Connect with us

Tamil Cinema News

ஜீ தமிழ் – பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்…

Published

on

yaan in zee tamil

மக்களின் ரசனைக்கேற்ற, எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை புதுமையாக ஒளிபரப்பி வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சி, தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்ப உள்ளது.

ஜனவரி 15, 2015 – வியாழக் கிழமை –  பொங்கல்

காலை 6 மணி – மங்கள இசை

பிரபல நாதஸ்வரக் கலைஞர் ஸ்ரீ விநாயகம் பங்கேற்று, நேயர்களை மகிழ்விக்க உள்ளார்.

காலை 6 30 மணி – குபேரன் கோவில்

குபேரன் கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளின் தொகுப்பு.

காலை 7 மணி – ஒளிமயமான எதிர்காலம்

ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் வழங்கும் ராசிபலன்களும், ஆன்மீகம் குறித்து கண்ணன் பட்டாச்சார்யா அவர்கள் நேயர்களுடன் கலந்துரையாடும் சிறப்பு நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது.

காலை 8 மணி – சிறப்பு அற்புதம் தரும் ஆலயங்கள்

சூரியபகவானுக்கு தென்னிந்தியாவில் அமைந்துள்ள ஒரே ஆலயமான கும்பகோணம் சூரியானார் கோவில் குறித்த சிறப்புக்கள் தொகுத்து வழங்கப்படவுள்ளது.

காலை 8 30 மணி – ஜீ தமிழ் 70 எம்எம்

இந்தாண்டு முழுவதும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள வெற்றித் திரைப்படங்கள் குறித்து அலசும் நிகழ்ச்சி.

காலை 9 மணி – கும்பல் ஆப் கேர்ள்ஸ், சிங்கிளா சித்தார்த்

கோலிவுட்டின் சாக்லேட் பாயான சித்தார்த் பங்கேற்று, பெண் ரசிககைளுடன் கலந்துரையாடுவதுடன், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார்.

காலை 11 மணி – என்றென்றும் புன்னகை – திரைப்படம்

அஹமத் இயக்கத்தில், ஜீவா, சந்தானம், வினய் கூட்டணியில் த்ரிஷா நாயகியாக நடித்த சூப்பர் ஹிட் படம்

பிற்பகல் 2 மணி – வட கறி – திரைப்படம்

ஜெய், ஸ்வாதி ரெட்டி நடித்த திரைப்படம்.

மாலை 5 மணி – வானவராயன் வல்லவராயன் – திரைப்படம்

கிருஷ்ணா, மகாபா ஆனந்த், மோனல் கஜ்ஜார் நடித்த திரைப்படம்.

இரவு 8 மணி – போடா போடி

முன்னணி தொகுப்பாளர்கள் அரவிந்த் மற்றும் சபர்ணா பங்கேற்கும் சிறப்பு கேம் ஷோ.

இரவு 9 மணி – பொன்மாலை பொழுதில்

பின்னனி பாடகர்கள் விஜய் பிரகாஷ், கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்கும் சிறப்பு மெலோடி இசைநிகழ்ச்சி.

ஜனவரி 16, 2015 – வெள்ளிக் கிழமை – மாட்டுப் பொங்கல்

காலை 6 மணி – மங்கள இசை

பிரபல நாதஸ்வரக் கலைஞர் ஸ்ரீ விநாயகத்னி வழங்கும் மங்கள இசை.

காலை 6.30 மணி – சிறப்பு கோமாதா பூஜை

இப்பெருநாளில் வளத்தையும், மகிழ்ச்சியும் கொண்டு சேர்க்கும் குங்கும மேரு அர்ச்சனையும், சிறப்பு கோமாதா பூஜையும் ஒளிபரப்பாகிறது.

காலை 7 மணி – ஒளிமயமான எதர்காலம்

ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் வழங்கும் ராசி பலன்களும், ஆன்மிக சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் கண்ணன் பட்டாச்சார்யாவின் ஓம்காரம் நிகழ்ச்சி.

காலை 8 ணி – ஜி.வி.பிரகாஷ் சிறப்பு நிகழ்ச்சி

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முககம் கொண்ட ஜீவி பிரகாஷ் உடன் ஒரு கலகல சந்திப்பு.

காலை 9 ணி – எங்க ஊரு சான்சே இல்ல…

தமிழகத்தின் ஐந்து பெருநகரங்களை சேர்ந்த 5 அணியுடன், பிரபல ஸ்டேன்ட் அப் காமெடியன்கள் இணைந்து நேயர்களை கலகலப்பாக்கும் நிகழ்ச்சி. இதன் மறுஒளிபரப்பு மீண்டும் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

காலை 11 மணி – ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் – திரைப்படம்

அருள் நிதி, பிந்து மாதவி நடித்த காமெடித் திரைப்படம்.

மதியம் 2 மணி – மஞ்சப் பை – திரைப்படம்

விமல், ராஜ்கிரண், லட்சுமி மேனன் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்.

