January 22, 2019

வாசுவும் சரவணனும் ஒண்ணா கலாய்ச்சவங்க…

‘விஎஸ்ஓபி’ என சுருக்கமாக எழுதினால் அது சரக்கின் பெயராக வருகிறது, எனவே ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என நீளமாக எழுதுவதே நல்லது.

‘அழகுராஜா’ படத்தில் ரசிகர்கள் தன்னை அவாய்ட் பண்ணதை உணர்ந்த இயக்குனர் ராஜேஷ் மீண்டும் பழைய ‘வெயிட்’டுடன் ‘வாசஒப’ படத்தில் களம் இறங்கியிருக்கிறாராம்.

“காதல், காமெடி, பிரண்ட்ஷிப் இதுதான் சார் நம்ம ஏரியா, நம்மகிட்ட இருந்து மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறாங்க. அதை செய்யறதுதான் நமக்கும் உத்தமமான விஷயம்,” என்கிறார்.

“வாசுவும் சரவணனும் ஸ்கூல்ல இருந்தே ஒண்ணா படிச்சி வளர்ந்தவங்க. இரண்டு பிரண்ட்ஸ் நிஜ வாழ்க்கையில ஒருத்தரை மற்றவர் எப்படி கலாய்ப்பாங்களோ அதை அப்படியே படத்துல வச்சிருக்கோம். இவங்க வாழ்க்கையில் இரண்டு பெண்கள் உள்ள வர்றாங்க, அதனால என்னென்ன பிரச்சனை வருதுங்கறதுதான் படத்தோட கதை.

படம் பார்க்கிற ஒவ்வொரு ரசிகருக்கும் நண்பர்களோட ஜாலியா கழிச்ச அந்த நாட்கள் கண்டிப்பா ஞாபகத்துக்கு வரும்,” என்கிறார் ராஜேஷ்.

பேசாம, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா கலாய்ச்சவங்க’ என பேரை வச்சிருக்கலாமோ…!!

 

Related Posts