருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் அவர்களது திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

திருமணத்திற்குப் பின் சௌந்தர்யா, விசாகன் தம்பதியினர் தேனிலவுக்காக வடக்கு ஐரோப்பாவில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்துக்குச் சென்றுள்ளனர்.

இது பற்றிய தகவலை சௌந்தர்யா புகைப்படங்களுடன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

Continue Reading

Tamil Cinema News

‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு

Published

on

ellam-mela-irukkuravan-parthuppan

விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் ராவுத்தர் மூவீஸ்.

விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான இப்ராகிம் ராவுத்தருக்குச் சொந்தமான நிறுவனம் அது.

அந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ எனும் படத்தை தயாரித்து வருகிறது.

இப்ராகிம் ராவுத்தரின் மகன் முகம்மது அபுபக்கர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கிறார்.

கதாநாயகனாக ஆரி நடிக்க, கதாநாயகியாக சாஷ்வி பாலா நடிக்கிறார்.

இப்படத்தின் முதல் பார்வையை நடிகர் விஷ்ணு விஷால் இன்று வெளியிட்டார்.

இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Continue Reading

Tamil Cinema News

எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்

Published

on

gv-prakash-new-movie

பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.

இந்த நிறுவனம் தற்போது சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இன்று துவங்கி  உள்ளார்கள்.

இதன் துவக்க விழா இன்று எளிமையாக ஒரு கோயிலில் நடை பெற்றது.

மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது.

எழில் அவருடைய பாணியிலான காமெடி படமாகத்தான் இந்தப் படத்தை இயக்க உள்ளாராம்.

மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

No feed items found.

Trending