மாலை 5 மணி – யான் – புத்தம் புதிய திரைப்படம்

ஜீவா, துளசி நடித்த புத்தம் புதிய திரைப்படம்

இரவு 8 மணி – போடா போடி

பிரபல தொகுப்பாளர்கள் அரவிந்த், சபர்ணா இணைந்து கலகலக்க வைக்கும் காமெடி கேம் ஷோ

Tamil Cinema News

அஜித் பட வெளியீடுகளும், 10ம் எண் சென்டிமென்ட்டும்…

Published

on

அஜித் பட வெளியீடுகளும், 10ம் எண் சென்டிமென்ட்டும்...

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் ரஜினிகாந்தின் வசூலையே முறியடித்தவர் என அஜித்தை அவரது ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

2019 ஜனவரி 10 அன்று வெளியான ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தின் வசூலை விட, அதே தினத்தில் வெளியான அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ அதிகமான வசூலைப் பெற்றது என்பதுதான் திரையுலக வட்டாரங்களில் சொல்லும் உண்மை.

அஜித் அடுத்து நடித்து வரும் ‘நேர் கொண்ட பார்வை’ படம் மே மாதம் 1ம் தேதி அஜித்தின் பிறந்த நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தை ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

கடந்த சில வருடங்களாக அஜித் நடித்து வெற்றி பெற்ற படங்கள் 10ம் தேதியில் வெளியான படங்களாக இருப்பதால், ‘நேர் கொண்ட பார்வை’ படத்தையும் 10ம் தேதியில் வெளியிடுகிறார்கள் என சொல்கிறார்கள்.

அஜித் நடித்து இந்த ஆண்டு வெளிவந்த ‘விஸ்வாசம்’ படம் ஜனவரி 10ம் தேதி வெளிவந்தது. 2015ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி வெளிவந்த ‘வேதாளம்’ படமும்,  2014ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி வெளிவந்த ‘வீரம்’ படமும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

அதே சமயம், 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி வெளிவந்த ‘விவேகம்’ படமும், 2015ல் பிப்ரவரி 5ம் தேதி வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படமும் தோல்விப் படங்களாக அமைந்தன.

அஜித் ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உள்ளவர். பொதுவாக, வியாழக்கிழமை சென்டிமென்ட் பார்ப்பவர். ஜோதிடத்தின்படிதான் அவர் பட முடிவுகளையும் எடுப்பார் என்று ஒரு தகவல் திரையுலகில் உண்டு.  இப்போது 10ம் எண் சென்டிமென்ட்டையும் பார்க்க ஆரம்பித்துள்ளார் என்கிறார்கள்.

Continue Reading

Tamil Cinema News

ராதாரவி அவதூறு பேச்சு, நயன்தாரா கண்டன அறிக்கை

Published

on

ராதாரவி அவதூறு பேச்சு, நயன்தாரா கண்டன அறிக்கை

நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா பற்றி அவதூறாகப் பேசியதாக கடந்த இரண்டு நாட்களாக கடும் சர்ச்சை எழுந்தது. அதைத் தொடர்ந்து அவர் சார்ந்த திமுக கட்சியின் தலைமை அவரைக் கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கியது.

இந்த விவகாரம் குறித்து திரையுலகப் பிரபலங்கள், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பலரும் ராதாரவிக்கு கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இது பற்றி நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கை…

“நான் மிகவும் அரிதாகவே பொது அறிக்கைகளை வெளியிடுகிறேன். ஏனெனில் நான் பேசுவதை விட என் வேலை பேச வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் சில நேரங்களில் நான் பேச வேண்டிய கட்டாயம் அமைந்து விடுகிறது. இன்று, என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும், ஆண்களின் பாலியல் தொல்லைகளை தாங்கிக் கொள்ளும் பெண்களின் போராட்டத்திற்காகவும் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன்.

முதலில், ராதாரவியின் தவறான பேச்சை கண்டித்து, விரைவாக நடவடிக்கை எடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். என் மனப்பூர்வமான நன்றிகள் சார்.

ராதாரவி மற்றும் அவரைப் போன்று பெண்களை இழிவாக பேசும் சிலருக்கும், உங்களையும் ஒரு பெண்மணி தான் பெற்றெடுத்தார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். பெண்களை தரக்குறைவாக பேசுவதன் மூலமும், அவர்கள் மீது எளிதாக பாலியல் கருத்துகளை சொல்வதன் மூலமும், இந்த மாதிரியான ஆண்கள் தங்களின் ஆண்மையை காட்டிக் கொள்கிறார்கள்.

பெண்களை இப்படி நடத்தும் இந்த மாதிரியான ஆண்கள் இருக்கும் குடும்பங்களில் வாழும் அனைத்து பெண்களை நினைத்தும் நான் மிகவும் வருந்துகிறேன். ஒரு மூத்த நடிகர் என்ற முறையிலும், கணிசமான அனுபவம் உடைய நடிகர் என்ற வகையிலும் திரு. ராதாரவி, இளைய தலைமுறைக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக அவர் ஒரு தவறான வழிகாட்டியாக நடந்து கொள்கிறார்.

