November 17, 2018

‘என்டிஆர்’ தெலுங்குப் படத்தில் வித்யா பாலன்

ஹிந்தித் திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் எனப் பெயரெடுத்தவர் வித்யா பாலன்.

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாக வேண்டியவர், சில காரணங்களால் அது நடக்காமல் போக ஹிந்தி சினிமா பக்கம் சென்று தற்போது முன்னணி நடிகையாகத் திகழ்பவர்.

ஸ்ரீகாந்த், த்ரிஷா நடித்து 2003ம் ஆண்டு வெளிவந்த ‘மனசெல்லாம்’ படத்தில் நடிக்க தேர்வாகி பின் நீக்கப்பட்டார். அடுத்து மாதவன், மீரா ஜாஸ்மின் நடித்த ‘ரன்’ படத்தில் நாயகியாகத் தேர்வாகி ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு பின் நீக்கப்பட்டார் என்று கோலிவுட் தகவல்.

அதன்பின் தமிழ்ப் படங்களில் நடிக்கவே மாட்டேன் என சபதம் எடுத்தவர் வித்யா பாலன் என்றும் பேச்சு உண்டு. தமிழில் பலர் நடிக்கக் கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை என்ற தகவல் இருக்கிறது.

பல வருடங்களுக்குப் பிறகு இப்போது என்டிஆர் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘என்டிஆர்’ படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். அந்தப் படத்தில் என்டிஆர் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடிக்க உள்ளார்.

படத்தின் நாயகன் பாலகிருஷ்ணாவின் இடைவிடாத முயற்சியால் வித்யா பாலன் நடிக்க சம்மதம் தெரிவித்தார் என தெலுங்குத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts