Connect with us

Tamil Cinema News

‘சேது’ அப்பாவுக்கு, ‘வர்மா’ எனக்கு – விக்ரம் மகன் துருவ்

Published

on

dhruv launch news

தமிழ்த் திரையுலகத்தில் மேலும் ஒரு வாரிசு நடிகராக நடிகர் விக்ரமின் மகன் துருவ், ‘வர்மா’ படம் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.

தெலுங்கில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன் ரெட்டி’ படம்தான் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகிறது.

நாயகனாக அறிமுகமாகும் தன் மகன் துருவ்வை அவருடைய பிறந்த நாளில் அறிமுகம் செய்து வைத்தார் விக்ரம். அதோடு துருவ்வின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று ‘வர்மா’ படத்தின் டீசரையும் வெளியிட்டார்கள்.

யூ டியூபில் வெளியான ஒரு நாளிலேயே டீசர் 35 லட்சம் பார்வைகளைக் கடந்து வரவேற்பைப் பெற்றுள்ளது.

நேற்று நடந்த அறிமுக நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் பாலா, விக்ரம், துருவ், படத்தின் நாயகி மேகா சௌத்ரி, ரைசா வில்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய துருவ், “சிறு வயதிலிருந்தே பாலா மாமாவுடன் பழகியதால் நடிக்க பயப்படவில்லை. முதல் இரண்டு நாட்கள் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. பின்னர் நான் சொன்னது அவருக்குப் புரிந்தது, அவர் சொன்னது எனக்குப் புரிந்தது.

‘சேது’ படத்தின் மூலம் என் அப்பாவுக்கு உயிர் கொடுத்தவர் பாலா மாமா. ‘வர்மா’ படத்தில் எனக்கு உயிர் கொடுத்திருக்கிறார்,” என்றார்.

“என் மகன் துருவ் சினிமாவில் நடித்தால் பாலா இயக்கத்தில்தான் அறிமுகமாக வேண்டும் என்று இருந்தேன். பாலா இதுவரை ரீமேக் படங்களும் இயக்கியதில்லை, அறிமுக நடிகர் படத்தையும் இயக்கியதில்லை. துருவ்வுக்காக இவற்றையெல்லாம் செய்தார்,” என்றார்.

Tamil Cinema News

விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம் – பகல் கொள்ளை’

எஸ்.பி. ஜனநாதன் இயக்க, ஸ்ருதிஹாசன் நாயகி…

Published

on

லாபம்

விஜய் சேதுபதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தைத் தயாரித்த 7சிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், விஜய் சேதுபதியின் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிக்கும் படம் ‘லாபம்’.

அதன் டேக் லைன் ஆக ‘பகல் கொள்ளை’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

‘இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படங்களை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதிஹாசன் முதன்முறையாக நடிக்கிறார். இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஸ்ருதிஹாசன் தமிழில் நடிக்கும் படம் இது.

ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இமான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

இன்று காலை இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது.

சற்று முன்னர் இப்படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து படங்களை இயக்குபவரான ஜனநாதனின் இந்தப் பெயரும், அதற்கான டேக் லைனும் படம் வெளிவரும் போது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

 

Continue Reading

Tamil Cinema News

வில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு

Published

on

வில்லன் வேடத்தில் வெங்கட் பிரபு

பல படங்களில் நடித்த நடிகர் நிதின் சத்யா, ‘ஜருகண்டி’ படத்திற்குப் பிறகு அவருடைய ஷ்வேத் – எ நிதின்சத்யா புரொட்கஷன் ஹவுஸ் சார்பாக தயாரிக்கும் படத்தில் வைபவ் நாயகனாக நடிக்க வாணி போஜன் நாயகியாக நடிக்கிறார்.

ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வைபவை தெறிக்கவிடும் வில்லனாக இயக்குனர் வெங்கட்பிரபு நடிக்கின்றார். இவர் வில்லனாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய SG சார்லஸ் இயக்குனராக அறிமுகமாகிறார்.

தற்போது இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இப்படத்தின் முதல் பார்வை டைட்டில் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது.

Continue Reading

Tamil Cinema News

சிவா இயக்கத்தில் சூர்யா

Published

on

சிவா இயக்கத்தில் சூர்யா

‘சிறுத்தை, வேதாளம், விவேகம், விஸ்வாசம்’ படங்களை இயக்கிய சிவா அடுத்து சூர்யா நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

தெலுங்கில் 2008ல் வெளிவந்த ‘சௌர்யம், சன்கம்’ ஆகிய படங்களை இயக்கிய சிவா 2011ல் வெளிவந்த கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படத்தின் மூலம் தமிழில் இயக்குனர் ஆக அறிமுகமானார்.

அவரை தமிழில் இயக்குனராக அறிமுகப்படுத்திய ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்கு 8 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியானது.

இந்தப் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத் தயாரிப்பில் நடிக்கிறார் சூர்யா.

சூர்யாவின் 39வது படம் இது. சூர்யா நடித்துள்ள ‘என்ஜிகே, காப்பான்’ ஆகிய படங்கள் இந்த ஆண்டில் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. மேலும், சுதா கோங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தில் தற்போது நடித்து வருகீறார்.

சூர்யாவின் 39வது படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!