பெண்களுக்கு இது மிகவும் கஷ்டமான காலம், பெண்கள் பொது வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் தங்களை தாங்களே நிலைநிறுத்தி கொண்டு, தகுதியின் அடிப்படையில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்தி கொள்கின்றனர். திரு. ராதாரவி போன்ற நடிகர்கள் சினிமாவில் மார்க்கெட் இல்லாத காரணத்தால், மலிவாக பேசி விளம்பரம் தேடிக் கொள்ளும் தந்திரங்களை நம்பியிருக்கிறார்கள்.

இந்த ஆணாதிக்க பேச்சுக்களில் மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய விஷயம் என்னவென்றால் அவரது இந்த மாதிரியான மலிவான பேச்சுக்களை மேடையின் கீழ் இருக்கும் பார்வையாளர்கள் சிலர் கைதட்டி, சிரித்து ரசிப்பது தான். இந்த மாதிரியான ஆபாசமான கருத்துக்களை பார்வையாளர்கள் ஊக்குவிப்பது தான் திரு. ராதாரவி போன்ற பேச்சாளர்கள் பெண்களுக்கு எதிரான நகைச்சுவையை தொடர்ந்து பேச தூண்டுகிறது.

ராதாரவி போன்றோரின் நடத்தையை தயவு செய்து ஊக்கப்படுத்த வேண்டாம் என நல்ல நோக்கம் உடைய குடிமக்கள் மற்றும் என் அன்பான ரசிகர்களை நான் கடுமையாக வலியுறுத்துகிறேன். என்றாலும் இந்த அறிவுறையோடு நிற்காமல், ராதாரவி பெண்கள், குழந்தைகள் மற்றும் குறிப்பாக என்னை பற்றி பேசிய தவறான பேச்சுகளுக்கு எதிரான எனது கண்டனம் மற்றும் எதிர்ப்புகளை நான் கடுமையாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

கடவுள் மிகவும் கருணையோடு எனக்கு அருமையான தொழில் வாய்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் என்னை மற்றும் என் நடிப்பை விரும்பும் ரசிகர்களை எனக்கு கொடுத்திருக்கிறார். எல்லா எதிர்மறையான கருத்துகளையும், அவதூறுகளையும் தாண்டி, சீதா, பேய், கடவுள், தோழி, மனைவி, காதலி என பன்முகத்தன்மை வாய்ந்த கதாபாத்திரங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன். அதன் மூலம் என் ரசிகர்களுக்கு அதிகபட்ச பொழுதுபோக்கை வழங்குவதே என் தலையாய நோக்கம்.

இறுதியாக, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு என் தாழ்மையான ஒரு கேள்வி: – சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி உள் புகார் குழுவை நீங்கள் நிறுவுவீர்களா? விஷாகா வழிகாட்டுதலின் படி உள் விசாரணையை ஆரம்பிப்பீர்களா??

மீண்டும் ஒருமுறை, இந்த எதிர்மறையான கட்டத்தில் எனக்கு ஆதரவாக இருக்கும், எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து நல்ல இதயங்களுக்கும் நன்றி.

இப்போது, வேலைக்கு திரும்புகிறேன்!

எப்போதும் கடவுளின் கருணை மற்றும் உங்கள் நிபந்தனையற்ற அன்புடன்!

என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Continue Reading

Tamil Cinema News

மே மாதம் வெளியாகும் ‘களவாணி 2’

Published

on

களவாணி 2 - புகைப்படங்கள்

வர்மன்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சற்குணம் தயாரித்து, இயக்கும் படம் ‘களவாணி 2’.

இப்படத்தில் விமல், ஓவியா, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு என முதல் பாகத்தில் நடித்தவர்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார்கள். மயில்சாமி உள்ளிட்ட மேலும் சில முக்கிய நடிகர்கள் படத்தில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த இரண்டாம் பாகம் முற்றிலும் புதிய கதைக்களத்துடனும், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடனும், அழுத்தமான கதையையும் கொண்டிருக்கிறதாம்.

துரை சுதாகர் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். ஆனாலும், அவரது கதாபாத்திரத்தின் குணாதிசயம் வழக்கமான வில்லன் கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது மற்றும் தனித்துவமானதாக உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

படத்தில் ஓவியாவின் கதாபாத்திரம் முந்தைய படங்களில், குறிப்பாக 90ML படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் உறுதி அளிக்கிறார்கள்.

‘ஓட்டு கேக்க வந்தாய்ங்களா’ பாடல் மிகவும் பிரபலமாகி இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல அரசியல் கட்சிகள் கூட அந்த பாடலைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

மே 2019ல் இப்படத்தை ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட உள்ளது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending