October 19, 2018

விஜய் விருதுகள் விழா ஜுன் 16, 17ல் ஒளிபரப்பு

தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்று விஜய் விருதுகள்.

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் புதுப்பொலிவுடன் 10வது விஜய் விருதுகள் விழா ஜுன் 3ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த பலர் விருது விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி விஜய் டிவியில் வரும் ஜூன் 16 சனிக்கிழமை அன்று இரவு 8 மணிக்கும், ஜூன் 17 அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 3 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் விருதுகளுக்கான நடுவர்களாக நடிகை ராதா, இயக்குனர் அனுராக் கஷ்யப், இயக்குனர் K. S. ரவிகுமார் , இயக்குனர் பாக்யராஜ், நடிகர் மற்றும் இயக்குனர் யூகி சேது ஆகியோர் இருந்தனர்.

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், சந்தோஷ் நாராயணன், அனிருத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சாயிஷா, பிரியா பவானி சங்கர், அதிதி பாலன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி, துல்கல் சல்மான், கார்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர். நடிகர் சிவகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை திவ்யதர்ஷினி, கோபி, மகாபா ஆனந்த் ஆகியோர் தொகுத்து வழங்கியுள்ளார்கள்.

Related Posts