நயன்தாரா, காதல், நட்பு – விக்னேஷ் சிவன் புது விளக்கம்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகிகளில் நம்பர் 1 நாயகியாக இருப்பவர் நயன்தாரா. அவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் என கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இருவருமே காதலித்துக் கொண்டிருக்கிறோம் என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆனாலும், அவ்வப்போது விக்னேஷ் சிவன், தன் மனம் கவர்ந்த நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் நேற்று நட்பு தினத்தை முன்னிட்டு அவருடைய நெருங்கிய நண்பர்கள் சிலருடன் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களைப் பற்றிக் கூறியிருந்தார்.

அதில், நயன்தாராவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, “இந்தக் காதலில் நிறைய நட்பு இருக்கிறது. அதிகமான காதல் இந்த நட்பில் இருக்கிறது. இனிய நண்பர்கள் தினம், நயன்தாரா” என கூறியிருக்கிறார்.

 

Related Posts