January 22, 2019

விஜய் டிவியில் ‘ரெடி ஸ்டெடி போ’ சீசன் 2

விஜய் டிவியில் ‘ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சியின் சீசன் 2 வரும் ஞாயிறு, ஜனவரி 6ம் தேதி மதியம் 1 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த சீசனில் புதிய சுற்றுகளை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். பெண் போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி ஆட்டம், பாட்டம், விளையாட்டு என முற்றிலும் பொழுதுபோக்கு கலந்த ஒரு கேம் ஷோ.

ஒரு அணியில் மூன்று பெண்கள் வீதம் ஒவ்வொரு வாரமும் இரண்டு அணிகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும். அவர்களுக்கு வித,விதமான போட்டிகள் வைக்கப்படும்.

நான்கு சுற்றுகள் அடங்கிய இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது சுற்றின் முடிவில் எந்த அளி அதிகமான சுற்றுகளில் வெற்றி பெற்றுள்ளதோ அந்த அணி நான்காவது சுற்றுக்குத் தேர்வு செய்யப்படும்.

நான்காவது சுற்றுக்குத் தேர்வானவர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் அல்லது அவர்களை எதிர்த்து தோல்வியடைந்த எதிரணியுடன் விளையாடுவார்கள்.

இந்த சீசன் 2 நிகழ்ச்சியையும், முதல் சீசனை தொகுத்து வழங்கிய ரியோ மற்றும் ஆன்ட்ரூஸ் தொகுத்து வழங்குகிறார்கள்.

Related Posts