Connect with us

Television

விஜய் டிவியில் ‘எங்கிட்ட மோதாதே 2’

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘எங்கிட்ட மோதாதே’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மே 19 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

ஒவ்வொரு வாரமும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிவி சீரியல் நட்சத்திரங்கள் குடும்பமாக வந்து இந்த நிகழ்ச்சியில் போட்டியிட உள்ளார்கள்.

ராஜா ராணி, மௌன ராகம், சின்னத்தம்பி, பாரதி கண்ணம்மா மற்றும் பல தொடர்களிலிருந்து போட்டியிடப் போகிறார்கள்.

இந்த வாரம் ஈரமான ரோஜாவே மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர்களிலிருந்து வந்து போட்டியிட உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் நான்கு கலகலப்பான சுற்றுகள் உள்ளன. இதில் நட்சத்திரங்களின் ஆடல், பாடல், விளையாட்டு, நடிப்பு என பொழுதுபோக்காகவே சுற்றுகள் இருக்கும்.

இந்த நிகழ்ச்சியை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்க உள்ளார். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார் திவ்யதர்ஷினி.

நிகழ்ச்சி முழுவதிலும் ‘கலக்கப் போவது யாரு’ தீனா எல்லோரையும் கேலி செய்து கொண்டிருப்பார்.

நிகழ்ச்சியில் நகைச்சுவை நட்சத்திரங்களும் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

Television

மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி

Published

on

மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, நாளை இறுதிப் போட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சி மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை.

சினிமா, டிவியில் உள்ள பிரபலமான சில ஜோடிகளான மணிமேகலை – உசைன், நிஷா- ரியாஸ், சங்கரபாண்டியன் – ஜெயபாரதி, அந்தோணி தாசன் – ரீட்டா, பிரியா – பிரின்ஸ், சுபர்ணன் – பிரியா, திரவியம் – ரித்து, தங்கதுரை – அருணா, செந்தில் – ராஜலட்சுமி மற்றும் ஃபாரீனா – ரஹ்மான் ஆகிய ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டியாளர்களாக மணிமேகலை – உசைன், நிஷா- ரியாஸ், சங்கரபாண்டியன் – ஜெயபாரதி, அந்தோணி தாசன் – ரீட்டா, திரவியம் – ரித்து, மற்றும் செந்தில் – ராஜலட்சுமி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இறுதிப் போட்டியில் உள்ள இரண்டு சுற்றுகளில் இந்த ஜோடிகள் அவர்களது திறமையை வெளிப்படுத்த உள்ளார்கள். நாளை மே 19, ஞாயிறு மதியம் 3 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

நடிகைகள் விஜயலலட்சுமி, தேவதர்ஷினி, தொகுப்பாளர் கோபிநாத் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பங்கேற்றனர். இந்த இறுதிச்சுற்றில் நடிகை விஜயலலட்சுமி மற்றும் கோபி வெற்றியாளர்களை அறிவித்து முடிசூட்ட உள்ளனர்.

இறுதிப் போட்டியில் விஜய் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

Continue Reading

Television

பெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி

Published

on

பெப்பர்ஸ் டிவி - ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி

சினிமா என்பது மிகப்பெரிய கடல் மாதிரி. இதில் வெற்றிபெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. சினிமாவில் நுழைவதற்கு ஒரு லட்சம் பேர் ஆசைப்படலாம். ஆனால் இதில் ஆர்வத்துடன் நுழைபவர்கள் ஐம்பதாயிரம் பேர்தான்.

இதிலும் விடாமுயற்சியாக போராடி வாய்ப்பை பெறுகிறவர்கள் என்னவோ ஆயிரம் பேர் தான். இந்த ஆயிரம் பேரில், படம் எடுத்து, அந்தப்படமும் தங்குதடையின்றி ரிலீஸாகி மக்கள் மனதில் பதிகிறவர்கள் என பார்த்தால் வெறும் பத்து பேர் தான். இப்படி ஜெயித்தவர்களை கணக்கிட்டால் லட்சத்தில் பத்து பேர்தான் சினிமாவில் இன்னும் இருந்து வருகிறார்கள்.

இப்படி சினிமாவில் சாதனை புரிந்தவர்களை, அடுத்து அவர்கள் படம் ரிலீசாகும் அந்தந்த வாரங்களில் அவர்கள் கடந்து வந்த வெற்றிப்பயணத்தை முழுமையாக 30 நிமிடங்களில் சொல்லும் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சிதான் ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் அந்தந்த வாரங்களில் வெளியாகின்ற படத்தின் இயக்குனர், அந்தப் படத்தின் கதாநாயகன், நாயகி, இசையமைப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினருடன் கலந்து கொண்டு அந்தப்படம் உருவானது எப்படி, அதை படமாக்க அவர்கள் பட்ட சிரமங்கள், நல்லது கெட்டது மற்றும் அந்தப் படத்தின் மூலம் புதிதாக சொல்லவரும் விஷயம் என படத்தை பற்றிய சுவாரசியமான செய்திகளை பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி பெப்பர்ஸ் டிவியில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை சுவைபட தொகுத்து வழங்குபவர் சுமையா.

Continue Reading

Television

புதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி

Published

on

புதிய தலைமுறை டிவி - யூத் டியூப் நிகழ்ச்சி

ஒரு வாரத்தை அரைமணி நேரத்துக்குள் அடக்கி விடமுடியுமா ? முடியும் என சொல்கிறது புதிய தலைமுறை டிவியின் ‘யூத் டியூப்’ நிகழ்ச்சி.

வாராந்திர செய்திகளையும் நிகழ்வுகளையும் குட்டிக் குட்டிச் செய்தகளாக சுருக்கி ஒரே புட்டிக்குள் அடைத்து தருவதுதான் யூத் டியூப். குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோருக்கு வாரந்திர நிகழ்வுகளைக் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.

மனதில் நின்ற செய்திகள், வாரம் முழுக்க பரபரப்பாக இருந்த செய்திகள், மனதில் நின்ற காட்சிகள், மறக்க முடியாத காட்சிகள், மறந்து விடவேண்டுமென்று நினைக்கும் நிகழ்வுகள், செய்திகள், சாதனைகள், சோதனைகள், பாராட்டுகள், விமர்சனங்கள், என்று உள்ளூர் முதல் உலக நிகழ்வுகள் அனைத்தையும் தொட்டுக் கொடுக்கிறது இந்த நிகழ்ச்சி.

சுவையான காட்சி நறுக்குகளை வித்தியாசமான முறையில் கலந்து கொடுக்கும் இந்த நிகழ்ச்சி புதிய தலைமுறையில் சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கும், மறுஒளிபரப்பு ஞாயிறு இரவு 8:00 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

இந்நிகழ்ச்சியை கவின் மற்றும் மோகனா தொகுத்து வழங்குகிறார்கள்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!